எக்காளப் பண்டிகைகள் FEAST OF THE TRUMPETS 64-07-19M பிரான்ஹாம் கூடாரம்,ஜெபர்ஸன்வில், இந்தியானா 1. நாம் தலைவணங்குவோம்: கர்த்தாவே, ஒரு முறை உமது அன்பார்ந்த சீஷர்கள், ''எங்களுக்கு ஜெபம் பண்ணப் போதிக்கவேண்டும்'' என்று கேட்டனர். நாங்கள் பரலோகத்தின் மகத்தான தேவனைக் காணும் போது, நாங்கள் எவ்வளவு குறைவுள்ளவர்கள் என்பதை உணருகிறோம். எனவே கர்த்தாவே, உமது ராஜ்யத்துக்கும் உமது ஊழியக்காரருக்கும் உபயோகமாயுள்ள காரியங்களுக்காக எங்கள்' இருதயங்களில் நாங்கள் ஜெபிக்க எங்களுக்குப் போதிப்பீராக. இங்குள்ள ஒவ்வொரு நபருடைய தேவைகளையும் நீர் அறிந் திருக்கிறீர். 2. இன்று காலை இந்த மேசையின் மேல் உறுமால்களும், கச்சைகளும், சரீரத்துக்கும் குடும்பப் பிரச்சினைகளுக்கும் உதவி செய் வதற்காக சிறு பார்சல்கள் வைக்கப்பட்டுள்ளன. நீரே தேவன், நீர் ஒருவர் மாத்திரமே உண்மையுள்ள தேவன். இவர்கள் ஒவ் வொருவரையும் சுகமாக்க வேண்டுமென்று உமது அருமை குமாரன் இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். இங்கு உறுமால் களையோ பார்சல்களையோ வைக்காத ஒரு சிலர் இங்கிருக்கலாம், அவர்கள் சுகம் பெற வேண்டிய அவசியம் இருக்கக்கூடும். 3. இந்த ஒலி நாடா உலகம் பூராவிலுள்ள தேசங்களிலுள்ள ஐனங்களை தங்கள் இல்லங்களில் அல்லது சபைகளில் சந்திக்கக் கூடும். கர்த்தாவே, இங்கு ஆராதனை நடக்கும்போது, அல்லது ஒலிநாடா கேட்கப்படும்போது-நாங்கள் எந்த நிலையில் இருக்க நேரிட்டாலும் - பரலோகத்தின் மகத்தான தேவன் தாமே எங்கள் இருதயங்களில் காணப்படும் உத்தமத்தை இன்று காலை நோக்கிப் பார்த்து, சுகம் தேவையுள்ளவர்களுக்கு சுகத்தையும், இன்னும் அவர்களுக்கு என்ன தேவையோ அவைகளையும் அளிப்பாராக. நடக்கப்போகும் இந்த ஆராதனையில் எங்களை ஆசிர்வதியும். உமது ராஜ்யத்தின் நிமித்தம், இதுவரை பேசாத விதத்தில் எங்கள் மூலம் பேசும். உமது பதிலுக்காக இயேசுவின் நாமத் தில் காத்திருக்கிறோம். ஆமென். 4. இன்று காலை மறுபடியுமாக சபை பில் இருப்பது நல்லது. ஒஹையோவிலிருந்து இங்கு வந்துள்ள சில நண்பர்களுடன் நான் பேசிக் கொண்டிருந்தேன்-முக்கியமாக, சில மாதங்களுக்கு முன்பு இரத்தப்புற்று நோயினால் மரித்துக் கொண்டிருந்தவளாக இங்கு கொண்டு வரப்பட்ட ஒரு சிறு பெண்ணிடம். அவளுடைய பெற்றோர் மிகவும் ஏழைகள். நமது ஆவணங்களுடன் வைக்கப் பட்டுள்ள அவளுடைய சாட்சியைப் படிக்க இன்று காலை எனக்கு நேரமில்லை. அவளுக்காக ஜெபம் செய்து மூன்று நாட்களுக்குப் பிறகு எடுக்கப்பட்ட அந்த சிறு பெண்ணின் புகைப்படம் அங்குள்ளது. அவள் உயிர் வாழ மருத்துவர்கள் மூன்று நாட்கள் மாத் திரமே தவணை கொடுத்திருந்தனர். ஆனால் மூன்று நாட்களுக்குப் பின்பு, சிறிதளவு புற்று நோயையும் கூட அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. எனவே அவள் மிதந்த மகிழ்ச்சி கொண்டவளாய் பள்ளிக்குப் போய்க் கொண்டிருக்கிறாள். அவள் இந்த அறையிலிருந்தபோது. நமது சபை உறுப்பினர்களும் அவளைக் கண்டு மகிழ்ந்திருப்பார்கள். 5 குடல்கள் வெளிப்புறமாக பிறந்த அந்த சிறு குழந்தையும் கூட. மருத்துவர்களால்... குடல்கள் அந்நிலையில் உருவாகியிருந்த காரணத்தால், அதை அதன் சரியான இடத்தில் வைக்க முடிய வில்லை. அந்த குழந்தை அப்பொழுது தான் பிறந்தது. எனவே அந்த சிறிய குடல்களைத் தொடுவதற்கு அவர்கள் பயந்தனர். இப்பொழுது அவனுக்கு ஒரு வயதாகிறது என்று நினைக்கிறேன். அவன் சாதாரண குடல்களுடன் உயிர் வாழ்ந்து கொண்டிருக் கிறான். எல்லாமே சரியாக உள்ளது. அது தேவனுடைய கிருடை மாத்திரமே. அவர் நமக்கு எவ்வளவு நல்லவராக இருக்கின்றார்! 6 இன்று நாங்கள் அறிவிக்க விரும்புகிறோம். அதாவது அடுத்த வாரத்தில் நான் சகோ. ஜோசப் போஸுடன் ஆப்பிரிக்காவிலுள்ள கென்யா, டாங்கனீகா என்னுமிடங்களுக்கு செல்ல திட்டமிட்டிருந்தேன். அங்கு நாங்கள் கூட்டங்களை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சென்ற வாரம் நமது மிஷினரிகளில் மூன்று பேர் கொலை செய்யப்பட்டனர்'' என்னும் தந்தி சகோ. போஸிடமிருந்து வந்துள்ளது. அங்கு ஒரு கிளர்ச்சி ஏற்ப்பட்டுள்ளது. கம்யூனிஸ்டுகள் சுதேசிகளுக்கு இரகசியமாக துப்பாக்கிகளைக் கொடுத்து உதவுகின்றனர். கம்யூனிஸ்டு சீனாவிலிருந்தும் ருஷியாவிலுமிருந்தும் மீன் கப்பல்கள் அங்கு வந்து சுதேசிகளுக்கு துப்பாக்கிகளை வழங்குவதாக செய்தி வந்துள்ளது. சுதேசிகள் அதை உபயோகித்து யாரை வேண்டுமானாலும் சுட வகையுண்டு. எனவே இந்த நேரத்தில் கூட்டங்களை வைப்பது சரியல்ல என்று அரசு தீர்மானித்துள்ளது. நான் போகவிருந்த அந்த வட்டாரத்தில் சகோ. போஸ் இந்த நேரத்தில் தன் பள்ளியையும் கூட திறக்க முடியாது என்று கேள்விப்படுகிறேன். அது ரத்து செய்யப்படவில்லை, அமைதி நிலவும் வரைக்கும் அது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 7 அநேக ஆண்டுகள் இங்கு வராத தென் ஆப்பிரிக்காவைச் சார்ந்த சகோ.சிட்னி ஜாக்சனையும், சகோதரி ஜாக்சனையும் நமது மத்தியில் இன்று காலை காண்பதில் மிக்க மகிழ்ச்சி. அவர் பேசினாரா? (சகோ.நெவில் ''ஆம்'' என்கிறார்-ஆசி). சென்ற முறை நான் தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றிருந்தபோது நடந்த கூட்டங்களில், இவர்கள் என் உண்மையான சகோதரனும், சகோதரியும், உடன் ஊழியருமாய் திகழ்ந்தனர். மீண்டும் என்றாவது ஒரு நாள் தேவனுடைய கிருபையினால் அங்கு செல்வேன் என்று நம்புகிறோம். ஏனெனில் அது தேவையாயுள்ளது. அங்கு மறுபடியும் செல்ல நான் ஒன்பது ஆண்டுகளாக முயன்று வருகின்றேன் ஆனால் அங்குள்ள ஸ்தாபனங்களின் காரணமாக, அவர்கள் என்னை அனுமதிக்க மறுக்கின்றனர். 8 எனவே அண்மையில் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி, "இழந்துபோகும் ஆத்துமாக்களின் இரத்தப்பழி என்மேல் இராமல் உங்கள் மேல் இருப்பதாக'' என்று கூறினேன். சில கால மாக தேவன் அங்குள்ள ஜனங்களின் மத்தியில் என் ஊழியத்தை உபயோகிக்க விரும்புகிறார் என்று நம்புகிறேன். ஆனால் ஸ்தாபனங்களுக்கிடையேயுள்ள கருத்து வேற்றுமை காரணமாக, அவர்கள் என்னை திரும்ப அனுமதிக்க மறுக்கின்றனர். பரவாயில்லை. கர்த்தர் அதைப் பார்த்துக் கொள்வார். 9 இன்று காலை நான் கூற விரும்புவது என்னவெனில், கர்த்தருக்கு சித்தமானால்... இந்த கூடாரத்தில் இன்றிரவு ஆராதனையை எடுத்துக்கொள்ள சகோ.நெவில் என்னைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கு நீங்கள் அழைக்கப்படுகின்றீர்கள். கர்த்தருக்கு சித்தமானால், அடுத்த ஞாயிறன்றும் இங்கிருப்பேன்; ஒருக்கால் அடுத்த இரண்டு மூன்று ஞாயிறுகள்- ஒழுங்கு செய்திருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டதன் விளைவாக. 10 இதையும் நான் கூற விரும்புகிறேன்--ஒருக்கால் இந்த சமயத்தில் ஏழு எக்காளங்களைக் குறித்து நான் பேசுவேன் என்று உங்களிடம் கூறியிருந்தேன். கட்டிடத்தில் போதுமான இடம் இல்லாத காரணத்தாலும், ''ஏர் கண்டிஷன்'' இயந்திரம் பொருத்தப்படாததனாலும் (போதிய காற்று அறைக்குள் இல்லை) நாம் எப்படி அவ்வாறு செய்யப்பொகிறோம் என்று வியந்தோம். பள்ளிக்கூடத்தை வாடகைக்கு எடுக்க நாங்கள் முயன்றோம். அது ஏர்கண்டிஷன் செய்யப்பட்டுள்ளது. அது அநேகம் பேரைக்கொள்ளும். மிகவும் அருமையான பள்ளிக்கூடம், ஆனால் எங்களுக்கு ஒரு இடமும் கிடைக்கவில்லை. அவர்கள் அடுத்த வாரம் தருவதாக கூறுகின்றனர். ஆனால் அடுத்த வாரம்.... பாருங்கள், உலகின் பல்வேறு பாகங்களிலிருந்து பிரதி நிதிகள் வருகின்றனர்; ஜமய்கா, தீவுகளிலிருந்து; தென்பாகத்திலிருந்தும் - தென் அமெரிக்காவிலிருந்தும்கூட, கனடா, மெக்ஸிகோ, தேசங்கள் முழுவதும். நாங்கள் - அறிவிப்புகளை திட்கட்கிழமை அனுப்பினோம். அது அவர்களுக்கு புதன் அல்லது வியாழன் வரை கிடைக்காது. அதன் பிறகு விட்டு விட்டு நடத்த வேண்டி வரும். அடுத்த வாரம் பள்ளிக்கூடம். நடக்கும் நேரமாதலால், ஒரு இரவு கூட்டத்தை நடத்தி விட்டு, பிறகு ஒரி ரண்டு இரவுகள் ஒய்வெடுத்துக் கொண்டு. மறுபடியும் கூட்டம் நடத்த வேண்டும்...அப்படி நம்மால் செய்ய முடியாது. உங்களால் அப்படி வந்து கொண்டிருக்க முடியாது. 11 ஏன் அப்படி என்று நான் வியந்து, ஊக்கமாக ஜெபித்தேன். அதன் பிறகு பிள்ளைகள் பன்ளிக்கூடம் செல்வதற்காக, நாங்கள் அரிசோனா திரும்ப வேண்டும். பிறகு நாங்கள்... நான் மனைவியிடம் பேசிக்கொண்டிருந்தேன்.... 12 நேற்று நான் அறைக்குள் சென்று, “ஆண்டவரே, நான் ஜெபத்தில் நிறைய வார்த்தைகள் உபயோகிக்காமல் இருக்கலாம். ஆனால் தேவனே, என் இருதயத்திலுள்ளதை தயவு கூர்ந்து புரிந்து கொள்ளும். எக்காளங்களைக் குறித்து பிரசங்கம் செய்வதற்கு எல்லாமே தடையாயுள்ள காரணம் என்ன?'' என்றேன். அவர் வந்து அதை வெளிப்படுத்தி தந்தார். இன்று காலை, அதன் காரணம் என்ன வென்பதைக் குறித்து உங்களிடம் பேச விரும்புகிறேன். 13 வேதாகமம் வைத்திருப்போர், முதலாவதாக லேவியராகமம் 23ம் அதிகாரத்துக்கு திருப்ப வேண்டுமென்று விரும்புகிறேன். 14 கர்த்தருக்கு சித்தமானால், பாளயத்துக்கு புறம்பே செல்லுதல் என்னும் பொருளின் பேரில் இன்றிரவு பேசலாமென்றிருக்கிறேன். அது சிறிய பிரசங்கமாயிருக்கும். நாளை வேலைக்கு செல்வதற்கென நீங்கள் வீடு திரும்ப உங்களுக்கு நேரமிருக்கும். 15 நகரத்துக்கு வெளியேயுள்ள மக்கள் இங்கு விஜயம் செய் துள்ளதைக் காண நாங்கள் மகிழ்ச்சியுறுகிறோம். எத்தனை பேர் நகரத்துக்கு வெளியேயுள்ளவர்கள்? தொண்ணூற்றைந்து சதவிகிதம், ஆம், சபையோரில் தொண்ணூற்றெட்டு சதவிகிதம். எனவே பாருங்கள், இது ஜெபர்ஸன்வில் மக்கள் அல்ல. ஜெபர் ஸன் வில்லுக்கு வந்துள்ள மக்கள். நாம் கர்த்தருடைய கிருபை யினால் இங்குள்ளோம். 16 இன்று காலை வேதாகமத்திலிருந்து மூன்று இடங்களில் வாசிக்க விரும்புகிறேன். ஒன்று வேவியராகமம் 23ம் அதிகாரத்தில் காணப்படுகின்றது, மற்றொன்று ஏசாயா 18, மற்றும் ஏசாயா 27 (குறித்துக் கொள்பவர்களாகிய உங்களுக்கு). 17 பிரசங்கம் செய்வதற்கு பதிலாக-கர்த்தருக்கு சித்த மானால் இன்றிரவு பிரசங்கம் செய்வேன்-ஆனால் இன்று காலை ஏழு எக்காளங்களின் பண்டிகை என்னும் பொருளின் பேரில் கற்பிக்கலாம் என்று எத்தனிக்கிறேன். இந்த மாதம் தான் ஏழு எக்காளங்களின் பண்டிகை...அது ஏழாம் மாதம். அப்படியானால்... லேவியரின் பிரமாணங்களின்படி எக்காளப்பண்டிகை ஜுலை 15ம் தேதி துவங்கும். 18 நீங்கள் தாள்களை வைத்துக் கொண்டு வேதவாக்கியங்களையும் பொருள்களையும் குறித்துக் கொள்ள விரும்பினால்...இந்த கூட்டத்தில் ஒன்றுள்ளது. அது மிகவும் உஷ்ணமாயுள்ளது. ஆனால் இத்தனை ஆண்டுகளாக நமக்கு பழக்கமாகி விட்டது. நாம் இந்த கட்டிடத்துக்குள் நுழையும்போது, நமக்கு காலம் என்பது முடிவடைந்து விடுகிறது என்றும், நான் அதிக நேரம் ஜனங்களைப் பிடித்து வைத்துள்ளதால், நாம் ஓரளவுக்கு நித்தி யத்தில் பிரவேசித்து விடுகிறோம் என்றும் யாராகிலும் நினைக்க வகையுண்டு. நான் அப்படி செய்ய வேண்டுமென்று நினைப்பதில்லை. இயேசுவின் வருகைக்கு நாம் மிக அருகாமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது என் கருத்து. எனவே ஜனங்கள் ஒன்று கூடியுள்ள போது, ஒவ்வொரு நிமிடத்தையும் நான் ஆதாயப்படுத்திக் கொள்ள வேண்டியவனா பிருக்கிறேன். 19 சற்று முன்பு நான் சாலையில் காரோட்டி வந்து கொண்டிருந்த போது (பிரசங்க பீடம் ஏறுவதற்கு முன்பு, சிறிது ஜெபம் செய்து விட்டு வரலாமென்று வெளியே சென்றிருந்தேன். உத்தம மான ஒவ்வொரு குருவானவரும் அப்படி செய்வதுண்டு) நான் இவ்வாறு நினைத்தேன்: "பாருங்கள், நாம் ஒன்று கூடும் போது, நமக்கு மிகவும் மகத்தான தருணம் உள்ளது. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பல்வேறு பாகங்களிலிருந்து ஜனங்கள் நூற்றுக் கணக்கான மைல்கள் பிரயாணம் செய்து வந்து, இங்கு ஒன்று கூடி அமர்ந்துள்ளனர். வார்த்தையில் ஐக்கியங்கொள்ள நாம் 'ஒன்று கூடுகிறோம். ஆனால் விரைவில் ஒரு நேரம் வரப்போகிறது . அப்பொழுது இது ஞாபகார்த்தத்துக்குரிய ஒன்றாகிவிடும்'', அது உண்மை. இப்படிப்பட்ட நேரங்கள் நம்மை விட்டு எடுபடும், எனவே ஒவ்வொரு நிமிடத்தையும் முக்கியமானதாகக் கருதி, நமக்குச் செய்யத் தெரிந்த எல்லாவற்றையும் நாம் செய்ய வேண் டும். உஷ்ணத்தால் இன்று காலை நாம் அவதியுறும் இந்நேரத்தில் இதை யோசித்துப் பாருங்கள். ஒவ்வொரு மனித உடலும் உஷ்ணத்தை உற்பத்தி செய்யும் 'டைனமோ' (dynamo) வாக உள்ளது என்பது உங்களுக்குத் தெரியும். எனவே இந்த உஷ்ணம் உங்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும், ஆனால் நீங்கள் வார்த்தையைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். நாம் படிக்கும் முன்பு, ஜெபம் செய்வோம்: 20 சுர்த்தாவே, கைகளை அசைக்கக் கூடிய இங்குள்ள எவரும் வேதாகமத்தின் பக்கங்களைத் திருப்ப முடியும். ஆனால் அதை திறக்கக்கூடிய ஒருவர் இன்று காலை எங்கள் மத்தியில் இருக்கிறார். அவர் தான் எங்கள் மத்தியிலுள்ள மகத்தான பரிசுத்த ஆவி. கர்த்தாவே, நாங்கள் வார்த்தையைப் படிக்கும்போது, எம்மாவூருக்குப் போய்க்கொண்டிருந்த சீஷர்களுக்கு நீர் வேதவாக்கியங்களை விளக்கிக் கொடுத்த விதமாக, எங்களுக்கும் அதை திறந்து தாரும். நாங்களும் இவ்விடம் விட்டுச்செல்லும்போது, எம்மா வூரிலிருந்து எருசலேமுக்குத் திரும்பி வந்து கொண்டிருந்த சீஷர்கள், “வழியிலே அவர் நம்முடன் பேசினபோது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்து விட்டு எரியவில்லையா?'' என்று கூறினவிதமாக, கூற அருள் புரியும். இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 21 வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து நாம் எழுந்து நிற்போம். இன்று காலை, என்னுடைய பொருள் 'எக்காளப் பண்டிகை'' என்பதாம். இப்பொழுது நான் லேவியராகமம் 23ம் அதிகாரம் 23ம் வசனத்திலிருந்து வாசிக்க விரும்புகிறேன். பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்ல வேண்டியது என்ன வென்றால்: உங்களுக்கு ஏழாம் மாதம் முதலாந்தேதி எக்காளச் சத்தத்தால் ஞாபகக்குறியாகக் கொண்டாடுற பண்டிகை என்கிற சபை கூடும் பரிசுத்த ஓய்வுநாளாய் இருப்பதாக. லேவி. 23: 23-24 22 இப்பொழுது ஏசாயாவின் புத்தகம், 18ம் அதிகாரம், முதலாம் வசனம் தொடங்கி (இது அதை ஒன்றாக இணைக்கிறது). எத்தியோப்பியாவின் நதிகளுக்கு அக்கரையிலே நிழலிடும் செட்டைகளுடையதும்; கடல் வழியாய்த் தண்ணீர்களின் மேல் நாணல் படகுகளிலே ஸ்தானாபதிகளை அனுப்புகிறதுமான தேசத்துக்கு ஐயோ! வேகமான தூதர்களே, நெடுந்தூரமாய்ப் பரவியிருக்கிறதும், சிரைக்கப்பட்டதும், துவக்க முதல் இது வரைக்கும் கெடியாயிருந்தும், அளவிடப்பட்டதும், மிதிக்கப்பட்டதும், நதிகள் பாழாக்குகிறதுமான ஜாதியண்டைக்கும் போங்கள். பூச்சக்கரத்தில் வாசமாயிருக்கிறவர்களும், தேசத்துக்குடிகளுமாகிய நீங்களெல்லாரும், மலைகளின் மேல் கொடியேற்றப்படும் போது பாருங்கள், எக்காளம் ஊதப்படும் போது கேளுங்கள். ஏசா. 18: 1-3 மற்றும் ஏசாயா 27: 12, 13 வசனங்கள்: அக்காலத்திலே, கர்த்தர் ஆற்றங்கரையின் விளைவு தொடங்கி எகிப்தின் நதிமட்டும் போரடிப்பார்; இஸ்ரவேல் புத்திரரே, நீங்கள் ஒவ்வொருவராய்ச் சேர்க்கப்படுவீர்கள், அக்காலத்திலே பெரிய எக்காளம் ஊதப்படும்; அப்பொழுது, அசீரியா தேசத்திலே சிதறடிக்கப்பட்டவர்களும், எகிப்து தேசத்திலே துரத்திவிடப்பட்டவர்களும் வந்து, எருசலேமிலுள்ள பரிசுத்த பர்வதத் திலே கர்த்தரைப் பணிந்து கொள்ளுவார்கள். ஏசா. 27: 12-13 நாம் மறுபடியும் ஜெபம் செய்வோம்: 23 கர்த்தாவே, எங்கள் இருதயங்களுக்கு இந்த வார்த்தை களை ஆசிர்வதித்து தாரும். எங்கள் சிந்தனைகளும், எங்கள் தியானமும் உமது கட்டளையின்படி இருப்பதாக. இயேசுவின் நாமத்தில். ஆமென் (நீங்கள் உட்காரலாம்). 24 பல்வேறு இடங்களிலிருந்து வந்துள்ள பல்வேறு ஜனங்கள் கொண்டதும், தான் நேசிக்கிறதுமான தன் சபைக்கு, ஒரு போதகர் அநேக காரியங்களைக் கூற விருப்பப்படுவார். ஆனால் நேரம் போதாததன் காரணமாக, அது அவரால் இயலவில்லை. 25 இந்த பொருளை அணுகும் இந்நேரத்தில், நீங்கள் சுயாதீன மாக இருக்க விரும்புகிறேன். நான் உள்ளே வந்தபோது, உங்களில் அநேகர் நின்று கொண்டிருந்தீர்கள். கூடங்கள் நிரம்பி யுள்ளன. கதவுகளின் வெளியிலும், முன்பக்கத்திலும், கட்டிடத் தைச் சுற்றிலும், சுவர்களைச் சுற்றிலும் ஜனங்கள் நின்று கொண்டிருக்கின்றனர். எனவே இப்பொழுது நீங்கள் இடம் மாற்றிக் கொள்ள விரும்பினால். அது நன்றாயிருக்கும். 26 இப்பொழுது, எக்காளப்பண்டிகை. இது இஸ்ரவேலர் ஒன்று சேருவதாகும். எக்காளப்பண்டிகையின் போது அவர்கள் ஒன்று கூடினர். சில நாட்களாக நான், வெளிப்படுத்தின விசே ஷத்தில் காணப்படும் ஏழு எக்காளங்களைக் குறித்து பேசவேண்டு மென்று மனதில் எண்ணியிருந்தேன். ஆனால் இம்முறை அதைக் குறித்து பேசாததன் உண்மையான காரணத்தை உங்களிடம் எடுத்துரைக்க விரும்புகிறேன். இப்படிப்பட்ட காரியங்களைக் குறித்து இம்முறை பேசுவதற்கு பரிசுத்த ஆவியானவர் என்னை அனுமதிக்காததே அதன் காரணம். அதிகம் படித்த மேதாவிகளுக்கு இது ஒருக்கால் சிறு பிள்ளைத்தனமாக தென்படலாம், ஆனால் கிறிஸ்தவனுக்கோ அது வித்தியாசமாயுள்ளது. நாங்கள் பரிசுத்த ஆவியின் வழி நடத்துதலை மாத்திரமே பின்பற்றுகிறோம். 27 நான் ஏழு சபை காலங்களைக் குறித்து பிரசங்கித்த போது கவனித்தேன். அது தேவன் சபைகளுக்கு. என்ன செய்யப் போகி றார் என்பதன் மாதிரியாக அல்லது முன்னறிவிட்டாக அமைந்தது அது சபைகளை அதன தன் ஸ்தானத்தில் பொருத்தியது. வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தின் முதல் மூன்று அதிகாரங்கள் சபைகளுக்கு நேரிடுபவைகளை வெளிப்படுத்துகின்றன. பிறகு வெளிப்படுத்தல் 4ம் அதிகாரத்திலிருந்து 19ம் அதிகாரம் வரைக்கும் சபை காணப்படவேயில்லை. வெளிப்படுத்தல் 4ம் அதிகாரத்தில் சபை எடுக்கப்பட்டு, 19ம் அதிகாரத்தில் அது திரும்பி வருகின்றது- மணவாளனும் மணவாட்டியும் ஒன்றாக பூமிக்கு வருகின்றனர். அதன் பிறகு 19ம் அதிகாரத்திலிருந்து கடைசி அதிகாரமாசு 22ம் அதிகாரம் வரைக்கும், ஆயிரம் வருட அரசாட்சியைக் குறித்தும் அதைத் தொடர்ந்து நடப்பவைகளைக் குறித்தும், 4 முதல் 19 அதிகாரங்களில், தேவன் இஸ்ரவேலருடன் ஈடுபடுகின்றார். 28 சபையைக் குறித்து வெளிப்படுத்தல் புத்தகத்தில் கூறப் பட்டவைகளை நாம் பிரசங்கித்து முடித்த போது (அந்த ஏழு சபைகளுக்கு தேவன் என்ன செய்தாரென்று. அவை துவக்க நிலையில் அல்லது நிழலாக ஆசியா மைனரில் அமைந்திருந்தன), பரிசுத்த ஆவியானவர் எவ்வாறு தமது சபையை சரித்திரத்தில் நடத்தி வந்தார் என்னும் இரகசியங்களை நமக்கு வெளிப்படுத்தி, திறந்து காண்பித்தார். ஏழு சபை காலங்களைக் குறித்த ஒலி நாடா உங்களிடம் இல்லையென்றால், அதை வாங்கிக் கேட்பது நல்லது. விரைவில் அது புத்தக வடிவில் வெளி வரும்.. 29 அதை அதனுடன் முடித்துக்கொண்டு, சற்று கழிந்து' முத்திரைகளின் பேரில் பிரசங்கிக்கலாம் என்று எண்ணினேன். முத்திரைகள் என்னவென்று எனக்கு அப்பொழுது தெரியாது. மற்ற போதகர்களைப் போல நானும் மற்றவர்கள் கூறினதைப் படித்து அதை பெரும்பாலும் நம்பி, என் சொந்த அபிப்பிராயத்தைக் கொண்டிருந்தேன். திரு.உரியா ஸ்மித் எழுதின புத்தகத்தை நான் படித்திருக்கிறேன். அவர் ஏழாம் நாள் ஆசரிப்போரின் ஆசிரியர். முத்திரைகளைக் குறித்த அவருடைய கருத்தை நான் படித்திருக்கிறேன். திரு. லார்கின் எழுதின புத்தகத்தையும் நான் படித்திருக்கிறேன். ஓ, பல்வேறு புத்தகங்களையும் அவையளித்த வர்ணனைகளையும் நான் படித்ததுண்டு, ஆனால் சிற்சில இடங்களில் என் கருத்து வித்தியாசமாக அமைந்திருந்தது. ஒருமுறை, குதிரை சவாரி செய்யும் நான்கு பேர்களைக் குறித்து நான்கு பொருள்களாக நான்கு இரவுகள்- ஒவ்வொரு இரவும் குதிரை சவாரி செய்யும் ஒருவரைக் குறித்து- பேச முயன்றேன். ஆனால் அதற்கு முன்பு, எனக்கு ஒரு தரிசனம் அளிக்கப் பட்டு (உங்கள் எல்லாருக்கும் தெரிந்திருக்கிறபடி, அது ஒலி நாடா வில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐயன்மீர், இதுவா சமயம்?) நான் அரிசோனாவிலுள்ள டூசானுக்கு செல்ல வேண்டுமென்றும், அங்கு வனாந்தரத்தின் பின் பாகத்தில் (மலையின் மேல், சகோதரர் சிலருடன் நான் இருந்தபோது), ஒரு பெரிய வெடி உண்டாகும் என்றும் எனக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது ஏழு தூதர்கள் இறங்கி வந்தனர். அதுவே என் வாழ்க்கையின் முடிவு என்று நான் நினைத்து, என் மனைவியிடம், பில்லியைப் பார்த்துக் கொள்ள வேண்டுமென்றும், நாம் மறுபடியும் மறு பக்கத்தில் சந்திக்கும் வரைக்கும், மற்ற பிள்ளைகளின் விஷயத்தில் அவள் என்ன செய்ய வேண்டுமென்றும் ஆலோசனை கூறினேன். 30 'பின்பு ஒரு நாள் சபீனோ மலைக்கணவாயில், தேவன் அதிகாலையில் என்னை அங்கு அழைத்தபோது, நான் கைகளை மேலேயுயர்த்தி ஜெபம் செய்து கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு பட்டயம என் கைகளில் விழுந்தது. அது உங்களுக்கு தெரியும். நான் அங்கு நின்று கொண்டு அதை பார்த்தேன். என் கை இப்பொழுது இருப்பது போன்றே இயற்கையாக இருந்தது. அதன் அர்த்தம் என்னவென்று எனக்குப் புரியவில்லை. அது என்னை விட்டு சென்றது. அப்பொழுது ஒரு சத்தம். இது ராஜாவின் பட்டயம்'' என்றது. பின்பு கர்த்தருடைய தூதன் அதை வெளிப்படுத்தித் தந்தபோது, அது என் கரத்தில் தேவனுடைய வார்த்தை என்றறிந்தேன். 31 இது நிகழ்ந்தவுடனே, கர்த்தருடைய தூதர்கள் பிரத்தியட்சமாகி, ஏழு முத்திரைகளின் இரகசியத்தை வெளிப்படுத்தினர். நான் ஜெபர்ஸன் வில்லுக்குத் திரும்பிச் சென்று ஏழு முத்திரைகளைப் பிரசங்கிக்க வேண்டுமென்று கட்டளையிடப்பட்டேன் . நான் இதுவரை ஆவியின் ஏவுதலினால் எதையாகிலும் கூறியிருந்தால், அது இது தான். அங்கு கர்த்தருடைய தூதன் எங்களை சந்தித்து... வேதாகமம் ஒரு புது வேதாகமமாக ஆனது. சீர்திருத்தக்காரர்களும் மற்றவர்களும் விட்டு விட்ட அனைத்தையும் அது திறந்து வெளிப்படுத்தித் தந்தது, அது இயேசு கிறிஸ்துவின் முழுமையான வெளிப்பாடு. அது எங்களுக்கு முழுவதும் புதிதாயிருந்தது. ஆனால் வேதவாக்கியங்களுடன் அது பிழையின்றி அப்படியே பொருந்தினது. வார்த்தை எப்பொழுதுமே அவ்வாறு இருந்து வந்துள்ளது. நான் அதிகமாக ஆவியால் ஏவப்பட்டு நடத்தப்பட்டேன். 32 நான் ஏழு எக்காளங்களைக் குறித்து பிரசங்கிக்க வேண்டிய கட்டத்துக்கு வந்தபோது, 'நான் ஒன்றுமே யோசிக்க மாட்டேன். நான் நேரம் வரும் வரை காத்திருப்பேன். அவர் அதை எனக்கு வெளிப்படுத்தி தரட்டும்'' என்று எண்ணினேன். நேற்று நான் அறைக்குள் சென்று (மன்னிக்கவும், அது நேற்று முந்தின நாள் நான் அறைக்குள் சென்று அதை புரிந்து கொள்ள முற்பட்டது) ஏனென்று வியந்தபோது, அங்கு பரிசுத்த ஆவியானவர் அதை திறந்து, இந்த நேரத்தில் சபைக்கு அது உபயோகமல்ல, ஏனெனில் அதற்கும் ' சபைக்கும் எவ்வித தொடர்புமில்லை என்பதைக் காண்பித்தார். 33 கிறிஸ்துவைக் குறித்து மறைந்திருந்த இரகசியங்கள் ஏழு . முத்திரைகளின் மூலம் முழுவதுமாக வெளிப்பட்டன. முதலாவதாக ஏழு சபையின் காலங்களை அது வெளிப்படுத்தி, காலங்களைத் திறந்து கொடுத்து. அவைகளை வரலாற்றிலும் வேதத்திலும் அதன் ஸ்தானத்தில் பொருத்தினது. நாம் கடைசி சபையின் காலமாகிய லவோதிக்கேயா சபையின் காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதை அறிந்து கொண்டோம். முதலாம் சபை முதல் உள்ள எல்லா சபை காலங்களிலும் இதுவே மிகவும் கேடான காலம்...எபேசு சபை மகத்தான சபை காலம். 34 பரிசுத்த ஆவியானவர் எனக்கு இங்கு ஒரு தரிசனத்தை -அருளி, என்ன நடக்கும் என்பதை நான் அறிந்தவனாய், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதை நான் கரும்பலகையில் வரைந்து காண்பித்தேன் (இதோ அந்த வரைபடம் இங்கே தொங்கிக் கொண்டிருக்கிறது). வெளிச்சம் எவ்வாறு பூமியில் மங்கிக் கொண்டிருக்கிறது என்று காண்பித்தேன். அதே விதமாக, சுவிசேஷமாக இவ்வுலகிற்கு வந்த ஒளி சற்று பிரகாசித்தும் பின்பு மறைந்தும் வருகிறது. அதை வரைந்த அந்த நேரத்தில் அதன் அர்த்தம் என்னவென்றும் அது எப்படியாகுமென்றும் நான் - அறிந்திருக்கவில்லை. ஆனால் அந்த பிரம்மாண்டமான --சபைகளின் ஐக்கிய உலகம் ரோமாபுரியுடன் சந்திப்பு வைத்துக் கொண்டிருந்தது. ஸ்தாபனங்களுக்கெல்லாம் தாயாகிய ரோமாபுரி...வரலாற்றிலேயே முதன் முறையாக போப்பாண்டவர் வாடிகன் நகரத்தை விட்டு எருசலேமுக்கும் மற்றவிடங்களுக் கும் சென்றார். நமது மார்க்கம் அனைத்துக்கும் பழைமை இருப்பிடமாக விளங்குவது எருசலேமே. பழமை இருப்பிடமாக விளங்கும் இந்த ஸ்தலத்துக்கு, எல்லா காலங்களிலும் சபைக்கு மிகப்பெரிய சத்துருவாக விளங்கி வரும் ரோமாபுரியிலுள்ள போப்பாண்டவர், ரோமாபுரியை விட்டு பாலஸ்தீனாவுக்கு-எருசலேமுக்கு- செல்கின்றார். 35 நாம் காண்கிறபடி, எனக்கு கல்வியறிவு இல்லா தபடியினா லும், பேசும்போது சொற்களை எவ்வாறு உபயோகிப்பது என்று எனக்குத் தெரியாத காரணத்தாலும், நான் எப்பொழுதுமே இயற்கையின் உதாரணங்களையும் மாதிரிகளையும் வைத்து கற்பித்து வந்திருக்கிறேன். இயற்கை இயற்கைபைத் தொடரும். இயற்கை தேவனால் உண்டானது. 36 நீங்கள் நேரத்தை எடுத்துக் கொண்டு...வயல் வெளியி'லுள்ள ஆடுமாடுகள் வயலின் ஒரு மூலையில் ஒன்றாக கூடி ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், நீங்கள் தண்ணீரி லிருந்து உங்கள் தூண்டில் முள்ளை வெளியே இழுத்துப் பாருங்கள். மீன் ஒருக்காலும் அகப்படாது. நீங்கள் அந்த நேரத்தில் மீனைப் பிடிக்கவே முடியாது. பாருங்கள்? ஆடுமாடு கள் அந்தநேரத்தில் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கின்றன (நீங்கள் தூண்டில் முள்ளை மீன்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் ஆற்றுப் படுக்கையின் ஆழம் வரைக்கும் போட்டாலொழிய). ஆனால் ஆடுமாடுகள் மேயப்போகும் போது, கவனியுங்கள்! ஆடுமாடுகள் ஓய்வு பெறும் அதே நேரத்தில் பறவைகளும் இரை தேடாமல் மரங்களை அடைகின்றன. பாருங்கள? அது இயற்கை. அவையனைத்தும் ஒன்றாக இணைகின்றன. அந்நேரத்தில் தேனீக் களும் பூக்களின் மேல் ரீங்காரம் செய்து கொண்டிருக்கும், ஆனால் தேனைச் சேகரிக்காது. இயற்கை அனைத்தும் ஒன்றாக இயங்குகின்றது. 37 ஒரு மரம் ஒரு இலையை உதிர்க்கும் போது, வெகு விரைவில், அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இலைகள் அனைத்தும் மரத்தி லிருந்து உதிர்ந்து விடும், மரத்தின் ஜீவன்-சத்து- வேர்களுக்குள் சென்றுவிடும். இலைகள் தரையின் மேல் உதிர்ந்து அழுகிப்போகும். இலைகளிலுள்ள கால்சியம், பொட்டாஷ் போன்றவை தரையில் மக்கிப்போகும். என்ன நேர்ந்தது? மரத்திலிருந்த சத்து அதற்கு முன்பாக வேர்களுக்குள் சென்று, மீண்டும் தன்னை மரத்தில் உறிஞ்சிக்கொண்டு, மரத்தில் இலைகள் தோன்றச் செய்யும். அது மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் என்னும் கட்டங்களாம். 38 இயற்கை அனைத்துமே...சந்திரன் சூரியனின் மனைவி, அது சூரியனைக் காட்டிலும் குறைந்த ஒளியை அளிக்கிறது. சூரியன் மறைந்தவுடனே , சூரியன் இல்லாத போது, சந்திரன் பூமிக்கு ஒளியைப் பிரதிபலிக்கிறது. அது சபைக்கு அடையாளமாயுள் ளது. சபையின் பழைய காலத்து சத்துருவான போப்பாண்டவர் புறப்பட்டு, சபையின் இருப்பிடமாகிய எருசலேமை வந்தடை யும்போது (அது புதிய எருசலேமும் பழைய எருசலேமும்), அவர் அவ்வாறு செய்வதற்கு முன்பே, சந்திரன் முழுவதுமாக இருளடைந்ததை நாம் கவனிக்கிறோம். 39 சந்திரன் எவ்வாறு வெளிச்சத்திலிருந்து இருளாக மாறினது என்பதைக் குறித்த செய்தியை செய்தித்தாள்கள் தேசம் முழுவதிலும் பரப்பின, அதை நாம் பலகையிலும் வரைந்து அது நம்மிடையேயுள்ளது. வானங்களில் சந்திரன் படிப்படியாக இருளடைந்த அதே காட்சியை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் வரையும்படி பரிசுத்த ஆவியானவர் செய்தார்- இருள் எவ்வாறு மூடினது என்பதை காண்பித்தார்!...ஆறு படங்கள் வரைந்து முடிந்தவுடனே, நான் ஏழாம் படத்தை வரைந்தேன். ஏனெனில் ஏழாம் சபையின் காலத்தின் போது, மிகக் குறைந்த ஒளி மாத்திரமே உள்ளது...அங்கு தான் இயேசு வாசற்படியில் நின்று கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால் அது முழு இருளுக்குள் சென்று விடுகிறது. இவை சத்தியம் என்பதை உறுதிப்படுத்த என்னே ஒரு பிரதிபலிப்பு! அது தேவனிடத்தி லிருந்து நேரடியாக வந்த ஒரு செய்தி!' அவர் முதலில் தமது வார்த்தையினால் அதை உறுதிப்படுத்தி, பின்பு மேடையின் மேல் ஆவியின் மூலம் உறுதிப்படுத்தி, முடிவில் வானங்களில் அதை வெளிப்படுத்திக் காண்பித்தார். 40 அதில் எந்த ஒரு தவறும் இல்லவே இல்லை. முத்திரைகளும் சபை காலங்களும் பிழையின்றி ஒன்றோடொன்று இணைகின்றன என்பதை தேவன் , நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இக்காலத்தில், இயற்கைக்கு மேம்பட்ட அடையாளங்களினாலும் அற்புதங்களி னாலும், வார்த்தையினாலும், வரலாற்றினாலும் உறுதிப்படுத்தி தந்து, அவைகளை ஒருங்கே இணைத்துக் காண்பித்தார். 41 சபைகளுக்கு இதை புரிந்து கொள்வதென்பது கடினம். ஸ்தாபனங்களுக்கு இதை புரிந்து கொள்ளவதென்பது கடினம். நாம் ஜனங்களை நோக்கி கூச்சலிட்டு அவர்களைக் கடிந்து கொள் கிறோம் என்று அவர்கள் கருதுகின்றனர். நாம் அவர்களை நோக்கி கூச்சலிடுவகில்லை, அவர்களை எச்சரிக்கவே முயல்கிறோம். அவர் களிடம் பொல்லாகவர்களாக இருக்க வேண்டுமென்பதற்காக அல்ல, அவர்களைப் பொல்லாங்கினின்று விடுவிக்கவே நாம் முயல்கிறோம். ஸ்தாபனங்களிலுள்ள ஜனங்கள் அல்ல, அவர்கள் சேர்ந்துள்ள அந்த ஸ்தாபனங்களின் முறைமையே அவர்களைப் பாழாக்கி விடுகின்றன. 42 நேர்மையான, உத்தமமான மக்கள் கத்தோலிக்கரிலும், பிராடெஸ்டெண்டுகளிலும், யூதமார்க்கத்திலும், இன்னும் மற்ற ஸ்தாபனங்களிலும் உள்ளனர். அவர்கள் மானிடர்...கெட்ட பெண்களாக இருப்பதற்காக கன்னியாஸ்திரீகள் (nuns) கன்னி மாடத்தை (nunnery) சேர்வதில்லை. நல்ல பெண்களாகவே இருக்கவே அவர்கள் அதில் சேருகின்றனர். அவர்கள் தேவனிடம் நெருங்க முயல்கின்றனர். ஆனால் அந்த முறைமை அவர்களை கறைபடுத்தி விடுகின்றது. கெட்டவர்களாக இருக்க ஜனங்கள் சபையைச் சேருவதில்லை, நல்லவர்களாக இருக்கவே அதில் சேருகின்றனர். ஆனால் ஸ்தாபனங்களின் முறைமை, இந்நாளுக்காக தேவன் அளித்துள்ள வார்த்தையினின்றும் கொள்கையினின்றும் அவர்களை விலகச் செய்கின்றது. அதுதான் அவர்களைப் புறம்பாக்குகிறது. 43 தேவன் வார்த்கை என்பதை ஞாபகம் கொள்ளுங்கள்: இப்பூமியில் தோன்றும் ஒவ்லொரு காலத்திற்கும் அவர் தமது வார்த்தையை பகிர்ந்துள்ளார். சபை காலங்களுக்கு அவர் தமது வார்த்தையை பகிர்ந்தளித்தார். அதன் ஒவ்வொன்றையும் ஏழு முத்திரைகள் நமக்கு வெளிப்படுத்தித் தந்தன. பாருங்கள்? 44 இந்த தேவரகசியங்கஅ ஏன் மறைந்திருந்தன? ஏழாம் செய்தியின் முடிவில், மறைந்துள்ள இந்த தேவரகசியங்கள் வெளிப்படும் என்று நாம் வெளிப்படுத்தல் 10ல் காண்கிறோம்வெளிப்படுத்தல் 10:1-7. கவனியுங்கள், அதற்கு காரணம் என்ன வெனில், அந்த காலத்தில் தீர்க்கதரிசிகள் இருந்ததில்லை. தேவன் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்கு அதை வெளிப் படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார் என்று வேதம் கூறு கிறது (ஆமோஸ் 3:7). எல்லா காலங்களிலும் கர்த்தருடைய வார்த்தை தீர்க்கதரிசிகளிடம் மாத்திரமே வந்ததேயன்றி, ஒரு முறைமைக்கோ ஒரு குழுவுக்கோ வரவில்லை. 45 தேவன் ஒரு குழுவை எப்பொழுதும் உபயோகித்ததேயில்லை. ஜனங்கள் ஒரு குழுவாக ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டபோது. தேவன் அவர்களை விட்டு சென்று விட்டார், அவர்களிடம் அவர் திரும்பி வரவில்லை. சரித்திரத்தை ஆராய்ந்து பார்த்து அது உண்மையா இல்லையா என்று கண்டு கொள்ளுங்கள். அதை நாம் ஏற்கனவே செய்து விட்டோம், ஜனங்கள் தேவ னுக்கு விரோதமாக ஒரு ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்ட பிறகு, அவர் அவர்களுடன் தொடர்பு கொள்ளவேயில்லை. 46 எனவே சீர்திருத்த காலத்தின் போது சீர்திருத்தக்காரர் தோன்றினர். ஏழு முத்திரைகள் அதை நிரூபித்தன. ஆனால் இந்த கடைசி நாட்களில் அது மறுபடியுமாக வெளிப்பட வேண்டும். ஏனெனில், ஜனங்களின் விசுவாசத்தை பிதாக்களின் விசுவாச மாகிய மூல பெந்தெகொஸ்தே விசுவாசத்துக்கு திருப்புவதற்காக ஒரு அபிஷேகம் இறங்கி வரவேண்டுமென்று நாம் வேதத்தில் மல்கியா 4ல் காண்கிறோம். 47 நாம் முதலாம் எலியாவைக் குறித்து பார்த்தோம். அவனுக்குப் பின் வந்த எலிசாவைக் குறித்து நாம் பார்த்தோம். அதன் பின்பு அவன் காலத்தில் எலியாவாக விளங்கிய யோவான் ஸ்நானனைக் குறித்து நாம்பார்த்தோம். இந்நாளுக்கென வேறொரு எலியா வாக்குத்தத்தம் செய்யப்பட்டுள்ளதைக் குறித்தும், நாம் பார்த்தோம். யோவான் ஸ்நானன் மல்கியா 4ல் கூறப்பட்டுள்ள எலியா அல்ல; அவன் மல்கியா 3ல் கூறப்பட்டுள்ள எலியா. “வழியை ஆயத்தம் பண்ண எனக்கு முன்பாக என் தூதனை அனுப்புவேன்'' என்று இயேசு கூறினார். அவன் தான் அந்த எலியாவென்று நாம் காண்கிறோம், 48 இந்த ஸ்தானங்களை நாம் நிர்ணயிக்கும்போது, தேவனால் .அருளப்பட்ட மற்ற எல்லா வேதவாக்கியங்களுமே நாம் கடைசி நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை வெளிப் படுத்துகின்றன. 49 நான் பெந்தெகொஸ்தே செய்தியுடன் வந்திருந்தால் , நான் லவோதிக்கேயா சபையின் காலத்தில் இருப்பேன். அது சரி யல்ல. அதனால் தான் வெஸ்வி லூத்தரின் செய்தியை எடுத்துக் கொள்ள முடியவில்லை. லூத்தர் ஒரு சபையின் காலத்தில் இருந் தார், வெஸ்லி வேறொரு சபையின் காலத்தில் இருந்தார். இயேசு மோசேயின் செய்தியுடன் வந்திருந்தால், அது கிரியை செய்திருக்காது, மோசே நோவாவின் செய்தியுடன் வந்திருந்தால், அது கிரியை செய்திருக்காது. 50 ஆனால் தேவன் ஒவ்வொரு காலத்திலுள்ள தமது ஜனங்களுக்கு தமது வார்த்தையை பகிர்ந்தளித்துள்ளார். ஆனால் அந்த காலம் தோன்றுவதற்கு முன்பே, ஜனங்கள் குழப்ப மடைந்து, அவர்கள் எங்கேயுள்ளனர் என்பதை அறியாமலிருக் கின்றனர். 51 ஆகையால் தான் இயேசு தேவனுடைய குமாரன் என் பதை அவர்கள் காணத் தவறினர். அவர்களுடைய பாரம்பரியங் கள் அவர்களுடைய கண்களை குருடாக்கியிருந்தன. ஆனால் அவரோ வேதவாக்கியங்களின்படியே பிழையின்றி இருந்தார். தீர்க்கதரிசிகளுக்கும் அது தான் ஏற்பட்டது. ''உங்களுக்கு அனுப்பப்பட்ட தீர்க்கதரிசிகளில் யாரை உங்கள் பிதாக்கள் கல்லெறிந்து கொல்லாமல் இருந்தார்கள்?'' என்று இயேசு கேட்டார். 52 தேவன் தீர்க்கதரிசியை அனுப்புகிறார். தீர்க்கதரிசி ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தை வெளிப்படுபவனாயிருக்கிறான். 53 இயேசு, “நான் என்னைத் தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே என்னை நீங்கள் எப்படி குற்றப்படுத்தலாம்? உங்கள் நியாயப் பிரமாணத்திலே... தேவவசனத்தைப் பெற்றுக் கொண்டவர்களை (அதாவது தீர்க்கதரிசிகளை) தேவர்கள் என்று நீங்கள் அழைக்கிறீர்கள், வேதவாக்கியமும் தவறாததாயிருக்கிறது. அப்படியிருக்க, நீங்கள் என்னை எப்படி குற்றப்படுத்தலாம்?', என்று கூறினார் (யோவான் 10:35-36)... தீர்க்கதரிசிகள் நியாயப் பிரமாணத்தின் ஒரு பாகமாயிருந்தனர். ஆனால் இயேசுவோ தேவனுடைய வார்த்தையின் பரிபூரணமாக இருந்தார். அவருடைய மீட்பின் முழு திட்டம், தேவனுடைய பரிபூரணம் அவருக்குள் வாசமாயிருந்தது . 54 சபையின் காலங்கள் தோறும் அவர்கள் அதையே செய்து வந்தனர். அந்த காலத்தில் விடப்பட்ட எல்லா இரகசியங்களையும் ஏழு முத்திரைகள் வெளிப்படுத்தும். அவர்களுக்கு தீர்க்கதரிசிகள் இருக்கவில்லை. தேவனுடைய வார்த்தை சீர்திருத்தக்காரரிடம் வருவதில்லை- தீர்க்கதரிசிகளிடம் மாத்திரமே. 55 தேவன் மாறாதவராயிருக்கிறார். ''நான் கர்த்தர், நான் மாறாதவர்'' என்று மல்கியா 3 உரைக்கிறது. ஒரு செயலை தேவன் முதலில் எந்த விதத்தில் செய்கிறாரோ, அதுவே அவர் எப்பொழுதும் கடைபிடிக்கும் முறையாக அமைந்திருக்கும். அவர் ஏதேன் தோட்டத்தில், குற்றமற்ற ஒன்றின் இரத்தம் சிந்தப்படுவதின் மூலம் மனிதனை இரட்சிக்கத் தீர்மானம் கொண்டார். அன்று முதல் அவர் அதை மாற்றவேயில்லை, அதை மாற்றவும் முடியாது. நாம் கல்வி, கட்டிடங்கள், முறைமைகள், ஸ்தாபனங்கள், நீதிநெறிகள் (ethics) போன்ற வைகளின் மூலம் முயன்று வருகிறோம், ஆனால் அவையனைத்தும் தோல்வியடைந்து விட்டன. ஒரே ஒரு இடத்தில் தேவன் மனிதனைச் சந்திக்கிறார், அது தான் குற்றமற்ற ஒன்றின் இரத்தத் தின் கீழ்: இரத்தத்தின் மூலம் மாத்திரமே. அதுவே அவர் முதல் தீர்மானம். பாருங்கள்? 56 நாம் ஒரு தீர்மானத்தை செய்யலாம், ஆனால் அடுத்த ஆண்டு, அதைக் காட்டிலும் சிறந்த விதத்தில் யோசிக்கலாம் அடுத்த ஆண்டு, முன்பு நாம் பெற்றிருந்ததைக் காட்டிலும் சிறந்த கருத்து நமக்கு உண்டாகக் கூடும். ஆனால் தேவன் அப்படி செய்ய முடியாது. அவர் முடிவற்றவர் (infinite). அவருடைய முதல் தீர்மானமே பரிபூரணமாக இருக்கும். எதுவுமே அதை அசைக்க முடியாது. நாம் முடிவுள்ளவர்கள், எனவே நான் அதிகமாக அறிந்து கொள்ளக்கூடும். நீங்கள் அதிகமாக அறிந்து கொள்ளக்கூடும். ஆனால் தேவன் அதிகமாக அறிந்து கொள்ள முடியாது. அவர் துவக்கத்திலேயே பரிபூரணமுள்ளவராயிருக்கிறார். எனவே அவருடைய முதலாம் தீர்மானத்தின் மேல் உங்கள் ஆத்துமாக் களை இளைப்பாறச் செய்யுங்கள், வேதாகமம் என்ன கூறுகிறதோ, அது தான் முடிவானது. என்றாவது ஒரு நாள் தேவன் உலகத்தை நியாயந்தீர்க்க வேண்டும். கத்தோலிக்க சபையைக் கொண்டு அவர் அதை நியாயந்தீர்ப்பார் என்று ஒரு கத்தோலிக்கன் சொல்லுகின்றான், அப்படியானால். எந்த கத்தோலிக்க சபையைக் கொண்டு? அவர்கள்...ஒருவருக்கொருவர் வித்தியாசமுள்ளவர்களாயிருக்கின்றனர். அவர் பிராடெஸ்டெண்டு சபையைக் கொண்டு நியாயந் தீர்ப்பாரானால், அது எந்த பிராடெஸ்டெண்டு சபை? அவர்கள் ஒருவருக்கொருவர் கருத்து வேற்றுமை கொண்டவர்களாயிருக்கின்றனர். அது சிறிது குழப்பமாயிருக்கும். எதில் நிலை நிற்பதென்று யாருக்குமே தெரியாது. மெதோடிஸ்டுகள் சரியாயிருந்தால், பாப்டிஸ்டுகள் இழந்து போவார்கள். பிராடெஸ்டெண்டுகள் சரியாக இருந்தால், கத்தோலிக்கர் இழந்து போவார்கள். கத்தோலிக்கர் சரியாயிருந்தால், பிராடெஸ்டெண்டுகள் இழந்து போவார்கள். 56 ஆனால் வேதாகமமோ, அவர் இயேசுகிறிஸ்துவைக் கொண்டு உலகத்தை நியாயந்தீர்ப்பார் என்று கூறுகிறது. இயேசுகிறிஸ்து வார்த்தையாயிருக்கிறார்- அப்படியானால் அவர் வார்த்தையைக் கொண்டு நியாயந்தீர்ப்பார், 57 எல்லா ஸ்தாபனங்களுமே வார்த்தையை விட்டு விலகிச் சென்று தங்கள் சொந்த கோட்பாடுகளை ஏற்படுத்திக் கொண் டுள்ளன. அவர்கள் எங்கு முழு வார்த்தையையும் கைக்கொள் கின்றனர் என்பதை யாராகிலும் எனக்கு நிரூபிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் முழு வார்த்தையையும் கைக்கொள்ள முடியாது. ஏனெனில் அது மனிதனால் ஏற்படுத்தப் பட்ட முறைமையினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மனிதன் எங்கிருக்கிறானோ...தேவன் எக்காலத்தும் ஒரு மனிதன் மூலமாகவே தொடர்பு கொள்கிறார். ஒரே சமயத்தில் அவர் இரண்டு தீர்க்கதரிசிகளையும் கூட கொண்டிருக்கவில்லை - ஒருவர் மாத்திரமே! தேவன் ஒரு மனிதனை தம் கரங்களில் கொண்டுள் ளார். அவர் உங்களுடைய ஸ்தாபனத்துடன் தொடர்பு கொள்வ்தில்லை, உங்களுடன் தொடர்பு கொள்கிறார். 58 அந்த அடிப்படையில் இப்பொழுது நாம் எக்காளப் பண்டிகைக்கு வருவோம்- மறைந்துள்ள இரகசியங்கள். அது 'அவ்வாறிருக்கும் என்று தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டுள்ளது. எனவே அது கூறப்பட்டுள்ள விதமாகவே வெளிப்பட வேண்டும். இந்தக் கடைசி நாட்களில் அது வெளிப்படுவதென்பது, நான் உங்களுக்கு சற்று முன்பு கூறின விதமாக, மல்கியா 4ம் அதிகாரம், லூக்கா 17ம் அதிகாரம் 30ம் வசனம் (அவர் எப்படி செய்வாரென்று). எபிரேயர் 13;8, எபிரேயர் 4:12, இன்னும் அநேக வேத வாக்கியங்களின் நிறைவேறுதலாய் அமைந் துள்ளது. 59 இது உங்களில் சிலருக்கு வினோதமாகத் தென்படுமானால், இதை நான் கூற விரும்புகிறேன். அதாவது தேவன் தீர்க்கதரிசி களின் மூலமாகவே ஜனங்களின் மத்தியில் அறியப்படுகிறார். யூதர்கள் எப்பொழுதுமே தங்கள் தீர்க்கதரிசிகளை விசுவாசித்தனர். அவர், ''உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாயிருந்தால், கர்த்தராகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப் படுத்தி, சொப்பனத்தில் அவனோடே பேசுவேன். அவன் சொன் னது நிறைவேறினால், அவனுக்குச் செவிகொடுங்கள்'' என்றார் (எண. 12:6). அவர்கள் எப்பொழுதுமே... அவர்கள் இயேசுவை அடையாளங் கண்டு கொள்ளத் தவறி, அவரை வேறு யாரோவென்று நினைத்தனர். அவரை பொல்லாத ஆவி, பெயல்செபூல் என்றழைத்தனர். ஏனெனில் அவர்களுடைய இருதயங்களில் மறைந்திருந்த இரகசியங்களை அவரால் அறிந்து கொள்ள முடிந்தது. அது வார்த்தையின் அடையாளமாயுள்ளது என்று நாமறிவோம். 60 “தேவனுடைய வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது'' என்று எபிரேயர் 4ம் அதிகாரம் 12ம் வசனம் உரைக்கிறது. 61 ''பரிசுத்த ஆவியாகிய அவர் உங்கள் மேல் வரும்போது, நான் சொன்ன இவைகளை உங்களுக்கு நினைப்பூட்டி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்'' (யோவான் 16:13). 62 “பூர்வகாலங்களில் பங்கு பங்காகவும் வகைவகையாகவும் தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் தம்முடைய குமாரன் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்.” (எபி. 1: 1-2). அதே தேவன் தீர்க்க தரிசிகளிடமிருந்து குமாரனுக்கு மாறினார். அவ்வளவு தான் . பாருங்கள், எப்பொழுதுமே அதே செய்தி. அதே வழியில் செயல் புரிதல். 63 சபைகள் இந்நிலையில் இருக்குமென்றும், அவை மறுபடியும் புதுப்பிக்கப்படவேண்டுமென்றும் தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டுள்ளது. அவர் தீர்க்கதரிசியாகிய எலியாவை அனுப்புவதாகவும் அவன் ஜனங்களை மறுபடியும் திருப்புவான் என்றும் மல்கியா 4ல் வாக்களித்துள்ளார். கவனியுங்கள், அவனுடைய செய்திக் குப் பிறகு உலகம் எரிந்து போகும் ஒரு காலம் வரும், அப்பொழுது நீதிமான்கள் சாம்பலை மிதிப்பார்கள் 64 இது சில வேதபண்டிதர்களுக்கு (உலகில் எங்காகிலும் இதை ஒலி நாடாவில் கேட்பவருக்கு ); நீங்கள் இது யோவான் ஸ்நானனைக் குறிக்கிறது என்று எண்ணினால், வேதவாக்கியம் தவறாயிருக்கும். ஏனெனில் யோவான் ஸ்நானனின் செய்திக்குப் பிறகு உலகம் எரிந்து போகவில்லை. இயேசு வந்து ஜனங்களை ஆயிரம் வருட அரசாட்சிக்கு அழைத்து செல்லவில்லை. ஆனால் ஏலியாவின் ஆவி மறுபடியும் பூமியின் மேல் வந்த பிறகு, அவர் அவ்வாறு செய்வதாக வாக்களித்துள்ளார். 65 இப்பொழுது கவனியுங்கள், மல்கியா 4ல், இது எதை திருப் பச் செய்யப்படுகிறது? ஜனங்களின் விசுவாசத்தை மூலப் பிதாக்களின் பெந்தெகொஸ்தே உபதேசத்திற்கு. அவர் ஜனங் களை பிதாக்களிடத்திற்குத் திருப்புவார். லூக்கா 17ல்  66 நாம் காண்கிறோம், இயேசு கூறினார், அவர் கடைசி நாட்களில் வரும்போது.... லூக்கா 17:33ல் இயேசு, “லோத்தின் நாட்களில் நடந்தது போலவே, மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் நடக்கும்'' என்று கூறின தாகக் காண்கி றோம். (லூக். 17:30- தமிழாக்கியோன்) 67 இப்பொழுது கவனியுங்கள், அவர் மூன்று குமாரர்களின் நாமத்தில் வருகிறார். அவர் மனுஷகுமாரன், தேவனுடைய குமாரன், தாவீதின் குமாரன் என்னும் நாமங்களில் வருகிறார். அவர் தீர்க்கதரிசியாயிருந்ததால், மனுஷகுமாரன் (Son of man) என்னும் நாமத்தில் வர வேண்டியதாயிற்று. யேகோவாவே தீர்க்கதரிசிகளை மனுபுத்திரன் (Son of man) என்றழைக்கிறார். இயேசு தம்மை தேவனுடைய குமாரன் என்று ஒருபோதும் குறிப் பிடவில்லை. அவர் தம்மை எப்பொழுதுமே மனுஷகுமாரன் என்று குறிப்பிட்டார். , 68 கவனியுங்கள். அன்று அவர் தம்மை தீர்ககதரிசியாக ஞான திருஷ்டிக்காரராக- வெளிப்படுத்தினார். அவர், ''என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை'' என்றார் (யோவான் 10:37). அவருடைய மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல், சிலுவை மரணம், பிறப்பு உட்பட தம்மைக் குறித்து வேதத்தில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு வர்ணனையையும் அவர் நிறைவேற்றினார். அவருடைய கிரியையில், மனுஷகுமாரன், ஞான திருஷ்டிக்காரன் என்னும் வர்ணனையை அவர் நிறைவேற்றினார். 69 இப்பொழுது கவனியுங்கள். அவர் சபை காலங்களில் தேவனுடைய குமாரனாக வெளிப்பட்டார். தேவன் ஆவியாயிருக்கிற படியால்- அவர் பரிசுத்த ஆவி--சபை காலங்களில் சபையோருக்கு அவர் தம்மை ஜனங்கள் மத்தியிலுள்ள பரிசுத்த ஆவியாக வெளிப்படுத்தினார். 70 கடைசி சபையின் காலமாகிய லவோதிக்கேயா சபையின் காலத்தில் அவர் சபைக்கு வெளியே தள்ளப்பட்டார் என்று நாம் காண்கிறோம், லவோதிக்கேயா . சபை காலத்தைத் தவிர வேறெந்த காலத்திலும் அவர் சபையிலிருந்து புறம்பாக்கப்பட வில்லை. இவர்கள் தாம், "நாங்கள் ஐசுவரியவான்கள், எங் களுக்கு ஒரு குறைவுமில்லை'' என்று கூறினர். (வெளி. 3:17). 71 "நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதவிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாம லிருக்கிறாய்.'' அவர் அந்த சபையின் காலத்தில் வெளியே தள்ளப்பட்டார். 'சோதோமின் நாட்களில் நடந்தது போல, மனுஷ குமாரன் வரும் காலத்திலும் நடக்கும்'' என்று அவர் லூக்கா 17ல் கூறியுள்ளார். அவர் நாம் படிக்கும் அதே ஆதியாகமத்தைப் படித்தார். சோசோமில் என்ன நடந்ததென்று கவனியுங் கள். சோதோமில் என்ன இருந்தது? ஆபிரகாம்... 72 எப்பொழுதுமே மூவகை ஜனங்கள் உள்ளனர். அங்கு தெரிந்து கொள்ளப்பட்டு வெளியே அழைக்கப்பட்ட ஆபிரகாம் சோதோமுக்கு வெளியே இருந்தான். சபை அங்கத்தினன், ஸ்தாபனத்தைச் சேர்ந்தவனாகிய லோத்து அங்கிருந்தான். அவன் நகராண்மைத் தலைவராயிருந்து, உலகத்தின் ஒரு பாகமாக இருந்தான். அவன் வாசலில் அமர்ந்து நியாயம் விசாரித்தான். அது தான் நகராண்மைத் தலைவரின் அலுவல்; அங்கு சோதோமும் இருந்தது. 73 சாயங்கால நேரத்திலே, அல்லது நடுப்பகல் நேரத்தில், ஆபிரகாம் ஓக் மரத்தின் கீழ் உட்கார்ந்து கொண்டிருந்தபோது, மூன்று தூதர்கள் அவனுக்கு பிரத்தியட்சமாயினர், அவர்களில் இரண்டு பேர் சோதோமுக்குச் சென்று சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, அவர்களை வெளியே அழைக்க முயன்றனர். அவர் களுக்கோ வெளியே வர மனமில்லை. அவர்கள் நெறி தவறினவர்களாக இருந்தனர். லோத்தும், அவனுடைய மனைவியும், அவ னுடைய இரண்டு குமாரத்திகளும் மாத்திரமே புறப்பட்டனர். லோத்தின் மனைவி திரும்பிப் பார்த்து உப்புத் தூணாக மாறினாள். 74 ஆனால் ஆபிரகாமுடன் தங்கி அவனுடன் பேசினவர்ஆபிரகாம் அவரை 'ஏலோகிம்', சர்வல்லவர் என்றழைத்தான் (ஆதியாகமம் 1, “ஆதியிலே தேவன்''-அ நாவது ஏலோகிம், எல்லாமே போதுமானவராயுள்ளவர், தன்னில் தானே ஜீவிக் கிறவர், ஆபிரகாம் அவரை ஏலோகிம் என்றழைத்தான்). அவர் ஆபிரகாமுடன் உட்கார்ந்து புசித்தார், குடித்தார். அவர் மனித சரீரத்தில் இருந்தார், அவர் ஆபிரகாமுக்கு அளித்த அடையா ளத்தைக் கவனியுங்கள். 75 அவர்கள் வரப்போகும் குமாரனுக்காக, வாக்களிக்கப்பட் டிருந்த குமாரனாகிய ஈசாக்குக்காக காத்திருந்தனர். நீண்ட பிரயாணத்தில், இருபத்தைந்து ஆண்டுகளாக அவர்கள் அதை எதிர்நோ கியிருந்தனர். அவர்கள் பிரயாணத்தின் முடிவுக்கு வந்திருந்தனர். தேவன் அநேக உருவங்களில் பிரத்தியட்சமானார்--சபையின் காலங்களில் அவர் செய்தது போல ஒளியாகவும் சத்தமாகவும் : (அவர் ஆபிரகாமிடம் பேசினது போல). ஆனால் வரப்போகும் குமாரன் தோன்றுவதற்கு முன்பு (இதை குறித்து நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம், இதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்று மறுபடியும் கூறுகிறேன். இதற்கு பின்பு உடனடியாக, அவர்கள் குமாரனைப் பெற வேண்டும் என்பதற்காக, அவர் ஆபிரகாம், சாராள் இவர்களின் சரீரங்களை மாற்றினார்). கவனியுங்கள், குமாரன் வருவதற்கு முன்பாக அவர்கள் பெற்ற கடைசி அடையாளம், யேகோவா மனித உருவத்தில் அவர்களுடன் பேசினதாகும், இவர் யேகோவா என்று அவர்கள் எப்படி அறிந்து கொண்டனர் என்றால், அவர் "ஆபிரகாமே (ஆபிராம் அல்ல; சில நாட்களுக்கு முன்பு தேவன் அவனுடைய பெயரை மாற்றினார்), உன் மனைவி சாராள் எங்கே?'' என்றார் (சாராய் அல்ல, சாராள், ' ராஜா குமாரத்தி') 76  ஆபிரகாம், "உமக்குப் பின்னால் , உள்ள கூடாரத்தில் இருக்கிறாள்'' என்றான். 77 அவர், 'நான் (அது தனிப் பிரதிப் பெயர்) ஒரு உற்பவ காலத்திட்டத்தில் நிச்சயமாய் உன்னிடத்தில் வருவேன்'' என்றார். (அடுத்த இருபத்தெட்டு நாட்களில் ஏதோ ஒன்று சாராளுக்கு நடக்கப் போகின்றது.) 78 கூடாரத்திலிருந்த சாராள் தன் உள்ளத்தில் நகைத்து. ''நான் கிழவியும், என் ஆண்டவன் ஆபிரகாம் முதிர்ந்த வயதுள்ளவருமான பின்பு எனக்கு இன்பம் உண்டாயிருக்குமோ?'' என்றாள். 79 அப்பொழுது அந்த தூ தன் அல்லது மனிதன், "சாராள் ஏன் அப்படி தன் உள்ளத்தில் சொன்னாள்? இது நடக்காது என்று ஏன் கூறினாள்?'' என்றார். சாராள் அவருக்குப் பின்னால் கூடாரத் தில் இருந்தாள். பாருங்கள்? மனித சரீரத்திலுள்ள ஒரு மனிதன், தீர்க்கதரிசியைப் போன்றவர். ஆயினும் அது அவருக்குப் பின்னால் இருந்த சாராளின் இருதயத்திலுள்ள சிந்தனைகளைப் பகுத்தறிந்து கூறின ஏலோகிம். 80 இயேசு, "லோத்தினுடைய நாட்களில் நடந்து போல, உலகத்தின் முடிவின் போதும் நடக்கும். அப்பொழுது மனுஷ குமாரன்-தேவனுடைய குமாரன் அல்ல--மனுஷகுமாரன் வெளிப்படுவார்'' என்றார். 81 காலங்கள் தோறும் நாம் அதைப் பெற்றிருக்கவில்லை. வேதவாக்கியங்களின் பிழையற்ற தொடர்ச்சியைப் பாருங்கள். (இங்கு நாம் அதில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்). ஒருத்துவக் காரரின் கருத்துக்கு மாறுபட்ட இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் கொடுக்கப்படும் ஞானஸ்நானம் போன்ற இரகசியங்களை எவ்வாறு பரிசுத்த ஆவியானவர் நமக்கு பரிபூரணமாக வெளிப் படுத்தித் தந்தார்! உண்மையான பரிசுத்த ஆவியின் அபிஷேகம், அடையாளம் (Token) போன்ற உண்மைகளை அவர் எடுத்துக் கூறி, அவைகளை சரியான இடங்களில் பொருத்தி, ஒவ்வொரு சீர்திருத்தக்காரரையும் அவரவர் இடங்களில் நமது கண்களுக்கு முன்பாக எவ்வாறு சரியாகப் பொருத்தி தந்தார்! அது ஒரு மூலையில் மாத்திரம் அல்ல, உலகம் பூராவும் அறியப்பட்டு விட்டது. தேவனுடைய குமாரனாகிய இயேசு வேதவாக்கியங்களின் மூலம் தம்மை வெளிப்படுத்திக் காண்பித்து, இக்காலத்துக்கென முன் குறிக்கப்பட்டுள்ள வேத வாக்கியங்கள் - ஜீவிக்கும்படி செய்தார் (இக்காலத்தில் அவர் செய்தது போன்று, மற்ற காலங்களிலும் கூட). அதை விசுவாசிப்பதே பரிசுத்த ஆவியைம் பெற்றுள்ளதன் அத்தாட்சியாம்- நீதி! 82 சபைக்குச் செல்வது பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ள தன் அத்தாட்சி என்று நீங்கள் கூற முடியாது. அப்படி நீங்கள் கூறினால், பரிசேயர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்தனர் என்றாகி விடுகிறது. பாருங்கள்? சரீரத்தைக் குலுக்கி, குதித்தல் போன்றவை அத்தாட்சி என்று நீங்கள் கூற முடியாது... அப்படியானால் அஞ்ஞானிகள் அதை பெற்றுள்ளனர் என்றாகி விடுகிறது. அந்நிய பாஷை பேசுதல் அத்தாட்சி என்று நீங்கள் கூறினால் எந்த பிசாசு வழிபாட்டில் அந்நிய பாஷை பேசப்படுவதில்லை? ஒன்றை எனக்குக் காண்பியுங்கள். ஆப்பிரிக்காவிலிருந்து வந்துள்ள சகோ.ஜாக்ஸன் இங்கு அமர்ந்துள்ளார். அவர் உங்களிடம் கூற முடியும். 83 இங்கு சிகப்பு இந்தியர்களின் இருப்பிடங்களுக்கு நான் சென்றிருக்கிறேன். அங்குள்ள மந்திரவாதிகள் தங்களை கத்தியால் வெட்டிக்கொண்டு, தங்கள் இரத்தத்தை ஊற்றி, அந்நிய பாஷை பேசுகின்றனர். அந்த மந்திரவாதி மருத்துவன் அதற்கு அர்த்தம் உரைக்கிறான். அவர்கள் ஒரு பென்சிலை வைக்கின்றனர். அது அந்நிய பாஷை எழுதுகின்றது. எனவே அதுவல்ல... உண்மையான அத்தாட்சி என்ன? '' நானே அவர் என்று நீங்கள் விசுவாசிக்க வேண்டும்'' என்று இயேசு கூறினார் (யோவான் 8:24) அவர் வார்த்தையாயிருக்கிறார். 84 அவர்கள் ஏன் அதை புரிந்து கொள்ளவில்லை? யூதர்கள் ஏன் அதை புரிந்து கொள்ள வில்லை? அவர்கள் நீதிமான்கள், நல்லவர்கள், பரிசுத்தமுள்ளவர்கள். ஆனால் அது யாருக்கு அருளப்படு கின்றதோ... அது வார்த்தை என்று நீங்கள் எப்படி அறிந்து கொள்வீர்கள்? ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைக் கூறுகின்றனரே! அது அந்த காலத்துக்கென வேதத்தில் அளிக்கப்பட்டுள்ள வாக்குத்தத்தம் உறுதிப்படுதலாகும். பார்த்தீர்களா? அப்பொழுது நீங்கள் பரிசுத்த ஆவி எங்குள்ளதோ அங்கு அடைகின்றீர்கள். 85 இன்னும் சில நிமிடங்களில், எக்காள சத்தம் எதை அறி விக்கிறது என்பதைக் காணலாம். யார் சுவிசேஷ எக்காளத்தை கேட்கமுடியும் என்பதைப் பாருங்கள். மதில்கள் கட்டப்பட்ட நகரத்திலுள்ளவர்கள் யூபிலியின்போது வெளியே வர முடியாது என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். இல்லை, ஐயா. அவர்கள் மதில்களுக்குள் இருந்து, அங்கேயே தங்கி விடுகின்றனர். அது முடிவு பெற்று விடுகின்றது. அவர்கள் எஞ்சியுள்ள தங்கள் வாழ்நாள் முழுவதும் அடிமைகளாகவே வாழ்ந்து, அடிமைகளாகக் குறியிடப்படுகின்றனர். 86 இந்த மாதிரிகளையெல்லாம் நாம் காணும்போது, கவனியுங்கள். இந்த செயல்கள் மல்கியா 4. எபிரேயர் 13:8, “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்'' போன்றவை. அவர் எக்காலத்தும் வார்த்தையாக இருக்கிறார் - வெளிப்படும் வார்த்தையாக. தீர்க்கதரிசிகள் அப்படித்தான் என்று அவர் அறிவித்தார். தீர்க்கதரிசி என்றால் "ஞான திருஷ்டிக்காரன் அல்லது காரியங்களை முன்னுரைப்பவன்'' என்று மாத்திரம் அர்த்தம் அல்ல. அது, ''தன் சொந்த வாழ்க்கையின் மூலம் வார்த்தையை வெளிப்படுத்துகிறவன்'' என்று அர்த்தம், அவனுடைய சொந்த கிரியைகளே அக்காலத்து வார்த்தையை வெளிப்படுத்தி உறுதிப்படுத்துவதாக அமைந்திருக்கும் நோவா பேழையை உண்டாக்குதல், மோசே அங்கு செய்தல். அப்பொழுது நீங்கள் அந்நேரத்துக்காக வாக்களிக்கப்பட்டுள்ள வார்த்தையைக் காண்கிறீர்கள் . 87 அவர் நம்முடன் இருக்கிறார் என்று நாம் அறிந்திருக்கிறோம் அதை நாம் விசுவாசிக்கிறோம். அவருடைய வார்த்தை புகைப் படங்களின் மூலமாகவும், வேதவாக்கியங்களினாலும், வானத்தில் தோன்றும் அடையாளங்களினாலும், வெளிப்படுவதை நீங்கள் காண்கின்றீர்கள். அவர் கூறின எதுவும் ஒரு முறை கூட தவறினதில்லை. இத்தேசத்தின் பல்வேறு பாகங்களிலுள்ளவர்களே, உலகின் இதர பாகங்களிலுள்ளவர்களே, அது ஒரு முறையாவது தவறியிருந்தால், எனக்கு எழுதித் தெரிவிக்க நீங்கள் கடமைப்பட்டிருக்கிறீர்கள். அது வார்த்தைக்கு வார்த்தை பரிபூரணமாக அமைந்து வந்துள்ளது. அது அவர் அளித்துள்ள வாக்குத்தத்தம். 88 அவர் ஏன் கடைசி நாட்களில் தோன்ற வேண்டும்? ஒலி நாடாக்களைக் கேட்பவர்களே, நீங்கள் ''மணவாட்டி மரம்'' என்னும் செய்திக்குச் செல்வீர்களானால், ஏதேன் தோட்டத்தி லிருந்த அந்த மரம் கிறிஸ்து என்பதை நினைவுக்குக் கொண்டு வாருங்கள். முதலாம் ஆதாம் பாவத்தில் விழுந்து போனான். இரண்டாம் ஆதாம் பாவத்தின் காரணமாக வெட்டப்பட்டார். அவர்கள் அவரை ரோம மரத்தில் தூக்கினார்கள். அதிலிருந்து அவர் வாக்குத்தத்தம் செய்துள்ளதாக நாம் வேதத்தில் காணும் மணவாட்டி மரம் வெளியே வந்தது. 89 இப்பொழுது, மணவாட்டியைப் பெற்றுக் கொள்ள.... அது கூர்நுனிக் கோபுரத்தைப் போன்று நாளுக்கு நாள் சிறுபான்மை யோரைக் கொண்டதாய் குறுகிக் கொண்டே வருகிறது – அது துவக்கத்தில் லூத்தர், வெஸ்லி, பெந்தெகொஸ்தேயினர் ஆகியோரின் காலத்தில் அகலமாயிருந்தது. பிறகு அதன் உச்சியிலுள்ள தலைக்கல் மிகவும் கூர்மையாயுள்ளது. இந்த கற்கள் ஒன்றுக்கொன்று பூரணமாக இணைக்கப்பட்டுள்ளன. (அவர்கள் அதை எப்படி செய்தனர் என்று நமக்கு இன்னும் தெரியவில்லை); ஆனால் அந்த கூர்நுனிக் கோபுரத்தில் அவை பூரணமாக இணைக்கப்பட்டுள்ளன (நாம் கூர்நுனிக்கோபுர உபதேசம் செய்யவில்லை, நாம் வெறுமனே... ஏனோக்கும் மற்றவர்களும் அநேக ஆண்டுகளுக்கு முன்பு அதை கட்டினர்). அது ஒரு அடையாளமாகத் திகழ்கின்றது - சூரியன் உதயமாகி மறைதல், மரத்திலிருந்து இலைகள் உதிர்ந்து, மீண்டும் இலைகள் தோன்றுதல், மீன், மாட்டு மந்தை ஆகியவை எவ்வாறு அடையாளங்களாகத் திகழ்கின்றனவோ, அவ்வாறே கூர் நுனிக் கோபுரமும் ஒரு அடையாளமாகத் திகழ்கின்றது. 90 கூர்நுனிக் கோபுரத்திலுள்ள ராஜாவின் அறைக்குச் சென்று அங்குள்ள ஏழு படிகளைக் கவனியுங்கள். காவல்காரன் எங்கு சவாலை சந்தித்து, வருகிறவனை ராஜாவின் சமுகத்திற்கு கொண்டு வருகிறான்? அது மேல் படியில்-அதாவது ஏழாம் படியில், யோவான் ஸ்நானனின் மேலிருந்த அதே ஆவியுடன் நாம் மறுபடியும் வர வேண்டுமென்பதை அது காண்பிக்கிறது. யோவான் ஸ்நானன் மேசியாவை அறிமுகப்படுத்தினான். அவன் எல்லா தீர்க்கதரிசிகளைக் காட்டிலும் பெரியவன் ; அவன் அவரை அறிமுகப்படுத்தினான். 91 நாமும் மேசியாவை அறிமுகம் செய்யப்போகும் அந்த இடத்திற்கு வந்தாக வேண்டும். மேசியா என்னவாயிருப்பார் என்று ஜனங்கள் கண்டு கொள்ள, அவர்கள் எப்பொழுதுமே வார்த்தையில் இராமற்போனால், அவரை விசுவாசிக்கும் ஜனங்கள் அவரை எப்படி கண்டு கொள்வார்கள்? ஞானவான்கள் உணர்ந்து கொள்வார்கள் என்று தானியேல் கூறியுள்ளான் (தானி. 12:10). ஆனால் மூடர்களோ-ஞானமில்லாதவர்களோ-அதை உணர்ந்து கொள்ள மாட்டார்கள். ஞானவான்கள் தங்கள் தேவனை அறிந்து கொள்வார்கள். 92 ஜனங்களை மறுபடியுமாக வார்த்தைக்கு கொண்டு வந்து, மணவாட்டி தன் கணவனை- தன் துணையாகிய (Mate) வெளிப் படுத்தப்பட்ட வார்த்தையை-அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அது மறுபடியும் கடைசி நாட்களில் தோன்றும் என்று அவர் கூறியுள்ளார். ஆகையால் தான் இது இப்பொழுது நிகழவேண்டியதாயுள்ளது. அது சீர்திருத்தக்காரராகிய லூத்தர், வெஸ்லி ஆகியோரின் காலத்தில் அல்ல, அது பெந்தெகொஸ்தேயினரின் காலத்தில் அல்ல. அது அப்பொழுது நிகழாது என்று வேதம் கூறுகின்றது. ஆனால் அது வரும். அது இக்காலத்துக்கென அளிக்கப்பட்டுள்ள அவருடைய வாக்குத்தத்தம். 93 அவர் வரப்போகும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவள் அவரில் அடையாளம் கண்டு கொள்ளப்பட வேண்டும். எந்த ஒரு ஸ்திரீயும் தன் கணவனுடன் அடையாளம் கண்டு கொள்ளப்பட வேண்டும். ஏனெனில் இருவரும் ஒன்றாயுள்ளனர். அவ்வாறே கிறிஸ்துவின் மணவாட்டியும் அவருடன் அடையாளம் கண்டு கொள்ளப்பட வேண்டும். ஏனெனில் இருவரும் ஒருவரே. அவர் வார்த்தையாயிருக்கிறார். ஸ்தாபனம் வார்த்தையாக இல்லை. நாம் ஒளியின் பிள்ளைகளாக இருக்க வேண்டும். வார்த்தையே ஒளி. அது இக்காலத்துக்கு ஒளியாக உள்ளது. ஒளி வார்த்தையிலிருந்து வந்தாலொழிய, நாம் எப்படி ஒளியை அறிந்து கொள்ள முடியும்? சரி. மாமிசமாகிய வார்த்தையே, நாம் காணும் போது, இக்காலத்தின் ஒளியாயுள்ளது. வேதம் அவ்வாறு கூறி யுள்ள து. 94 இயேசுவின் காலத்திலிருந்த ஜனங்கள் இயேசுவைக் கண்டு, இந்த மனிதன் யார்? இவன் முறை தவறி பிறந்தவன். இவன் தந்தையும் தாயும் இது, அது, மற்றது' என்றனர். அவர்கள் அவரை அறிந்து கொள்ளவில்லை. அவர்கள் வேதத்தை அறிந்திருந்தால், அவரை அறிந்திருப்பார்கள்; இயேசு அவ்வாறு கூறி அவர்கள், நாங்கள் மோசேயின் சீஷர்கள்'' என்றனர். 95 அவர். ''நீங்கள் மோசேயை அறிந்திருந்தால், என்னையும் அறிந்திருப்பீர்கள். ஏனென்றால் மோசே என்னைக் குறித்து எழுதியிருக்கிறான்'' என்றார். அவர்கள் அதைக் காணக்கூடாதவாறு குருடராயிருந்தனர். பாருங்கள் அது எவ்வளவு எளிமையாயுள்ளதென்று! அது எல்லா குழுக்களுக்கும், ஸ்தாபனங்களுக்கும், கோட்பாடுகளுக்கும் அப்பாற்பட்டதாயிருந்தது. தேவன். மாமி சத்துக்குள் நுழைந்து, மனித உருவம் எடுத்து, மீட்பின் உறவின் முறையானாக ஆனார். அவள் அவரில் அடையாளம் கண்டு கொள்ளப்பட வேண்டும். 96 நாம் ஒளியின் பிள்ளைகளாக இருந்து, ஒளியில் நடக்க அழைக்கப்பட்டுள்ளோம். 97 அண்மையில் கென்டக்கியில் நான் நடத்திய ஒரு கூட்டம் என் நினைவுக்கு வருகிறது. நான் சபையை விட்டு வெளியே வந்த போது, ஒரு வயோதிபர் கையில் விளக்கை வைத்துக்கொண்டு அங்கு நின்று கொண்டிருந்தார். தெய்வீக சுகமளித்தலில் நம்பிக்கையில்லாத ஒரு சபையை அவர் சேர்ந்திருந்தார். அவர், “சகோ. பிரான்ஹாம், உங்கள் கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது'' என்றார். நான், . அப்படி செய்ய உங்களுக்கு உரிமையுண்டு" என்றேன். 98 அவர், “பாருங்கள்? நான் ஒன்றைக் காணாமல் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். அதை நான் வெளிப்படையாகக் காணவேண்டும்'' என்றார். 99 ''அப்படியானால், தேவன் உமக்கு முன்னால் நிற்பதை நீர் வெளிப்படையாய் கண்டதுண்டா?'' என்று கேட்டேன் (அவகுக்கு தரிசனங்கள் போன்றவைகளில் நம்பிக்கையேயில்லை). அவர், "இல்லை " என்றார். 100 ''ஐயா, அப்படியானால் நீர் விசுவாசியல்ல . என்னால் உம்மிடம் பேச முடியாது. (பாருங்கள்? பாருங்கள்?) தேவன் வாக்களித்துள்ளவைகளை நாங்கள் கண்டு அதைப் பற்றிக் கொள்கிறோம்'' என்றேன். 101 அவர், ''அதை எப்படி உங்களால் செய்ய முடிகிறது? வாருங்கள், வீட்டிற்கு சென்று, இன்றிரவு அதைக் குறித்து பேசுவோம்'' என்றார். 102 நான், “அப்படி செய்ய எனக்கு விருப்பமுண்டு. ஆனால் என்னால் முடியாது. நீர் எங்கு வசிக்கிறீர்?'' என்றேன். 103 அவர் " இங்குள்ள இந்த மலையின் மேல் செல்ல வேண்டும்'' என்றார். 104 நான் “நீர் எப்படி அங்கு அடையப்போகின்றீர்? உமது வீட்டை உம்மால் காண முடியவில்லையே?'' ' என்றேன். அவர், ''மலையின் மேல் ஒரு பாதை செல்கின்றது" என்றார். நான், 'நீர் பாதையைக் காண முடியவில்லையே" என்றேன். அவர், ''என்னிடம் விளக்கு உள்ளது'' என்றார். நான், 'இந்த விளக்கு வெளிச்சம் உமது வீட்டின் மேல் அடிக்காது'' என்றேன். அவர், “இல்லை, ஆனால் அந்த பாதை என்னை வீட்டுக்குக் கொண்டு செல்லும்'' என்றார். 105 நான், ''அந்த விளக்கு ஒவ்வொரு காலடிக்கும் மாத்திரமே வெளிச்சத்தைக் காண்பித்து உங்களை கூட்டிச் செல்லும்'' என் றேன். கர்த்தாவே, நாங்கள் அந்த வெளிச்சத்தில், அழகான வெளிச்சத்தில், ஒவ்வொரு அடி வைத்து நடந்து, உமக்கு அருகாமையில் வருவோம். 106 ஆம், ஒளியின் பிள்ளைகள் அவருடைய வார்த்தையை ஏற்றுக் கொள்வார்கள். நீங்கள் நடந்து கொண்டே சென்று, அதிகம் வெளிப்படுவதை காணுங்கள். அதை விட்டு விடாதீர்கள். யார் எனன கூறினாலும், அதிலே நிலைத்திருந்து , அதில் நடந்து செல்லுங்கள். அது திறந்து தன்னைத் தான் வெளிப்படுத்துவதைக் காணுங்கள். வார்த்தை என்பது ஒரு விதை. நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதை அதன் இனத்தை முளைப்பிக்கும். 107 வெளிப்படுத்தல் 10:1-7ஐக் கவனியுங்கள். லவோதிக்கேயா சபையின் தூதனால் எல்லா இரகசியங்களுமே மணவாட்டிக்கு வெளிப்படுத்தப்படும், யாரிடமாவது திருத்தப்பட்ட வேதாகமம் (Revised version Bible) உள்ளதா? உங்களிடம் இருக்குமானால், 'தூதன்' என்று சொல்லப்பட்ட இடத்தில், 'கழுகு' என்று பக்கக்குறிப்பில் எழுதப்பட்டுள்ளது. (பாருங்கள்?). லவோதிக் கேயா சபையின் தூதன் (பாருங்கள்?). வெளிப்படுத்தல் 10:1 முதல் 7 வசனங்கள். 108 யோவான் அந்த நாளில் அந்த தூதன் இறங்கி வந்ததைக் கண்டதாகக் கூறினான். அவன் அந்த சிறு புத்தகத்தைப் புசித் தான். அப்பொழுது அங்கு...அந்த தூதன் ஒரு பாதத்தை பூமியின் மேலும் மற்ற பாதத்தை சமுத்திரத்தின் மேலும் வைத்து, இனி காலம் செல்லாது என்று சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவர் மேல் ஆணையிட்டுச் சொன்னான். அவன் அப்படி செய்த போது, ஏழு இடிகள் சத்தமிட்டு முழங்கின. அவ்வேழு இடிகளும் தங்கள் சத்தங்களை முழங்கினபோது, யோவான் எழுதவேண்டுமென்றிருந்தான். அவர், 'அதை எழுதாதே'' என்றார். பாருங்கள்? அவன் அதை முத்திரை போட்டான். 109 ஒருவர் என்னிடம். ''சகோ. பிரான்ஹாமே, நாம் எப்படி தேவனிடம் நெருங்க முடியும் என்பதைக் குறித்த அந்த மகத்தான இரகசியம் கடைசி நாட்களில் வெளிப்படும்'' என்றார்... இல்லை, ஐயா, அது அப்படி இருக்க முடியாது. ''எவனாகிலும் இந்த வேதகாமத்திலிருந்து ஒரு வார்த்தையை எடுத்துப்போட்டால், அல்லது ஒரு வார்த்தையைக் கூட்டினால், அவனுடைய பங்கு ஜீவ புஸ்தகத்திலிருந்து எடுத்து போடப்படும்'' அது என்ன வென்றால், அதை மூன்பு காணத்தவறின ஒன்றின் வெளிப்பாடாயிருக்கும்.... அது ஏற்கனவே எழுதப்பட்டுள்ளது; அது இங்குள்ளது; ஏற்கனவே எழுதப்பட்டுள்ளதை அது வெளிப்படுத்தும் (பாருங்கள் ?), ஏனெனில் இதனுடன் நீங்கள் ஒன்றைக் கூட்டவோ, அல்லது இதிலிருந்து ஒன்றை எடுத்துப் போடவோ உங்களால் முடியாது. 110 வேதத்தின் முதலாம் அத்தியாயமாகிய ஆதியாகமத்தில் ஒரு ஸ்திரீ அதை நம்பாமல் இல்லை, ஆனால் ஒரு வார்த்தைக்கு சாத்தான் தவறான அர்த்தம். உரைக்க அவள் அனுமதித்தாள். 'நிச்சயமாக...'' பாருங்கள்? அதிலிருந்து எல்லா கஷ்டங்களுமே தொடங்கின. அது தேவள் பேசினதாகும், அது தேவனுடைய வார்த்தை . வெளிப்படுத்தின விசேஷம் சடைசி அதிகாரத்தில் இயேசுவே - அதே தேவன்-' 'எவனாகிலும் இதிலிருந்து ஒரு வார்த்தையை எடுத்துப்போட்டால், அல்லது இதனுடன் ஒரு வார்த்தையைக் கூட்டினால்..." என்கிறார். இது இயேசுகிறிஸ்துவின் முழு வெளிப்பாடாகும். அதை குறித்த எல்லா இரகசியங்களையுமே ஏழு முத்திரைகள் கொண்டிருந்து, அது இந்த கடைசி நாளில் லவோதிக்கேயா சபையின் காலத்தில், காலத்தின் முடிவில் திறக்கப்பட வேண்டியதாயுள்ளது. சபைக்கு செய்தியை முடிக்கும் தேவனுக்கு துதியுண்டாவதாக. அது அதை முடிக்கிறது. அப்பொழுது அவர்கள் பின்நோக்கி, என்ன நடந்த தென்றும், அது எதற்கு கொண்டுவந்துள்ளதென்றும் காண்பார்கள். அது அதை முடித்து விடுகிறது.இந்த சபையின் காலம். . 111 இப்பொழுது கவனியுங்கள், நாம் பேசிக்கொண்டிருக்கும் எக்காளம், விருந்துக்கு. யுத்தத்துக்கு, அல்லது பண்டிகைக்கு ஒரு நபருக்கு அழைப்பு விடுகிறது (''ஒரு நபருக்கா?'' என்று நீங்கள் கேட்கலாம். ஆம்;) அல்லது யூபிலி வருடத்தின் போது, வரப்போகும் விடுதலையை அது அறிவிக்கிறது. அப்பொழுது அவர்கள் திரும்பிச் செல்லலாம். அந்த ஒரு பொருளின் மேல் நாம் காலை நேரம் முழுவதையும் செலவிடலாம். ஆனால் நாம் எக்காளத்துக்கு செல்ல வேண்டும். அதற்கு அவசியமான அடிப் படையாகிய முத்திரைகளையும் சபையும் குறித்து நீங்கள் அறிந்து கொண்டீர்கள். இப்பொழுது நாம் எக்காளத்துக்குச் செல்வோம். 112 எக்காளம் தொனிக்கிறது; எக்காளச் சத்தம் யுத்தம் அல்லது பண்டிகை நாளைக் குறிக்கிறது. அதன் அர்த்தம் என்னவெனில், ஜனங்கள் ஒன்றுகூட வேண்டும். ''எக்காளம் விளங்காத சத்தமிட்டால், எவன் யுத்தத்திற்கு ஆயத்தம் பண்ணுவான்?'' என்று பவுல் கேட்கிறான் (1 கொரி. 14:8)அல்லது சமாதான காலத்தின்போது, அல்லது வேறு எந்த காலத்திலும், யாருக்கும் தெரியும். எக்காளம் என்ன சத்தமிடுகிறதென்று உங்களுக்குத் தெரிய வேண்டும். எனவே, எக்காளம் தொனிக்கும் . போது, இன்று பூமியில் ஏதோ ஒன்றைக் காண்கிறோம். ஒரு பெரிய உபத்திரவம் எங்கோ நேரிடுகிறது. எல்லோருக்கும் அது தெரியும். எல்லோருமே பயந்த உணர்ச்சி யைக் கொண்டுள்ளனர். முழு உலகமே பயந்த உணர்ச்சியைக் கொண்டதாயுள்ளது. எங்கோ தவறுள்ளது என்று நாமறிவோம். பென்டகனிலும், எல்லாவிடங்களிலும், தவறுள்ளது என்று. நாமறிவோம். 113 எக்காளம் என்ன சத்தமிடுகிறது என்பதை அறிந்து கொள்ள ஒரே வழி, இசைத்தாளில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதைக் காண்பதாகும். அவ்வளவு தான். அது ''பீட்டரும் ஓநாயும்'' என்பது போன்ற பெரிய இன்னிசை (Symphony). பாருங்கள்? அந்த இசையை இயற்றியவரும், அதை இயக்கும் இயக்குநரும் ஒரே ஆவியில் இருக்க வேண்டும். இயக்குநர் இயற்றியவரின் ஆவியில் இராவிடில், அவர் தவறான தாளத்தைக் கொடுக்கிறார். அப்பொழுது எல்லாமே தவறாகி விடுகிறது. - 114 இன்றைய விஷயம் அதுவே. இயற்றியவரின் ஆவியில் இல்லாத அநேக இயக்குநர்களை நாம் பெற்றுள்ளோம். அவர்கள், ''எங்கள் ஸ்தாபனம் இதை விசுவாசிக்கிறது'' என்கின்றனர். நீங்கள் என்ன கூறினாலும், வேதாகமம் மாத்திரமே சரியாயுள்ளது. நமக்கு முன்னால் வைக்கப்பட்டுள்ள இசைத்தாளில் எழுதியுள்ளபடி தாளத்தைக் கொடுங்கள். அப்பொழுது தேவனுடைய மகத்தான இன்னிசை நாடகம். சரியாக நடைபெறும், அப்பொழுது நாம் இந்த மணி நேரத்தையும் நாம் எங்குள்ளோம் என்ப தையும் காண முடிகிறது. 115 இப்பொழுது கவனியுங்கள், ஜனங்களை ஒன்றாக அழைப் பதற்கு எக்காளம் உபயோகப்படுகிறது - அவர்களை ஒரு காரியத்துக்காக ஒன்று கூடச் செய்தல். சில நேரங்களில் அது யோசேப்பு போன்ற முக்கியமான ஒருவரின் வருகையை அறிவிக்கிறது. அது ஏசாயாவில் உரைக்கப்பட்டுள்ள அந்த பெரிய எக்காளத்துக்கு அடையாளமாயுள்ளது. (அதைக் குறித்து சற்று கழிந்து நாம் பேசுவோம்). அந்த பெரிய எக்காளம் ஊதப்படும்போது, அங்கு கொடியேற்றப்பட்டு, எல்லா ஜாதிகளும் எருசலேமில் கூடுவார்கள் என்று ஏசாயா கூறியுள்ளான் (ஏசா. 27:13). அது ஆயிரம் வருட அரசாட்சி தொடங்கும்போது - அந்த பெரிய எக்காளம். 116 எக்காளப் பண்டிகைக்காக அழைப்பது. ஏதோ ஒன்று அணுகுவதைக் காண்பிக்கிறது.... நீங்கள் குறித்துக்கொள்ள விரும்பினால், வெளிப்படுத்தல் 8:7. முதலாம் எக்காளம் ஊதப் பட்டபோது, இரத்தங் கலந்த கல்மழையும் அக்கினியும் உண் டாகி பூமியில் கொட்டப்பட்டது என்று நாம் காண்கிறோம்; யாத்திராகமத்தில் தேவன் தமது ஜனங்களை யாத்திரைக்காக கூப்பிட்ட போது நடந்தது மாதிரியே. 117 இந்த ஏழு எக்காளங்கள் இந்த சபைக்கும் இந்த காலத்துக்கும் பொருத்தமல்லாததன் காரணம், அது இஸ்ரவேல் ஜனங்களுக்கு மாத்திரமே. அது ஜனங்களை அழைத்து அவர்களை ஒன்று கூட்டுதலாம். இதற்கு ஒரே ஒரு அர்த்தம் உண்டு. இன்னும் சில நிமிடங்களில் உங்களிடம் கூற விரும்புகிறேன். அப்பொழுது இந்த ஏழு எக்காளங்கள் நாம் வாழும் இந்த காலத்துக்கு பொருத்தமல்ல என் பதை நீங்கள் கண்டு கொள்வீர்கள். 118 அநேகர் இவ்விஷயத்தில் என்னுடன் கருத்து வேற்றுமை: கொண்டுள்ளனர் என்று நானறிவேன். ஆனால் இது... எனக்குத் தெரியும்... நீங்கள் அவ்வாறு கூறுவதனால் நான் கூறுகிறேன். ஏனெனில் இது என் சொந்த கருத்தல்ல. என் சிந்தனை என் சொந்த சிந்தனையல்ல. என் சொந்தமாக இதை நான் கூறவில்லை. வேறொருவர் கூறினதை நான் எடுத்துக் கூறுகிறேன். அந்த வேறொருவர், நம்முடன் பேசி, இந்த காரியங்கள் அனைத்தையும் செய்து, நம்மிடம் பிரத்தியட்சமாகும் தேவனே. பாருங்கள்?" எனவே அது சரியென்று எனக்குத் தெரியும் - எக்காளம்... என்பது இஸ்ரவேல் - ஒன்று கூடுதல். இஸ்ரவேலரை ஒன்று கூட்டவே இந்த எக்காளம். 119 கவனியுங்கள், முதலாம் எக்காளம் ஊதப்பட்டபோது, இரத் தம், அக்கினி, கல்மழை எல்லாமே பூமியில் கொட்டப்பட்டது. பாருங்கள்? அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? இஸ்ர வேலரை ஆவிக்குரிய எகிப்திலிருந்து (பாருங்கள்?) தங்கள் தாய் நாட்டுக்கு திரும்பக் கொண்டு வந்து கொண்டிருந்தார். 120 இதை நான் இங்கு கூற விரும்புகிறேன். ஊதப்பட்ட எக்காளம் அனைத்துமே ஆறாம் முத்திரையின் கீழ் முழங்கின், ஏனெனில் ஏழாம் முத்திரையில் அமைதல் உண்டானது. அது யாருக்குமே தெரியவில்லை. அது தான் கிறிஸ்து வரப்போகும் நிமிடம் அல்லது மணிநேரம். அப்படித்தான் அவர் நமக்கு வெளிப்படுத்தி கொடுத்தார். ஆனால் ஒவ்வொரு எக்காளமும் ஆறாம் முத்திரையின் கீழ், 'யூதர்களின் உபத்திரவத்தின்போது, முழங்கின.  121 இப்பொழுது வெளிப்படுத்தல் 8ம் அதிகாரம் 7ம் வசனம் தொடங்கி கவனியுங்கள். முன்பு அது இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே அழைத்தலாம். இப்பொழுது ஆவிக் குரிய விதத்தில் இஸ்ரவேலர் வெளியே அழைக்கப்படுகின்றனர். அவர்கள் பாவநிவர்த்தி பண்டிகைக்கு வருவதற்காக அவர்களை ஆயத்தப்படுத்துகின்றார். 122 கவனியுங்கள், முதலில் எக்காளப்பண்டிகை, அது பெந்தெகொஸ்தே. அதை தொடர்ந்து ஐம்பது நாட்கள் கழித்து பாவநிவர்த்தி பண்டிகை. அந்த பாவ நிவர்த்தி பண்டிகையைக் குறித்து இங்கு படியுங்கள். நமக்கு ஒருக்கால் நேரமிருந்தால், நாம் அதை வேதத்திலிருந்து லேவியராகமம் 23லும், லேவியராகமம் 16லும் படிக்கலாம். ' முதலாவதாக எக்காளப்பண்டிகை, அதன் பிறகு பாவநிவர்த்தி பண்டிகை. இவை பெந்தெகொஸ்தே பண்டிகைக்கு பின்பு வருகின்றன. பாவநிவர்த்தி பண்டிகை எக்காளப் பண்டிகைக்குப் பின்பு வருகின்றது.  123 இப்பொழுது கவனியுங்கள், அவர்களை ஒன்று கூட்டுவதற்கே எக்காளம் ஊதப்பட்டது. முதலாம் எக்காளம் ஊதப்பட்டது. அப்பொழுது எகிப்தில் நிகழ்ந்தது போலவே கல்மழையும், இரத்தமும், அக்கினியும் பூமியின் மேல் கொட்டப்பட்டு, அவர்களை பாவ நிவர்த்தி பண்டிகைக்கு அழைக்க ஆயத்தமானது. பாருங்கள்? அவர்கள் உண்மையான பாவ நிவர்த்தியைப் புறக்கணித்தனர். இப்பொழுது ஆண்டுகள் நீட்டப்பட்டு, அவை பெந்தெகொஸ்தே ஆண்டாக அமைந்தன. பாருங்கள்? அடுத்ததாக வருவது யூதர்களுக்காக எக்காளம் முழங்குதல்; இது சபையை வெளியே அழைத்தலாகும், (இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள்). அதன் பிறகு அவர் அவர்களை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்கு கொண்டு சென்றார். இது சபையை அவர் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்கு கொண்டு செல்வதற்கு அடையாளமாயுள்ளது. ஒவ்வொரு எக்காளமும் ஆறாம் முத்திரையின் கீழ் முழங்கினது என்பதை ஞாபகம் கொள்ளுங்கள்; அப்பொழுதுதான் அவை முழங்கின. 124 வேத வாக்கியங்களின் தொடர்ச்சியை இப்பொழுது கவனியுங்கள். அவை ஒன்றாக உள்ளன. இஸ்ரவேலருக்கு ஏழாம் எக்காளத்தின் கீழ் நடப்பது தான், சபைக்கு ஏழாம் முத்திரையின் கீழ் நடப்பதாகும். ஏழாம் முத்திரையின் கீழ் நாம் காண்கிறோம், பலிபீடத்தின் கீழுள்ள ஆத்துமாக்கள் அங்கிகளைப் பெற்றுக்கொள்கின்றனர்; அவர்களுக்கு அங்கிகள் கொடுக்கப்பட்டன. அவர்கள் அதை சம்பாதித்தார்கள் என்றல்ல. ஏனெனில் தேவன் கிருபையின் மூலம் புறஜாதிகளுடன் தொடர்பு கொண்டிருந்த காலத்தில் அவர்கள் இருந்தனர்-யூதர்களுடன் அல்ல. இஸ்ரவேல் ஜனங்கள் ஒரு தேசமாக இரட்சிக்கப்படுகின்றனர். தேவன் இஸ்ரவேலருடன் ஒரு தேசமாக ஈடுபடுகிறார். புறஜாதிகள் 'அவருடைய நாமத்துக்கென்று உள்ள ஜனங்கள், அவருடைய நாமத்துக்கென்று உள்ள ஒரு தேசம் அல்ல. 125 ஹிட்லரும் மற்றவர்களும் யூதர்களைத் துன்புறுத்தி அப்படிப்பட்ட செயல்களைப் புரிந்தபோது... கவனியுங்கள், அவர்கள்... ஸ்டாலின், ஹிட்லர் போன்ற சர்வாதிகாரிகள் எழும்பி (நமக்கு நேரமிருந்தால், புதிதாக வந்துள்ள சிலருக்கு அதை மறுபடியுமாக கூறலாம். அதை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம்), அதே காலத்தில் ஜெர்மனியிலும் மற்ற நாடுகளிலும்... யூதர்கள் எல்லா நாடுகளிலும் சிதறியிருந்தனர். ஆனால் கடந்த இருபது ஆண்டுகளாக யூதர்களுக்கு விரோதமாக கொடூரமான துன்புறுத்தல் எழுந்தது. 126 அவர்களுடைய சரீரங்களை சுட்டெரித்து, அவர்கள் சாம்பலை நிலத்துக்கு உரமாக உபயோகித்த அந்த இடங்களுக்கு நான் சென்றிருக்கிறேன் - யூத பிள்ளைகள், பெண்கள் எல்லோருமே. ஆனால் அவர்கள் அதை மறுக்கின்றனர். அது நடந்த இடத்திற்கு அவர்களைக் கொண்டு சென்று காண்பியுங்கள். அது இஸ்ரவேலருக்கு விரோதமாக வழக்கமாக நடந்த துன்புறுத்தல். ஏனெனில் யூதனை பாவநிவர்த்திக்கு அழைக்கவேண்டிய நேரம் அதுவே. அவன் இயற்கை ஆட்டுக்குட்டியின் பாவநிவர்த்தியின் கீழ் இன்னமும் இருக்கிறான். ஆனால் உண்மையான தேவ ஆட்டுக்குட்டியே பாவநிவர்த்தி அளிக்கக்கூடியவராயிருக்கிறார். யூதனோ அதைப் புறக்கணித்தான், அந்த இரத்தப்பழி அன்று முதல் அவன் மேல் உள்ளது. 127 கவனியுங்கள், ஜனங்களை ஆயத்தப்படுத்துதல். அப்படி யானால் ஏழாம் எக்காளமும் ஏழாம் முத்திரையும் எவ்வளவோ பிழையின்றி பொருந்துவதைப் பாருங்கள். யூதர்களின் துன்புறுத்துதல். வெளிப்படுத்தல் 9ம் அதிகாரம் 13ம் வசனத்தில் (இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள்), ஆறாம் எக்காளத்தின் கீழ் (வெளிப்படுத்தல் 9:13), ஆறாம் எக்காளத்தின் கீழ் ஐபிராத்து நதியண்டையிலே கட்டப்பட்டிருந்த 200,000 குதிரை வீரர்கள் அவிழ்த்து விடப்பட்டனர்(வேதாகமத்தில் வெளி 9:16ல், இருபது கோடி என்றுள்ளது - தமிழாக்கியோன்). உலகத்திலே மொத்தம் 200,000 குதிரை வீரர்கள் இல்லை, ஆனால் இங்கு 200,000 குதிரை வீரர்கள் உள்ளனர். இதை கவனியுங்கள் (நீங்கள் இதைக் குறித்துக் கொண்டு, பின்பு படிக்க விரும்பு கிறேன்). அவை இயற்கை குதிரைகள் அல்ல. அவைகளுடைய வாய்களிலிருந்து அக்கினி புறப்பட்டது. குதிரையின் மேல் ஏறியிருந்தவர்கள் அக்கினி நிறமான மார்க்கவசங்களை உடைய வர்களாயிருந்தனர். குதிரைகளின் வால்கள் பாம்புகளுக்கு ஒப்பானவைகளாகவும், அதன் முனையில் பாம்பின் தலையுள்ளவைகளுமாயிருந்தன. அவை கடிக்கும். பாருங்கள்? அவை ஆவிக் குதிரைகள், பிசாசின் ஆவிகள், குதிரை வீரர்கள். இத்தனை ஆண்டுகளாக ஐபிராத்து நதியண்டையில் கட்டப்பட்ட இயற் கைக்கு மேம்பட்ட பிசாசுகள். அது என்ன? பழைய ரோம சாம்ராஜ்யம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு, யூதர்கள் துன்புறுத்தப் படுதல். அவை ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டு காலமாக ஐபிராத்து நதியண்டையில் கட்டப்பட்டிருந்தன, அவைகளால் வாக்குத்தத்தத்துக்கு கடந்து செல்ல முடியவில்லை. அது மற்றப் பக்கத்துக்கு செல்ல முயன்று கொண்டிருந்த மதசம்பந்தமான ஒரு கூட்டம். ஐபிராத்து ஏதேன் வழியாக பாய்ந்து வருகிறதென்று உங்களுக்குத் தெரியும். அவை அங்கே கட்டப்பட்டிருந்தன- துன்புறுத்தும் 200,000 பிசாசுகள். 128 ஆறாம் எக்காளத்தின் கீழ் என்ன நடக்கிறதென்று பாருங்கள். அவை யூதர்களின் மேல் அவிழ்த்து விடப்பட்டன. யூதர்கள் துன்புறுத்தப்பட்டனர். இரண்டாயிரம் ஆண்டுகளாக 'கட்டப்பட்டிருந்த இயற்கைக்கு மேம்பட்ட பிசாசுகள், பிறகு ஸ்டாலின், ஹிட்லர் போன்றவர்களால் யூதர்களின் மேல் அவிழ்த்து விடப்பட்டன. 129 நீங்கள், “அது ரோம மார்க்கம் அல்ல'' எனலாம். பழைய அஞ்ஞான ரோமன் நாட்களில் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தின அதே ஆவி தான் இது. இப்பொழுது அது யூதர் களின் மேல் அவிழ்த்து விடப்பட்டது. (மாம்சத்துக்குரிய இஸ்ர வேலரையும் ஆவிக்குரிய சபையையும் இப்பொழுது நாம் பிரிப்பதை கவனியுங்கள்). 130 'ஆறாம் முத்திரையின் கீழ் தேவ வசனத்தினிமித்தம் இரத்த சாட்சிகளாக மரித்த ஒவ்வொருவரும் சத்தமிட்டு அங்கிகள் பெற்றுக் கொண்டது ஞாபகமுள்ளதா? (ஐந்தாம் முத்திரையின் கீழ்- தமிழாக்கியோன்). அது கிருபையினால் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. ஏனெனில் புறஜாதிகளிலிருந்து மணவாட்டியை அழைக்கும் பொருட்டு, இவர்கள் சுவிசேஷத்தைக் காணக்கூடாதபடிக்கு குருடாக்கப்பட்டிருந்தனர். கிறிஸ்துவுக்கு முற்றிலும் விரோதமாயிருந்த அவர்களுக்கு முத்திரையின் கீழ் அங்கிகள் கொடுக்கப்பட்டதாக வேதம் கூறுகின்றது. அதற்கு காரணம் என்னவெனில், அவர்கள் குருடாக்கப்பட்டதாக வேதம் கூறுகின்றது. உங்கள்' நிமித்தம் அவர்கள் குருடாக்கப் பட்டனர்! அவர்கள் அதைப் பெற்றுக் கொள்வார்கள் என்று நீதியுள்ள தேவன் அறிவார். ஏனெனில் உங்கள் நிமித்தம் அவர்கள் குருடாக்கப்பட்டனர். வேதம் அவ்வாறு கூறுகின்றது. 131 அந்த ரோம சாம்ராஜ்யம் அங்கு எதனால் கட்டப்பட்டிருந்தது? மதசம்பந்தமான வல்லமையினால். அஞ்ஞான ரோமாபுரி போப்பாண்டவரின் ரோமாபுரியாக மாறி, அதன் கிறிஸ்தவ பாரம்பரியங்களால் கட்டப்பட்டிருந்தது-அதாவது கிறிஸ்தவ மார்க்கத்தின் ஒரு பாகத்துடன் ரோமாபுரியிலிருந்த மூடநம்பிக்கைகளை ஒன்றாக இணைத்து, பெண்களின் வழிபாடு, கிறிஸ்துமஸ் கொண்டாடுதல், பரிசுத்தமான நாட்கள் போன்ற வைகளை ஏற்படுத்தியது. அந்த பாரம்பரியத்தினால் அது கட்டப் பட்டிருந்தது, அதை அவிழ்த்து விட முடியவில்லை, ஏனெனில் அது கிறிஸ்தவ கொள்கைகளுக்கு விரோதமாயிருந்தது. அதே தேவனற்ற. அஞ்ஞான ஆவி! எசேக்கியல், மற்றவர் உரைத்த தீர்க்கதரிசனங்களின்படி, அது உலகிலுள்ள தேசங்கள் எங்கும் பரவினது. அந்த ஆவியைக் குறித்து ஒன்றுமே அறியாத யூதர் களின் மேல் அது அவிழ்த்து விடப்பட்டது. அது தான் அந்த முத்திரையின் கீழ் அடங்கியுள்ள இரகசியம். பாருங்கள்? அதை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். இப்பொழுது இந்த எக்காளத்தை உங்களுக்குக் காண்பிக்கப் போகிறேன்-கடைசி எக்காளத்தின்போது என்ன நடக்கிறதென்று. இந்த எக்காளங் கள் யூதர்கள் மேல் அவிழ்த்து விடப்படுகின்றன (உங்களால் காணமுடியவில்லையா?). புறஜாதிகள் மேல் அல்ல. முத்திரைகள் திறக்கப்படும்போது புறஜாதி முத்திரிக்கப்படுகிறான். காலம் முடிவு பெறுகிறது; சபை அழைக்கப்படுகிறது. 132 அன்றொரு நாள் நான் கண்ட தரிசனம் உங்களுக்கு ஞாபகமுள்ளதா? அதன் முன் காட்சி (Preview)? போன ஞாயிறுக்கு முந்தின ஞாயிறு; எத்தனை பேருக்கு ஞாபகமுள்ளது? அது அப்படியே நிறைவேறிக் கொண்டிருக்கிறது, அதை நாம் பார்த்தோம். சபை என்றழைக்கப்படும் அந்த அசுத்தமான கூட்டம் வருவதைக் கண்டேன் (மிகவும் ஆபாசமானது). பிறகு ஒவ்வொரு தேசத்திலிருந்தும் மணவாட்டி, அவர்களுடைய தேசத்து உடைகளை அணிந்து கொண்டு, கர்த்தருக்கு முன்பாக நடந்தனர். நீங்கள் கவனிப்பீர்களானால், 'உபத்திரவ காலத் துக்கு முன்பு சபை எடுத்துக் கொள்ளப்படவேண்டும் என்று நினைத்தேனே! எடுத்துக்கொள்ளப்படுதல் ஒன்றிருக்கும் என்று நான் நினைத்தேன்'' என்று அவர்கள் கூறும் காலம் வரும். 133 ''அது ஏற்கனவே நடந்து விட்டது. அதை நீங்கள் அறியவில்லை.'' அப்படித்தான் அவர் ஒரு முறை யோவான் ஸ்நானனைக் குறித்து கூறினார். 134 அவர்கள், ''எலியா முந்தி வரவேண்டுமென்று தீர்க்கதரிசிகள், வேதபாரகர் சொல்லுகிறார்களே'' என்று கேட்டனர். 135 "அவன் வந்தாயிற்று'' என்றார் அவர். சீஷர்களும் கூட அதை அறியவில்லை. “அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அலனுக்குச் செய்தார்கள்.' (மத். 17: 12). எடுத்துக் கொள்ளப் படுதலும் அவ்வாறே இருக்கும். நினையாத மணி வேளையில்... அவர் அப்படி செய்வதாக வாக்களித்துள்ளார். எலியாவை அப்படி காண்பிப்பதாக அவர் வாக்களிக்கவில்லை, ஆனால் மண வாட்டியை அப்படி எடுத்துக் கொள்ளப்போவதாக அவர் வாக்களித்துள்ளார்- நீங்கள் நினையாத நாழிகையிலே, ஒரு இமைப்பொழுதிலே எடுத்துக் கொள்ளப்படுதல் நிகழும். அப்பொழுது நீங்கள் விடப்படுவீர்கள். அது தான் அந்த நேரம்! 136 இரண்டாயிரம் ஆண்டுகளாக, இந்த ஆவி ரோம மக்களின் மூலம், ரோம சபையின் மூலம் அசையமுடியவில்லை. ஆனால் அதே ஆவி முதலில் ரோமாபுரியிலிருந்த சர்வாதிகாரி முசோலினியின் மேல் வந்து.... 137 நடக்கப் போகும் ஏழு சம்பவங்களைக் குறித்து அவர் 1933ல் எனக்குக் காண்பித்தது உங்களுக்குத் தெரியுமல்லவா? அவைகளில் ஐந்து ஏற்கனவே நிகழ்ந்து விட்டன. டாக்டர் லீ வேயில் அதைக் குறித்து ஒரு புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறார். பாருங்கள்? ஐந்து சம்பவங்கள் பிழையின்றி நிகழ்ந்து விட்டன. இன்னும் இரண்டு சம்பவங்களே நிகழ வேண்டும். அவருடைய வருகைக்கு முன்பு இவை நிகழுமென்று அவர் கூறினார். இதோ நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம். ஆறாம் சம்பவம் நிகழவேண்டிய நேரம் வந்து விட்டது போல் தோன்றுகிறது. பாருங்கள்? பிழையின்றி அப்படியே. யுத்தங்கள் போன்றவை கூட, அது எப்படி நடக்கு மென்று. அது ஒரு அணுவும் பிசகாமல் அப்படிமே நடந்தது. ஒரு முறை கூட அது தவறவில்லை. 138 ஜனங்களே, கவனியுங்கள், நாம் ஒவ்வொரு மணி நேரமும் கணக்கு எடுத்குப் பார்க்க வேண்டியதாயுள்ளது. நாம் எங்குள் ளோம் என்று நமக்குத் தெரியாது-மிக அருகாமையில்! - அவை அவிழ்த்து விடப்படுகின்றன ...ஆறாம் முத்திரையின் கீழ் இந்த 200,000 பிசாசின் ஆவிகளும் ரோமாபுரி, ஜெர்மனியில் தொடங்கி- ஹிட்லர். கவனியுங்கள், அவர்கள் ராஜாக்களைப் போல் அதிகாரம் பெற்றிருந்தனர். ஆனால் முடிசூடப்படவில்லை என்று வேதம் கூறுகின்றது. சர்வாதிகாரி முடிசூடப்பட்ட ராஜாவல்ல, அவன் ராஜாவைப் போல் அதிகாரம் பெறுகிறான். 139 ஓ, ஒன்றைக் கூற தேவனுடைய ஆவி என்னில் அசைவாடுகிறது (உங்களுக்குத் தெரியுமா?) அதை எப்படி கூறுவதென்றோ , என்ன கூறுவதென்றோ எனக்குத் தெரியவில்லை. அதை கூறாமல் விட்டு விடுவது நல்லது. 140 கவனியுங்கள், 200,000 பிசாசுகள் யூதர்கள் மேல் அவிழ்த்து விடப்பட்டன. அவர்கள் அவர்களை சுட்டெரித்தனர், தொழு மரத்தில் தூக்கி கொலை செய்தனர். அவர்களுடைய இரத்தக்குழாய்களில் வாயுவைப் பாய்ச்சினர். அவர்களைக் கொல்வதற்கு வாய்வு இல்லாதவரைக்கும் அவ்வாறு செய்தனர். தோட்டாக்கள் தீரும் வரைக்கும் அவர்களைச் சுட்டுக் கொலை செய்தனர். அவர்களால் முடிந்த அனைத்தும் செய்தனர். அவர்களுடைய உடல்களை சுட்டெரித்தனர், அவைகளை வேலிகளில் தொங்க விட்டனர்- பிள்ளைகளையும் குற்றமற்றவர்களையும். அவர்கள் யூதர்கள் என்னும் காரணத்தால் கொலை செய்யப்பட்டனர். ஆனால் அவர்கள் தகுதியற்றவர்களாயிருந்த போதிலும், அவரு டைய கிருபையின் நிமித்தம் ஒவ்வொருவருக்கும் ஒரு அங்கியைத் தருவதாக தேவன் வாக்களித்துள்ளார். நாம் காணவேண்டு மென்பதற்காக அவர்கள் குருடாக்கப்பட்டனர். அந்த ஏழாம் முத்திரை இன்னும் திறக்கப்படவில்லை, உங்களுக்குத் தெரியும்; அது அவருடைய வருகை. 141 அவர்கள் இன்னும் அதன் கீழ் இருக்கையில்...அவர் யோவா னுக்குக் காண்பித்தது போல நமக்கு முன்னதாக அந்த காட்சியைக் காண்பித்தார். அவர் அவனை மேலே கொண்டு சென்று... ஒரு முறை கடற்கரையில் நடந்து கொண்டிருந்தபோது, பேதுரு, உமது மார்பிலே சாய்ந்து கொண்டிருக்கிற இவன் காரியம் என்ன?'' என்று கேட்டான். 142 அவர், ''நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால் உனக்கென்ன?'' என்றார் (யோவான் 21:22). பாருங்கள் , அதுவரை அவன் இருக்கவில்லை. ஆனால் அவர் அவனை மேலே கொண்டு சென்று, இவர் வரும் வரைக்கும் நடக்கவிருக்கும் சம்பவங்களை அவனுக்குக் காண்பித்தார். அவனுக்கு முழு திட்டத்தையும் படிப்படியாகக் காண்பித்தார். 143 கவனியுங்கள், இயற்கை வல்லமை, இயற்கை தேசமாகிய இஸ்ரவேல் மீது அவிழ்த்து விடப்பட்டது. அதை செய்தது எது? அது சென்று யுத்தம் செய்து, கொலை செய்து துன்புறுத்தியது. 144 இந்த மார்க்க சம்பந்தமான ஆதிக்கத்தில்... நான்... தேவன் உங்கள் கண்களைத் திறப்பாரென்று நம்புகிறேன். ஏனெனில் இது இந்த சபைக்கு பேசப்படுவது மாத்திரமல்ல, இந்த ஒலி நாடா உலகம் முழுவதும் செல்கின்றது. நான் யாருடைய மனதையும் புண்படுத்த விரும்பவில்லை, சத்தியத்தை மாத்திரம் உங்களிடம் கூற விரும்புகிறேன். மதசம்பந்தமான ஆதிக்கம், பழைய அஞ்ஞான ரோமபுரியிலிருந்து புதுப்பிக்கப்பட்டு தொடங்கப்பட்ட ஒன்று. அது யூதர்களை துன்புறுத்தியது. அது எப்பொழுதுமே அவர்களுடைய சத்துரு (ரோமாபுரி பற்கள் கொண்ட சிங்கமாக ஜனங்களை மிதித்து அழித்து போடுவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது). அது எப்பொழுதுமே தேவனுடைய சத்துரு. உலகிலிருந்த சர்வாதிகாரிகள் அதே ஆவியைக் கொண்ட வர்களாய் யூதர்கள் மேல் பாய்ந்தனர். ஏனெனில் அந்த மார்க்க சம்பந்தமான முறைமை அப்பொதும் இருந்தது. அது அவிழ்த்து விடப்பட்டது. அது என்ன செய்தது? 145 அவன் உபாயத்தினால் வஞ்சகத்தை கைகூடிவரப்பண்ணி, இச்சகம் பேசுகிறவனாக வருவான் என்று அவர் கூறியுள்ளார். அவன் என்ன செய்து விட்டான்? அவன் பிராடெஸ்டெண்டுகளை உலக சபைகளின் ஆலோசனை சங்கத்துக்கு கொண்டு வந்து விட் டான். அந்திக்கிறிஸ்துவின் ஆவி இருவர் மேலும் அமர்ந்து மற்றவர்களுக்கு நேர்ந்தது போல், அவர்களை அடிக்கப்படும்படிக்கு (slaughter) கொண்டு செல்கிறது. இது மணவாட்டியை அழைக் கும் நேரத்தில் நடக்கிறது. எப்படி? மார்க்க சம்பந்தமான சபையின் ஆவிக்குள் அவர்கள் செல்கின்றனர். அது யார் மேல் அவிழ்த்து விடப்படுகிறது? ஸ்தாபனங்களின் மேல் அல்ல, மணவாட்டியின் மேல். ஆனால் இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். மணவாட்டி அந்த காலத்துக்குள் பிரவேசிக்கமாட்டாள். வேதம் அப்படித்தான் கூறுகிறது, சபை பிரவேசிக்கும், ஆனால் மணவாட்டி பிரவேசிக்கமாட்டாள்! உங்களால் அதை காண முடியவில்லையா? போதகர்களே, உங்களால் காண முடியவில்லையா, சகோதரர்களே? 146 ' சபை பரிபூரணப்படுவதற்காக உபத்திரவத்துக்குள் செல்ல வேண்டும் என்று நீங்கள் கூறுகின்றீர்கள். இயேசு கிறிஸ்துவின் இரத்தம் மணவாட்டியை பரிபூரணப்படுத்துகிறது. மனைவியைத் தெரிந்து கொள்ளும் ஒரு மனிதன் அவளுக்கு நிறைய தண்டனையைக் கொடுப்பதில்லை. அவள் ஏற்கனவே அவனிடம் கிருபை பெற்றிருக்கிறாள். அவன் அவளை விவாக நிச்சயம் செய்து கொள்கிறான் . ஏதாகிலும் நடந்தால், அவள் தவறு செய்யக் கூடிய ஒவ்வொரு இடத்திலிருந்தும் அவளை விலக்கி விடுகிறான். அவனுடைய கிருபை அவள் மேல் அவ்வளவு அதிகமாக பெருகியுள்ளது. அவ்வாறே தேவனுடைய கிருபையும் மணவாட்டியின் மேல், அவ்வளவு அதிகமாக பெருகியிருக்கும். 147 நாம் அபாத்திரர், நமக்கு நரகம் மாத்திரமே தகுதியாயுள்ளது. ஆனால் அவருடைய கிருபை நம்மைத் தாங்குகிறது. பாருங்கள், எவ்வளவு பேர் இழக்கப்பட்ட நிலையிலும், குருடராகவும் உள்ளனர்! நான் இரட்சிக்கப்பட்ட அந்த நேரத்தில் எத்தனை பாவிகள் இவ்வுலகில் இருந்தனர்? தேவன் என்னை ஒரு நோக்கத்துக்காக இரட்சித்தார். அவருடைய சித்தப்படி, அந்த நோக்கத்தை நான் நிறைவேற்றத் தீர்மானித்துள்ளேன். மற்றது எப்படி சென்றாலும் எனக்குக் கவலையில்லை. நான் அதை செய்ய எண்ணியுள்ளேன். 148 இந்த நேரத்தில் நான் சபைகளையும், அவைகளின் பகட்டையும், அவை ஐசுவரியமுள்ளவர்களாயிருந்து, அவைகளுக்கு ஒரு குறைவுமில்லை. என்று சொல்லிக் கொள்வதையும் ஆனால் அவை நிர்பாக்கியமுள்ளவைகளாகவும் பரிதபிக்கப்படத்தக்க வைகளாகவும், குருடாகவும் இருப்பதையும், அவை உங்களைத் தோள்களின் மேல் ஏற்றி, நீங்கள் அவைகளுடன் ஒத்துப்போக வேண்டுமென்று கூறுவதையும் காணும் போது, நான் ஒரு நோக்கத்துக்காக பிறந்திருக்கிறேன் என்பது தெளிவாகிறது. அதாவது, அவைகளுடைய செயலைக் கடிந்து கொண்டு, ஜனங்களை நான் வெளியே அழைக்க வேண்டும். ஆம், அதை நான் செய்கிறேன். 149 ஞாபகம் கொள்ளுங்கள், இயேசு இவ்வுலகில் வந்தபோது, ஜனங்களில் நூறில் ஒரு பாகம் கூட அவர் இங்கிருந்ததை அறிய வில்லை. அவர் தெரிந்து கொள்ளப்பட்டவர்களைப் பெற்றுக் கொள்ள வந்தார். அவர், "என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான், பிதா வானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் (இறந்த காலம்) (ஆங்கிலத்தில் hath given me- கொடுத்த யாவும் என்று எழுதப்பட்டுள்ளது - தமிழாக்கியோன்) என்னிடத்தில் வரும்'' என்றார் (யோவான் 6:44,37). அவர்கள் அதை அறிந்து கொள் வார்கள்; அவர்கள் செவி கொடுப்பார்கள். 150 கவனியுங்கள், மார்க்க சம்பந்தமான ஆவி அவிழ்த்து விடப்படுதல், யுத்தத்துக்குப் பிறகு இருபது ஆண்டுகள் கழித்து, மார்க்க சம்பந்தமான ஆவி அவிழ்த்து விடப்படுகின்றது. எதன் கீழ்? ஏழாம் முத்திரை, யூதனுக்கு ஏழாம் எக்காளம். சந்திரன் அந்தகாரப்படுவதைக் கவனியுங்கள். எதன் கீழ்? அது வரையப்பட்டுள்ளதைப் பார்த்தீர்களா? மனுஷகுமாரன் சபையை விட்டு துரத்தப்படுகிறார். அது என்ன? மார்க்க சம்பந்தமான. குழுவுடன் சேர்ந்து கொள்ளுதல். உலக சபைகளின் ஆலோசனை சங்கத்துடன் சேர்ந்து கொள்ளுதல், அந்த ஐக்கியத்தின் அசைவு. அது ஒவ்வொரு மனிதனையும் விரட்டுகின்றது... அது எதைக் காண்பிக்கிறது? நீங்கள் உங்கள் சுவிசேஷ போதகங்கள் ஆகிய அனைத்தையும் கைவிட வேண்டும். இரண்டு பேர் ஒருமனப்பட்டிருந்தாலெழிய, ஒருமித்து நடந்து போக முடியுமா? அவர்களால் முடியாது. அவர்களால் முடியாது என்பதாக இயேசு கூறியுள் ளார். மெதோடிஸ்டு சபையும் பாப்டிஸ்டு சபையும் எப்படி ஒருமித்து நடந்து போகமுடியும்? கிறிஸ்துவின் சபை எவ்வாறு பிரஸ்பிடேரியன்களுடன் நடந்து போகமுடியும்? கத்தோலிக்கர்கள் எப்படி பிராடெஸ்டெண்டுகளுடன் நடந்துபோகமுடியும்? பிராடெஸ் டென்டுகள் எப்படி பிராடெஸ்டென்டுகளுடன் நடந்துபோக முடியும்? ஆனால் மணவாட்டி வார்த்தையுடன் நடந்து செல்ல முடியும். வார்த்தை கிறிஸ்து. அது இசைந்திருக்க வேண்டும். அது மார்க்க சம்பந்தமான முறைமையல்ல, அது வார்த்தை. நீங்கள் வார்த்தையுடன் இசைந்திருந்தால் தான் வார்த்தையுடன் நடந்து போகமுடியும். இயேசு அவ்வாறு கூறியுள்ளார். எனவே அதுவே சரியாயுள்ளது. 151 கவனியுங்கள், அதோ அவள் அங்கிருக்கிறாள். இந்த தளர்ந்த முனைகளையெல்லாம் கவனத்துக்கு கொண்டு வர அவள் அவிழ்க்கப்பட்டிருக்கிறாள். ''ஓ, அதனால் வித்தியாசம் ஒன்றுமில்லை. '' அப்படித்தான் சாத்தான் ஏவாளிடம் கூறினான். '' அதனால் வித்தியாசம் ஒன்றுமில்லை. அது பரவாயில்லை. நிச்சயமாக தேவன் நல்ல தேவன். அவர் நம்மெல்லாரையும் நேசிக்கிறார்'' அவர் அப்படி செய்வதில்லை. 152 தேவன் நல்ல தேவன் என்பதைக் குறித்து நீங்கள் அதிகம் கேட்கிறீர்கள். அவர் நல்ல தேவன் தான். ஆனால் அவர் நல்லவராயிருப்பதால், நீதியுள்ளவராயிருக்க வேண்டும். நீதி யில்லாமல் நன்மை எதுவுமில்லை, தண்டனையளிக்கும் பிரமாணமில்லாமல் நீதி இருக்க முடியாது, எனவே நாம் அந்த நேரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், 153 இந்த இயற்கைக்கு மேம்பட்ட பிசாசுகளை . வேகமாய் பார்ப்போம். ஐக்கிய நாடுகளின் சார்பில்; கிழக்கு, மேற்கு நாடுகள் ஒன்றாக சேர்ந்துள்ளன... தானியேல் கண்ட சொரூபத் தின் வலது இடது பாதங்களைப் போல, அவை, எவ்வாறு இணங்காமல், ஒன்றோடொன்று கலவாமல் இருந்தன!  ஐசன்ஹவர்' என்னும் சொல்லுக்கு . 'இரும்பு' என்று அர்த்தம் ‘ க்ரூஷேவ்' என்றால் ' களிமண்' என்று அர்த்தம். அவர் காலணியைக் கழற்றி மேசையை அடித்தார் (சகோ.பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை தட்டுகிறார்-ஆசி). க்ரூஷேவ் ஐக்கிய நாடுகளின் சபையில் அப்படி செய்தார். 154 ஓ, என்னே, நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தில், சபையும் அதன் நிலையும். ஆனால் தேவனுக்கு ஸ்தோத்திரம், மணவாட்டி தன்னை ஆயத்தம் பண்ணினாள். இன்னும் நீண்ட காலம் இல்லை, சற்று பொறுத்திருங்கள். அது எப்பொழுது என்று எனக்குத் தெரியாது (அது யாருக்குமே தெரியாது.) ஆனால் அது அருகாமையில் உள்ளதென்று நாமறிவோம். 155 இயற்கையில் நடந்தவைகளைக் கவனியுங்கள், அது யூதர்களுக்கு என்ன செய்ததென்று. அவர்கள் தேவனுடைய பிரமாணங்களைக் கைக்கொண்டு வந்தனர். எத்தனை சபைகள் எழும்பின போதிலும். கிறிஸ்துவைக் காணக்கூடாதவாறு அவர்கள் குருடாக்கப்பட்டு, பிரமாணங்களைக் கைக்கொண்டு வந்தனர். தேவன் அவர்கள் ஒவ்வொருவருக்கும் அங்கியையளித்தார். ஏனெனில் அவர்கள் இரத்த சாட்சிகளாக மரித்தனர். பாருங்கள்? அவர்கள் நமது நிமித்தம் குருடாக்கப்பட்டனர். 156 இங்கு வேதத்தைத் தவிர வேறொன்றையுமே அறியாத சபை உள்ளது. மார்க்க சம்பந்தமான முறைமைகள், ஸ்தாபனங்கள் ஆகியவைகளைக் குறித்து அவர்கள் ஒன்றுமே அறியார்கள். இவையனைத்தும் அவர்களுக்கு - தூரமாயுள்ளது. அவர்கள் அவரை- அவரை மாத்திரமே- அறிந்துள்ளனர். 157 இன்று ஜனங்கள், மறுரூபமலையின் மேல் இருந்த பேதுருவையும் மற்றவர்களையும் போல் உள்ளனர். இயற்கைக்கு மேம்பட்ட சம்பவத்தை அவர்கள் மறுரூப மலையின் மேல் கண்ட போது.. அவர்கள் உற்சாகம் மேலிட்டது. ஒருவன், “நாம் தீர்க்கதரிசிகளுக்கு ஒரு சபையும், மோசேக்கு ஒரு சபையும் கட்டுவோம்'' என்றான், பெந்தெகொஸ்தேயினர் அதை தான் செய்தனர். அவர்கள், '' நாம் ' அசெம்பிளிஸ் ஆஃப் காட்' என்னும் ஒரு சபையும், 'சர்ச் ஆஃப் காட்' என்னும் சபையும் நிறுவுவோம். நாம் 'ஒருத்துவம்', 'திரித்துவம்' போன்றவைகளை ஏற்படுத்திக் கொள்வோம்'' என்றனர். ஆனால் அவன் பேசிக் கொண்டிருக்கையில், யேகோவா, “இவர் என்னுடைய நேசகுமாரன், இவர் வார்த்தை , இவருக்குச் செவி கொடுங்கள்'' என்றார், 158 நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்நேரத்தில், மார்க்க சம்பந்தமான ஆவிகள் அவைகளை ஒன்று சேர்த்து. கொல்லப் படுவதற்காக அவைகளைக் கொண்டு செல்கின்றன. இந்த தேசத்தில் அது ஏற்கனவே நடந்து கொண்டிருக்கிறது. நீங்கள் அந்த ஸ்தாபனத்துடன் சேராமற் போனால், இந்த சபைகளெல்லாம் மூடப்படவேண்டும். அது ஒரு ஐக்கியம். அது மிருகத்தின் முத்திரை, அது உங்களைத் தள்ளி வைத்து விடும். மிருகம் என்றால் என்னவென்று இப்பொழுது அறிந்து கொண்டீர்கள் அல்லவா? அது ஒரு வல்லமை, மார்க்க சம்பந்தமான வல்லமை. அது உண்மையானதைப் போல் இருந்து, கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும் என்று இயேசு கூறியுள்ளார். ஆனால் நாம் வஞ்சிக்கப்படாதபடிக்கு. அந்த நாளில் நமக்கு ஒன்றைத் தருவதாக அவர் வாக்களித்துள்ளார். அது தான் வார்த்தையும், அதை நமக்கு வெளிப்படுத்தி தர கிறிஸ்துவுமே.அவை கண்கள் காணக்கூடாத இயற்கைக்கு மேம்பட்ட பிசாசுகள். ஆனால் அவை என்ன செய்கின்றன என்பதை உங்க ளால் காண முடியும். பாருங்கள்? 159 கவனியுங்கள். அந்த கூட்டம் குதிரை மேல் சவாரி செய்து கொண்டு, தங்களுடன் இணங்காதவர்களை மிதித்துப்போட ஆயத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், வேறொரு கூட்டம் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது- வெளிப்படுத்தல் 19. அங்கு தான் அடுத்த முறையாக சபையைக் குறித்து நாம் கேள்விப்படுகிறோம். அவள் மற்ற குதிரைகளைப் போன்ற குதிரைகள் மேல் வரவில்லை. அவர் வெள்ளைக் குதிரையின் மேல் வந்தார். பரலோகத்தின் சேனைகள் வெள்ளைக் குதிரைகளின் மேல் ஏறி அவருக்குப் பின் சென்றார்கள் என்று வேதம் கூறுகின்றது (வெளி, 19: 11,14). அது சரியா?' 'ஐபிராத்து நதியண்டையி லிருந்த கூட்டம் இரண்டாயிரம் ஆண்டுகளாக கட்டப்பட்டிருந்த போது, சபையும் ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டு காலமாக, சபை காலங்களில், இரத்த சாட்சிகளைக் கொன்று, பரிசுத்த ஆவியைக் கட்டி வைத்திருந்தது. ஆனால் இது ஐபிராத்து நதியண்டை கட்டி வைக்கப்படவில்லை, ஆனால் கோட்பாடுகள், கொள்கைகள் ஆகிய வாசல்களில் கட்டிவைக்கப்பட்டு, மனிதனால் உண்டாக்கப்பட்ட முறைமைகளின் காரணமாக பரிசுத்த ஆவி சபையில் கிரியை செய்ய முடியாமற் போயிற்று. ஆனால் அவள் விடுதலையாகப்போகின்றாள். அவள் மறுபடியும் வரப்போகிறாள் . அப்படித்தான் வேதம் கூறுகின்றது. இவ்விருவரும் போர்களத்தில் சந்திக்கப்போகின்றனர்-லூசிபரும், மிகாவேலும்; துவக்கத் தில் நடந்தது போலவே. 160 அவை இரண்டாயிரம் ஆண்டுகளாக கட்டப்பட்டிருந்தன.ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகள், சரியாக இரண்டாயிரம் ஆண்டுகள் அல்ல, ஏனெனில் ரோமர்கள் ஆண்டு கொண்டிருந்த னர். (தீத்து கி.பி. 96ம் ஆண்டு வரைக்கும்), அவர்கள் யூதர்களைக் கொன்றனர். யூதர்களைக் கொன்றது யார்? தீத்து யார்? அவன் ரோமதளபதி. இரத்தம் வாசல் வரைக்கும் பெருக்கெடுத்து ஓடினது....... பெண்கள், குழந்தைகள் அனைவருமே கொல்லப்பட்டனர். அவர்கள் அப்படி செய்வார்கள் என்று எசேக்கியல் 9 கூறவில்லையா? “நீ நகரம் எங்கும் உருவப்போய், பெருமூச்சு விட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடு'' (எசே.9:4)- பரிசுத்த ஆவி. பின்பு கட்டப்பட்டிருந்த சங்கரிக்கும் மனிதர்கள் வந்து (அவர்கள் புறப்படும் நேரம் வரைக்கும் அவர்களைப் பிடித்து வைத்திருங்கள்.) அங்கிருந்த அனைவரையும் வெட்டிப் போட்டார்கள்- பெண்கள், குழந்தைகள் அனைவரை யும். அது மறுபடியும் நடக்கிறது. மார்க்க சம்பந்தமான முறைமை புறப்பட்டு வந்து தேவெனென்னப்படும் அனைத்தையும் மிதித்து அழித்துப் போடுகிறது. ஓ, அவர்கள் தங்கள் முறைமை களையும், நிறுவனங்களையும், ஸ்தாபனங்களையும் கொண்டுள்ளனர், ஆனால் அதற்கும் வேதத்துக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. அவர்கள் அதை விசுவாசிப்பதில்லையென்று உங்களிடம் வேகமாக கூறிவிடுவார்கள், ஆம், ஐயா! அவர்கள் சபை கூறுவதையே கூற வேண்டும் என்கின்றனர். தேவன் கூறுவதையே நாம் கூற வேண்டும். அதுவே வார்த்தை 161 மணவாட்டி வார்த்தையுடன் இருக்கிறாள். அவர்கள் ஒன்றாயிருக்கிறார்கள். அவர்கள் எப்படி ஒன்றாயிருக்க முடியும்? இங்கு எழுதப்பட்டுள்ள வார்த்தை உங்களுக்குள் வரும்போது. நீங்களும் வார்த்தையும் ஒன்றாகி விடுகிறீர்கள் (அதை தான் அவர் வாக்களித்துள்ளார்). 162 தேவனுக்கு ஒரு வியாக்கியானி அவசியமில்லை. அவர்கள், " நாங்கள் இதை இவ்வாறு அர்த்தப்படுத்துகிறோம்'' என்கின்றனர். உங்கள் சொந்த வழியில் வியாக்கியானம் செய்து அர்த்தப்படுத்த உங்களுக்கு உரிமையில்லை. தேவன் தமது சொந்த வியாக்கியானத்தை அளிக்கிறார். 163 “வெளிச்சம் உண்டாகக்கடவது'' என்று தேவன் கூறின போது, வெளிச்சம் உண்டானது. அதை யார் வியாக்கியானம் செய்தது? ''ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள்'' என்று அவர் கூறினார். அவ்வாறே அது நடந்தது. அதற்கு வியாக்கியானி யாரும் அவசியமில்லை. அவை ஏற்கனவே வியாக்கியானம் செய்யப்பட்டு விட்டன. இந்த நாளில் இவையாவும் நிகழும் என்று அவர் கூறினார். அவை அப்படியே நிகழ்கின்றன. அதற்கு வியாக்கியானம் அவசியமில்லை. அது தானாகவே வியாக்கியானம் செய்து கொள்கிறது. 164 ஒ, என்னே! வெளிப்படுத்தல் 9:1, ஐந்தாம் எக்காளத்தின் கீழ்...அவர்களுடைய ராஜா- கவனியுங்கள் (இப்பொழுது வெளிப்படுத்தல் 9:1), 200,000 குதிரைகளைக் கொண்ட மசுத் தான கூட்டத்தின் ராஜா. அவர்களுக்கு ஒரு ராஜா இருந்தான். நீங்கள் கவனிப்பீர்களானால், அவன் வானத்திலிருந்து பூமியின் மேல் விழுந்த ஒரு நட்சததிரம், "அதிகாலையின் மகனாகிய விடி வெள்ளியே (லூசிபரே), நீ வானத்திலிருந்து விழுந்தாயே!'' (ஏசா. 14:12) (ஓ. டாக்டர் ஸ்மித் அதைக் குறித்து எப்படி குழப்பமுற்றார் என்று தெரியவில்லை. பரவாயில்லை. பாருங்கள்? அது அவருடைய காலத்தில் வெளிப்பட வேண்டியது அல்ல; பாருங்கள்? சரி)... பாதாளக் குழி (ஆங்கிலத்தில் bottomless pit அதாவது அடிபாகம் இல்லாத குழி என்னும் அர்த்தத்தில் எழுதப்பட்டுள்ளது- தமிழாக்கியோன்). அவைகளுடைய ராஜா பாதாளத்தின் ராஜா. வெளி. 17.8 (நான் ஏதோ ஒன்றை இங்கு எழுதி வைத்துள்ளேன். அதை நான் படிக்கப்போகின்றேன். இங்கு வெளி. 17:8 என்று எழுதி வைத்துள்ளதைக் காண்கிறேன்: அது என்ன கூறுகிறதென்று பார்க்க விரும்புகிறேன். ஏனெனில் அடுத்ததுக்கு எப்படி செல்வதென்று தெரியவில்லை....). 165 நீ கண்ட மிருகம் முன்னே இருந்தது. இப்பொழுது , இல்லை; அது பாதாளத்திலிருந்து (bottomless pit) ஏறி வந்து நாசமடையப் போகிறது. உலகத்தோற்ற முதல் ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள், இருந்ததும், இராமற்போனதும், இனி இருப்பதுமாயிருக்கிற மிருகத்தைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள். 166 பாருங்கள்? இருந்ததும், ஒரு போப்பாண்டவர் மரித்து. வேறொருவர் சிங்காசனம் ஏறுகிறார்- இருந்ததும், இராமற் போனதும், இனி இருப்பதும், இராமற்போனதும், இனி இருப்பதும் அதன் ஒழுங்கு மாறுவதில்லை. போப்பாண்டவர், அதே காரியம் தான், எல்லாமே- எல்லாமே அதே முறைமையில் செல்ல வேண்டும். 167 அது எங்கிருந்து வருகிறது? பாதாளத்திலிருந்து, இவை களின் தலைவன் பாதாளத்தைச் சேர்ந்தவன் என்று வேதம் இங்கு கூறுகிறது. அவன் அவைகளின் ராஜா. அவன் மூன்று கிரீடங்களுடன் அமர்ந்து, பிராடெஸ்டெண்டுகளைத் தன்னுடன் சேர்த்துக் கொள்கிறான். ஒரு லூத்தரன் போதகர் அன்றொரு நாள் என்னிடம், 'நான் ஏன் கழுத்துப்பட்டை அணிகிறேன் என்று ஜனங்கள் கேட்கின்றனர். அப்படி செய்யாமற்போனால், மற்றவர்களி லிருந்து அவர்கள் என்னை எப்படி வித்தியாசப்படுத்த முடியும்?'' என்றார். நீங்கள் அப்பொழுது இருந்தீர்களா? ஆம் அது கேலித்தனமாயுள்ளது அல்லவா? எனக்கு வாந்தி பண்ண வேண்டும் போல் ஆகிவிட்டது. நான் மேடையை விட்டு நடந்து சென்றேன். அவர்கள், ''ஒரு வித்தியாசமும் இருக்கக் கூடாது'' என்றனர். 168 மார்டின் லூத்தர் இதைக் கேட்டிருந்தால், அவர் கல்லறையில் புரண்டு, “மாய்மாலக்காரனே, நீ என்னைச் சேர்ந்தவன் அல்ல'' என்று கூறுவார். பாருங்கள்? அது இப்பொழுது எங்கு வந்துள்ளது என்று தெரியுமா? ''ஒரு வேற்றுமையும் இல்லை.'' 169 வேற்றுமை உண்டு! தனிப்பட்ட நபர்களிடையேயும் வேற்றுமையுண்டு. தேவன், " பர்னபாவையும் பவுலையும் எனக் காக பிரித்து விடுங்கள்'' என்றார் (அப்.13:2). அது உண்மை . அவர்கள் ஊழியம்... பிரித்தல். தேவன் பிரிப்பவர், ஒன்று கலப்ப வர் அல்ல...... பேதுரு.... இன்று சபையானது நீச்சல் உடைகள், குட்டை கால் சட்டைகள் போன்றவைகள் அணிந்து வெளியே செல்வதற்கு அனுமதிக்கும், சமுதாயத்துடன் ஒத்துப்போகும் ஒருவரையே விரும்புகிறது. ஆனால் தேவனோ , "எனக்காக பிரித்து விடுங்கள்'' என்கிறார். உங்களை உலகத்தினின்று வேறு பிரித்துக் கொள்ளுங்கள்! 170 வெளிப்படுத்தல்...அவர்களுடைய ராஜா பாதாளத்திலிருந்து வந்தவன் என்றும் அவன் நாசமடைவான் என்றும் நாம் காண்கிறோம், உள்ளே சென்று, வெளியே வந்து, உள்ளே சென்று, வெளியே வந்து, வெளியே சென்று...கவனியுங்கள், நாம் கூற முயன்று கொண்டிருப்பதுடன், லேவியராகமம் 23ம் அதிகாரத் தில் கூறப்பட்டுள்ள வார்த்தையுடைய வரிசைக்கிரமம் எவ்வளவு பிழையின்றி பொருந்துகிறது! 171 இப்பொழுது நாம் கவனிக்கிறோம்....நாம் வேதாகமத்தை சற்று திருப்பி, அதை சற்று நேரம் படிப்போம். பிரசங்கியில்-. பிரசங்கியல்ல, லேவியராகமம் 23. இதை இங்கு கவனியுங்கள் (லேவியராகமம் 23ம் அதிகாரம்), இப்பொழுது...(இதை நாம் இழந்து போக விரும்பவில்லை. கர்த்தர் அதை நமக்காக எப்படி எழுதி வைத்திருக்கிறாரோ, அவ்வாறே அதை புரிந்து கொள்ள நாம் விரும்புகிறோம். லேவியராகமத்தை நான் யாத்திராக மத்தில் நிச்சயமாக காணமுடியாது இல்லையா?) சரி. இப்பொழுது லேவியராகமம். பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி (23ம் வசனம்) நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்ல வேண்டியது என்ன வென்றால்: உங்களுக்கு ஏழாம் மாதம் முதலாந்தேதி எக்காளச் சத்தத்தால் ஞாபக்குறியாகக் கொண்டாடுகிற பண்டிகை என்கிற சபை கூடும் பரிசுத்த ஓய்வு நாளாய் இருப்பதாக....(பாருங்கள்?) அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யாமல், கர்த்த ருக்குத் தகனபலி செலுத்த வேண்டும் என்று சொல் என்றார் (இப்பொழுது கவனியுங்கள்). பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: அந்த ஏழாம் மாதம் பத்தாந் தேதி உங்களுக்குப் பாவநிவிர்த்தி செய்யும் நாளும்.... 172 பார்த்தீர்களா? பாவநிவிர்த்தி பின் தொடருகிறது... இப்பொழுது கவனியுங்கள். எக்காளச் சத்தத்துக்குப் பின்பு பாவநிவிர்த்தி வருகின்றது. பாருங்கள்? எவ்வளவு அழகாக அமைந்துள்ளது! பாருங்கள்? பாவநிவிர்த்தி நாள் எக்காள சத்தத்துக்குப் பின்பு வருகிறது. ஐம்பது நாட்களாக எக்காளம் ஊதப்படுதல், பெந்தெகொஸ்தேயன்று நமக்கு எக்காளம் ஊதப்பட்டதற்கு அடையாளமாயுள்ளது-அது ஐம்பது நாட்கள். யூதர்கள் அதைப் புறக்கணித்தனர். இப்பொழுது அவர்களைப் பாவநிவிர்த்திக்கு, மறுபடியும் அழைக்க எக்காளம் முழங்கு கின்றது (பாருங்கள்) -- அவர்கள் புறக்கணித்த அந்த பாவ நிவிர்த்திக்கு. நமது கண்கள் திறக்கப்பட வேண்டும் என்பதற்காகவே அவர்கள் புறக்கணித்தனர்; அவர்களுடைய கண்கள் மூடப்பட்டன. இந்த காலத்தில், முத்திரைகள் திறக்கப்பட்டு எக்காளங்கள் முழங்கின. இப்பொழுது, மேசியா வருவதற்கு முன்பு எக்காளங்கள் முழங்குகின்றன ஏனெனில் அவர்கள் பாலஸ்தீனாவில் இருக்க வேண்டும். அவர்களை எகிப்திலிருந்து வெளியே துரத்த தேவன் பார்வோனின் இருதயத்தை கடினப்படுத்த வேண்டிய தாயிற்று என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அவர்களை வாக்குத் தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்கு அனுப்புவதற்காக தேவன் பெடாலின், முசோலினி ஆகியோரின் இருகயங்களைக் கடினப் படுத்தினார். அங்கு தான் 144000 பேர் இருக்க வேண்டும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு-2500 ஆண்டுகளுக்குப் பிறகு-இஸ்ரவேல் ஒரு நாடாக, தன் சொந்த கொடியையும், சொந்த இராணுவத்தையும் கொண்டுள்ளது. அது ஐக்கிய நாடுகளின் சபையில் சேர்க்கப்பட்டுள்ளது. முதன் முறையாக அப்படியுள்ளது. பூமியிலே பறந்த மிகப்பழமையான கொடி, இப்பொழுது மீண்டும் பறக்கிறது. தாவீதின் ஆறுமுனை நட்சத்திரம். அவர் அந்த கொடியை கடைசி நாட்களில், அவள் திரும்பி வந்த பிறகு, உயர்த்துவதாக வாக்களித்துள்ளார். நாம் முடிவில் இருக்கிறோம். அதில் சந்தேகமேயில்லை. நாம் இங்கு அடைந்துள்ளோம். 173 கவனியுங்கள், வேகமாக பார்ப்போம். வெளிப்படுத்தல் 9ம் அதிகாரம் (ஆறாம் எக்காளத்தின் கீழ், அவர்களுடைய ராஜா பாதாளத்திலிருந்து வந்தவன்). லேவியராகமம், அதன் அர்த்தம் வார்த்தையுடன் எவ்வளவு பிழை யின்றி அமைந்துள்ளது! ஏனெனில் (பாருங்கள்?) பெந்தெகொஸ்தே யூபிலியைத் தொடர்ந்து உடனடியாக பாவ நிவிர்த்தி நாள் வருகிறது. பண்டிகையின் வரிசைக்கிரமம்பெந்தெகொஸ்தே பண்டிகைக்கும் பாவநிவிர்த்தி நாளுக்கும் இடையே-பாவ நிவிர்த்திக்காக எக்காளம் ஊதப்பட்டது பெந் தெகொஸ்தே பண்டிகையின் போது - நீண்ட காலம் இருந்தது 174 கவனியுங்கள், பெந்தெகொஸ்தே பண்டிகைக்கும் பாவ நிவிர்த்திக்காக அழைப்பதற்கு எக்காளம் ஊதப்பட்டதற்கும் இடையே நீண்ட காலம் இருந்தது. வெளிப்படையாகக் கூறினால், பெந்தெகொஸ்தே பண்டிகையிலிருந்து பாவ நிவிர்த்தி பண்டிகை வரைக்கும் ஐம்பது நாட்கள். ஐம்பது நாட்கள் சரியாக ஏழு ஓய்வு நாட்கள். ஏழு ஓய்வு நாட்கள் ஏழு சபை காலங்களாம். புரிகிறதா? பாருங்கள், பாருங்கள்? 175 யூதர்கள் குருடாக்கப்பட்டு, பெந்தெகொஸ்தே முதற்பலன்கள் சபையின் மேல் ஊற்றப்பட்டுக் கொண்டிருந்த இவ்வளவு காலம் காத்துக் கொண்டிருந்தனர். நாம் இரத்தசாட்சிகளின் காலம், சீர்திருத்தக்காரரின் காலம் வழியாக கடந்து வந்து, இப்பொழுது வெளியே அழைக்கப்படும் காலத்தை அடைந்துள்ளோம். மூன்று பாகங்கள், அதே ஆவி- பிதா, குமாரன், பரிசுத்த ஆவி போல்-ஒருவரே. பாருங்கள்? ஏழு சபை காலங்கள் ஏழு ஓய்வு நாட்கள். கதிர்க்கட்டை அசைவாட்டும் நாள் துவங்கி சரியாக ஏழு ஓய்வு நாட்கள் வரைக்கும் பெந்தெகொஸ்தே பண்டிகை, பின்பு பெந்தெகொஸ்தே யூபிலி. அதன் பிறகு யூபிலியிலிருந்து பாவ நிவிர்த்தி நாள் வரைக்கும் ஏழு ஓய்வு நாட்கள்- ஐம்பது நாட்கள். ஐம்பது நாட்களின் முடிவில் பாவநிவர்த்தி செய்யப்படு கிறது. புரிகிறதா? 176 இப்பொழுது....... இது சபையில் அவர் தம்மை தேவனுடைய குமாரனாக- பெந்தெகொஸ்தே காலத்திலும் வழிவழியாக வந்த காலங்களிலும் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் மூலம் தம்மை சபைக்கு வெளிப்படுத்தி வந்ததற்கு உதாரணமாய் உள்ளது. பாருங்கள்? சிறிது சிறிதாக அதிகமாகிக் கொண்டே வந்தது. லூத்தரின் கீழ் நீதிமானாக்கப்படுதல், வெஸ்லியின் கீழ் பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்த ஆவியின் அபிஷேகம். இப்பொழுது வெளியே அழைக்கும் நேரம். 177 ஆறாம் முத்திரை திறக்கப்படும் போது, யூதர்களுக்கு உலகத்தில் உபத்திரவம் தொடங்குகிறது. அதே சமயத்தில் சபைக்கு மார்க்க சம்பந்தமான உபத்திரவம் வருகிறது. ஏனெனில் மணவாட்டி ஏற்கனவே அழைக்கப்பட்டு விட்டாள். ஓய்வு நாட்கள் முடிவு பெற்று. யூதர்கள் அழைக்கப்பட ஆயத்தமாயுள்ளது. எங்கே? பாவநிவிர்த்தி பண்டிகைக்கு, ஓ, 'சபையே, நீ அதைக் காணவில்லையா? பாவ நிவிர்த்தி பண்டிகைக்கு அழைக்கப்படுகின்றனர். ஏன்? பாவ நிவிர்த்தியை அடையாளம் கண்டு கொள்ள அவர்கள் இதுவரை செய்து வந்த கோழிக்குஞ்சுகள், வாத்துக்கள் போன்றவை இனி ஒரு போதும் இராது. உலகத் தோற்ற முதல் அடிக்கப்பட்ட தேவ ஆட்டுக்குட்டியை இஸ்ரவேல் கண்டு காள்ளும். 178 கவனியுங்கள், இங்கு ஒருபெரிய காரியம் உள்ளது பாருங்கள்! ஓ, என்னே, பரிசுத்த ஆவி ஸ்தாபனங்களால் இரண்டாயிரம் ஆண்டு காலமாக கட்டப்பட்டிருந்தது. அப்படி கட்டப்பட்டி ருந்ததென்று நாம் காண்கிறோம், இப்பொழுது ஓய்வு நாட்களை - கவனியுங்கள், ஏழு ஓய்வு நாட்கள் அத்தனை காலங்களாக அவர்களால் வெளிவரமுடியவில்லை. ஒரு நாள் உண்டு, அது பகலுமல்ல இரவுமல்ல என்று வேதம் கூறுகிறது. எல்லா வேதவாக்கியங்களும் நிறைவேறவேண்டு மென்று இயேசு , கூறினார். அது சரியா? அப்படியானால் “ஆமென்'' என்று கூறுங்கள் (சபையோர் “ஆமென்'' என்கின்றனர்- ஆசி). ஒரு நாள் உண்டு, அது பகலுமல்ல, இரவுமல்ல. ஆனால் சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும் என்று தீர்க்கதரிசி கூறிவன் (சக. 14: 7), அது என்ன? கிழக்கில் பிரகாசித்த அதே சூரியன் மேற்கில் பிரகாசிக்கின்றது. 179 ஒவ்வொரு முறையும் சூரியன் எழும்பி, கடந்து சென்று மறையும் போது, அது உங்கள் வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாய் உள்ளது. சிறு குழந்தை பலவீனமாக காலையில் பிறக்கிறது; சுமார் எட்டு மணிக்கு, அது பள்ளிக்கூடம் செல்கிறது; 11.30 மணிக்கு அது பள்ளிக்கூடப் படிப்பை முடித்து வெளியேறுகிறது; அப்பொழுது பகல் உஷ்ணம். ஐம்பது வயதில் அது அஸ்தமிக்கத் தொடங்குகிறது; அறுபது, எழுபது, எண்பது, தொண்ணூறு வயதில் அது அஸ்தமித்து மரிக்கிறது. அடுத்த நாள் அது மீண்டும் உதயமாகி ஜீவன், மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் உண்டு என்பதைக் காண்பிக்கிறது. 180 கவனியுங்கள், நாகரீகம் சூரியனுடன் சென்றது. நாம் பெற்றுள்ள மிகப் பழமையான நாகரீகம் சீனாவே என்று எவரும் அறிவர். பரிசுத்த ஆவி எங்கே விழுந்தது? கிழக்கத்திய மக்களின் மேல். சுவிசேஷம் சூரியனுடன் பிரயாணம் செய்துள்ளது. அது எங்கிருந்து வந்தது? கிழக்கிலிருந்து ஜெர்மனிக்கு; ஜெர்மனியிலி ருந்து இங்கிலாந்துக்கு (கால்வாயை மூன்று முறை கடந்தது); மத்திய தரையிலிருந்து(Mediterranean) ஜெர்மனிக்குள்- கிழக்கிலிருந்து மத்தியதரை வழியாக ஜெர்மனிக்குள்; ஜெர்மனியிலிருந்து ஆங்கிலக்கால் வாயைக் கடந்து இங்கிலாந்துக்குள்; ஆங்கிலக் கால்வாயிலிருந்து அட்லாண்டிக் கடல் வழியாக அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குள்; இப்பொழுது அது மேற்கு கடற் கரையிலுள்ளது! - அது நாகரீகமுள்ள நாடுகளைக் கடந்து கொண்டே வந்தது. நாகரீகம் பிரயாணம் செய்தது; சுவிசேஷம் அதனுடன் பிரயாணம் செய்தது. இப்பொழுது எல்லா குப்பையுமே (riffraff) மேற்கு கரையில் உள்ளது. அலைகள் உயர எழும்பி அதைக் கூட்டியுள்ளது. 181 ஆனால் சூரியன் இந்த நாளில் பிரகாசிக்காது என்று தீர்க்கதரிசி கூறியுள்ளான். அது மந்தாரமான ஒரு நாளாயிருக்கும், அவர்களுக்கு போதிய வெளிச்சம் உண்டாயிருந்தது. ஒரு மழை நாளில் உள்ளதுபோல். அவர்களால் சபைகளைச் சேர்ந்து கொண்டு, கர்த்தரை விசுவாசிப்பது போன்றவைகளைச் செய்ய முடிந்தது. ஆனால் சாயங்கால நேரத்தில் மேகங்கள் விலகிச்செல்லும், ஸ்தாபனங்கள் மங்கிப்போகும், அதே சுவிசேஷம், (அவர் லூக்கா 17:33ல் வாக்களித்துள்ளபடி), மாமிசமான அதே வார்த்தை அதே சுவிசேஷம், அதே காரியம் சாயங்கால நேரத்தில், நிழல்கள் தாழ்ந்து வரும்போது, நிகழும் என்று அவர் கூறியுள்ளார்' 182 அதே சுவிசேஷம், கிழக்கத்திய மக்களிடையே முன்பு மாமிசத்தில் வாழ்ந்த அதே கிறிஸ்து, முடிவு காலத்தில் மறுபடியும் மேற்கத்திய மக்களிடையே வாழுவார். 'சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும்'', வேதவாக்கியங்கள் அனைத்துமே தேவ ஆவியினால் அருளப்பட்டிருப்பதால், அவை தவறாது. பெரிய ஐம்பது நாட்கள் கடந்து சென்று விட்டன, பெந்தெகொஸ்தே பண்டிகை கடந்து சென்றுவிட்டது. ஏழு ஓய்வு நாட்கள், பிறகு எக்காளம்-ஏழாம் சபையின் காலத்துக்கு முன்னடையாளம். 183 ஞாபகம் கொள்ளுங்கள், ஞாபகம் கொள்ளுங்கள். ஆறம் எக் காளத்தின் கீழ் யூதன் (நீங்கள் கேட்கிறீர்களா?)- ஆறாம் எக்காளத்தின் கீழ் பெந்தெகொஸ்தேயினர் வேதத்தை புறக்கணிக்கின்றனர் - வெது வெதுப்பானவர்கள். பெத்தெகொஸ்தேயினர் மட்டுமல்ல, மற்றவர்களும் கூட. சபை உலகம் கிறிஸ்துவைப் புறக்கணிக்கின்றது. அவர் வெளியே தள்ளப்படுகிறார், அதே எக்காளத்தில் இல்லை, முத்திரையில், அது திறக்கப்பட்டபோது, இயேசு சபையின் வெளியே நின்றுகொண்டு, உள்ளே வர முயன்று கொண்டிருந்ததைக் காண்பித்தது. அதே சமயத்தில். யூதர்களுக்கு எக்காளம் முழங்கி, அவர்கள் பாவநிவிர்த்தியை அடையாளம் கண்டு கொள்கின்றனர். மகிமை! அல்லேலுயா! ஓ என்னே ! 184 பரிசுத்த ஆவி இந்த ஸ்தாபன நதிகளண்டை ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளாக கட்டப்பட்டிருந்தது. ஆனால் சாயங்கால நேரத்தில், சாயங்கால செய்தியின் மூலம் அது கட்டவிழ்க்கப்படவேண்டும்; பரிசுத்த ஆவி மீண்டும் சபைக்கு வந்து, கிறிஸ்துவே மாமிச சரீரத்தில், சாயங்கால நேரத்தில் வெளிப்படுகிறார். அவர் அப்படி கூறியுள்ளார், அதை வாக்களித் துள்ளார். 185 அதில் மூன்று கட்டங்கள் இருந்தன என்று நான் கூறினேன்: இரத்தசாட்சிகளின் காலம், அவர்கள் இரத்தசாட்சிகளாக மரித்தனர்; பின்பு சீர்த்திருத்தக்காரரின் கட்டம், இப்பொழுது வெளியே அழைக்கும் நேரம். அது லவோதிக்கேயா காலத்தில் முடிவு பெறும்போது, வெளிப்படுத்தல் 10ம் அதிகாரத்தின்படி, வேதத்திலுள்ள எல்லா இரகசியங்களும் மணவாட்டிக்குத் தெரிந் திருக்கும். அது சரியா? 186 வெளிப்படுத்தல் 10 (கூர்ந்து கவனியுங்கள்), மணவாட்டி வார்த்தையினால் வெளியே அழைக்கப்படுதல், கிறிஸ்துவே மணவாட்டியை வெளியே வரும்படி அழைத்து, எபி. 13:8ஐ (அதா வது, அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்; அவர் அதே கிரியைகளைச் செய்கிறார், அவர் மாறாதவராயிருக்கிறார் என்று; '• என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்." பாருங்கள்?) மற்றும் லூக்கா 22லூக்கா 17:30, மல்கியா 4, எபிரேயர் 4 ஆகிய வாக்களிக்கப் பட்ட எல்லா வேதவாக்கியங்களையுமே வெளிப்படையாக்குகிறார். இது ஆறாம், ஏழாம் முத்திரைகளின் நடுவிலும், ஆறாம், ஏழாம் எக்காளத்தின் நடுவிலும் நடக்கும். 187 பெந்தெகொஸ்தே பண்டிகை ஏழாம் எக்காளத்தின் காலத்தின்போது--இல்லை, ஏழாம் முத்திரை தொடங்குவதற்கு முன்பு முடிகிறது. ஏனெனில் அடுத்தது கர்த்தருடைய வருகையைக்குறித்த இரகசியம். எக்காளமும் யூதர்களுக்காக முழங்குகிறது. ஆறாம் எக்காளம் முழங்கும்போது, அது வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய குமாரனை அவர்களுக்குத் தெரியப்படுத்துகின்றது. அரை மணி நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எல்லா எக்காளங்களுமே ஆறாம் முத்திரையின் கீழ் முழங்குகின்றன என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். ஆறாம் முத்திரை தேவ ரகசியங்களை நிறைவேற்றுகிறது-ஆறாம் முத்திரையின் கீழ் ஏழாவது திறப்பதற்கு சற்று முன்பு. 188 கவனியுங்கள், லேவியராகமம் 23ம் அதிகாரம் 26ம் வசனம். வேதவாக்கியம் எவ்வளவு கிரமமாக அமைந்துள்ளது! பெந்தெ கொஸ்தேயின் நீண்ட காலத்துக்குப் பிறகு... இஸ்ரவேல் அதை புறக்கணித்தனர்... அவர் பெந்தெகொஸ்தே பண்டிகையின் மூல் மாக புறஜாதி சபையை அழைத்தார். 189 பெந்தெகொஸ்தே பண்டிகை என்னவென்று எத்தனை பேர் புரிந்து கொண்டீர்கள்? அது அறுவடையின் முதற்பலன், உயிர்த் தெழுதலின் முதற்பலன், பெந்தெகொஸ்தே பண்டிகை, 190 ஜனங்களே. இதைக் காணத்தவற வேண்டாம்! இந்த ஒலி நாடாவைக் கேட்டுக் கொண்டிருப்பவர்களே, கூர்ந்து கவனியுங்கள்! இது பெந்தெகொஸ்தே பண்டிகையின் காலமாக இருந்து வந்துள்ளது. யூதர்கள் அமைதியாயிருந்தனர்; அவர்கள் அதைப் புறக்கணித்தனர், இப்பொழுது அவர்கள் பாவநிவிர்த்திக்காக அழைக்கப்பட வேண்டியதாயுள்ளது. அந்த பாவ நிவிர்த்தி யாரென்று நாமறிவோம். ஆனால் அவர்கள் அறியவில்லை .பெந்தெகொஸ்தே யூபிலிக்குப் பின்பு முழங்கும் எக்காளம் யூதர்களை ஒன்று சேர அழைக்கிறது. ஹிட்லர் மற்றவர் கீழ் உபத்திரவம் என்னும் எக்காளம் முழங்கி அவர்களைக் கொன்று, வேதவாக் கியம் நிறைவேற யூதர்கள் ஒன்றுசேர வேண்டியதாயிருந்தது என்பதை உங்களால் காணமுடியவில்லையா? இப்பொழுது உங்ககளுக்குப் புரிகிறதா? புரிந்தவர்கள் ஆமென்'' என்று சொல்லுங்கள் (சபையோர் “ஆமென்'' என்கின்றனர்-ஆசி) நல்லது. சரி. 191 கவனியுங்கள், லேவியராகமம் 23ம் அதிகாரத்தில் வேத வாக்கியங்களின் வரிசைக் கிரமத்தை. பெந்தெகொஸ்தேயின் நீண்ட காலத்துக்குப் பிறகு; அது மணவாட்டியை வெளியே அழைப்பதில் முடிவடைகிறது (மணவாட்டி ஒரு ஊழியக்காரனால் வெளியே அழைக்கப்படுகிறாள், புறக்கணிக்கப்பட்டவர்). அடுத்த படியாக பாவநிவிர்த்தி பண்டிகையை இஸ்ரவேலருக்குத் தெரியப்படுத்த வேண்டும், கவனியுங்கள், இது லேவியராகமம் 16ம் அதிகாரத்தில் அவர் கட்டளையிட்ட பாவநிவாரணப் ' பண்டிகைக்கு ஒத்ததாக அமைந்துள்ளது. ஆனால் இந்த இடத்தில் (ஓ, எவ்வளவு பரிபூரணமாக அமைந்துள்ளது! போதகர் களே, பார்த்தீர்களா? இதைக்காணத் தவறவேண்டாம்). லேவியராகமம் 23:26 ல் குறிக்கப்பட்டுள்ள எக்காளங்களின் பண்டிகை; துக்கப்படும் பண்டிகை; கொல்லப்படும் பண்டிகையல்ல,பாவ நிவாரண பலி கொல்லப்பட்டது (லேவியராகமம் 16ம் அதிகாரம், அது இதற்கிணையாக அமைந்துள்ளது). ஆனால் இந்த இடத்தில் தான் இஸ்ரவேல் ஜனங்கள். தங்கள் பாவங்களுக்காசு துக்கப்பட அழைக்கப்படுகின்றனர். 192 இன்று எவ்வளவு பிழையின்றி அமைந்துள்ளது! அது மறுபடியும் கொல்லப்படுவதல்ல (மோசே கன்மலையை இரண்டாம் முறை அடித்தது போல் அல்ல, அது கிரியை செய்ய வில்லை). அது ஒரு மிருகத்தைக் கொல்வதல்ல, ஆனால் பாவநிவாரணத்தை புறக்கணித்ததற்காக துக்கித்தல். ஓ என்னே! 193 இந்த எக்காளம் புறக்கணித்தவர்களுக்கு பண்டிகை. அதன் பின்பு அவர்கள் மேசியா அறியப் படுவார். கவனியுங்கள்! அவர்கள் மேசியாவைக் காணும்போது, அவரை. அறிந்து கொள் 'வார்கள். அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அவர் இம்முறை வல்லமையோடு வருவார். புறஜாதி மணவாட்டிக்காக அவர் வல்லமையோடு வருவார், யூதர்கள் அவரை அடையாளம் கண்டு கொள்ளப் போகின்றார்கள், வேதம் கூறுகிறது (இதைக் குறித்து நாம் ஆறு மாதங்களுக்கு முன்பு பார்த்தோம்). அவர்கள், ''உம் கைகளில் இருக்கிற வடுக்கள் ஏது?'' என்று கேட்பார்கள் (எத்தனை பேருக்கு அந்த செய்தி ஞாபகமுள்ளது? உங்கள் கைகளையுயர்த்துங்கள். நீங்கள் ஞாபகம் வைத்திருக்கிறீர்கள். பாருங்கள்?) “உம் கைகளில் இருக்கிற வடுக்கள் ஏது?'' அவர்,  என் சிநேகிதரின் வீட்டில் காயப்பட்டதனால் உண்டானவைகள்'' என்றார். (சக.13:6). 194 அந்த சமயத்தில் நான் பிரசங்கித்தது உங்களுக்கு ஞாபக மிருக்கும், யாக்கோபு தானியம் வாங்கி வர தன் பிள்ளைகளை எகிப்துக்கு அனுப்பினான். அவர்களை அறியாதவன் போல் யோசேப்பு நடித்தான். இவையனைத்தும் அங்கு சம்பவித்தன. அதன் பின்பு யோசேப்பு தன்னை வெளிப்படுத்தினான். உங்களுக்கு ஞாபகமுள்ளதா? அவர்கள் பயந்து போய் அழத்தொடங்கினார்கள், யாக்கோபின் இக்கட்டுக் காலம். இங்கு யூதர்கள் உபத்திர வத்திற்குள் இருப்பதைக் காண்கிறோம். அவர்களுடைய நிலையென்ன என்பதை அவர்கள் அறியாமலிருக்கின்றனர். 195 ஆனால் அவர்கள் திரும்பி வருகின்றனர்; அந்த பாவநிவிர்த்தி பிரத்தியட்சமாகும் போது. அவர்கள் அதைக் கண்டு, ஒவ்வொரு குடும்பமும் தனித்தனியே பிரிந்து அநேக நாட்கள் புலம்புவார்கள் என்று வேதம் கூறுகிறது - தன் ஒரே பேறானவனை இழந்து புலம்புகிறது போல (சகரியா 12:10-14). ''உம் கைகளில் *இருக்கிற வடுக்கள் ஏது?'' 196 அவர், ''என் சிநேகிதரின் வீட்டில் காயப்பட்டதனால் " உண்டானவைகள்'' என்றார். 197 ஞாபகம் கொள்ளுங்கள். அப்பொழுது மணவாட்டி ஏற்கனவே பரலோகத்தில் இருப்பாள். யோசேப்பின் மனைவி மாளிகையில் இருந்தாள். யோசேப்பு தன்னைச் சுற்றிலும் இருக்கிற யாவரையும் வெளியே அனுப்பி விட்டு, தன்னை தன் சகோதரருக்கு வெளிப்படுத்தினான் (ஆதி.45:1). பார்த்தீர்களா? அவனுடைய மனைவி, பிள்ளைகள் அப்பொழுது மாளிகையில் இருந்தனர். அவர் தம்மை யூதருக்கு வெளிப்படுத்த திரும்பி வரும்போது அப்படியே இருக்கும். அது தான் பாவ நிவாரணம், அதுதான் எக்காள முழக்கம். அங்கு தான் அவர்கள், ''ஓ....'' என்பார்கள். அது தான் பாவநிவாரணம். ''அந்த . வடுக்கள் எங்கு கிடைத்தன?" “என் சிநேகிதரின் வீட்டில்.'' 198 யோசேப்பின் சகோதரர் என்ன கூறினர் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அவர்கள், '' நாம் நிச்சயம் கொல்லப்படுவோம். நாம் பொல்லாப்பு செய்தோம்'' என்றனர். 199 யோசேப்போ, 'இல்லை, ஜீவரட்சணை செய்யும்படி தேவன் இதைச் செய்தார்'' என்றான் (ஆதி.45:5). ஆதியாகமத்திலுள்ள அந்த வரலாறு உங்களுக்கு ஞாபகமுள்ளதா? பாருங்கள், பாருங்கள்? புறஜாதிகளுக்கு-- மணவாட்டிக்கு- ஜீவரட்சணை செய்ய தேவன் இம்முறையைக் கையாண்டார். 200 அவர், 'என் சிநேகிதரின் வீட்டில் இவைகளைப் பெற்றுக் கொண்டேன். ஆனால் பயப்பட வேண்டாம்'' என்றார்.. பாருங்கள்? 201 அவர்கள், ''ஒ என்னே! அவரைக் காண நாம் உண்மையில் தவறி விட்டோமா? அது தான் பாவநிவாரணமா, அதை நாம் இழந்து விட்டோமா? ஓ, தேவனே!'' என்றனர். அவர்கள் தனித்தனியே பிரிந்து சென்று அநேக நாட்கள் துக்கித்தனர். அது என்ன? பாவ நிவாரணம், துக்கம். 202 இம்முறை அவர் வந்து பாவ நிவாரணத்தை வெளிப்படுத்து வது, லேவியராகமம் 16ல் கூறப்பட்டுள்ளது போன்று பாவ நிவாரண பலி செலுத்தப்படுவதில்லை, ஆனால் லேவியராகமம் 23 போன்று, அவர்களுடைய பாவங்களுக்காக அவர்கள் துக்கித் தல். அவர்கள் அதை முன்பு புறக்கணித்தனர். 203 ஓ, நாம் எங்குள்ளோம் என்பதை நீங்கள் காணமுடிகிறதா? எக்காளங்களுக்கும் நமக்கும் சம்பந்தமில்லை என்பதை உங்களால் காணமுடிகிறதா? அவை யாவும் ஆறாம் முத்திரையின் கீழ் முழங்கின. அதை நான் பேச பரிசுத்த ஆவி என்னை அனுமதிக்காத தன் காரணம் உங்களுக்குப் புரிகிறதா? இந்த வேதாகமம் எனக்கு முன்பாக இருக்க, அது உண்மையென்று பரலோகப்பிதா அறிவார். நேற்று முந்தின நாள் அவர் அறைக்கு வந்து என்னுடன் பேசி எனக்கு வெளிப்படுத்தித்தரும் வரைக்கும் நான் அதை அறிந்திருக்கவில்லை. நான் அறைக்கு வெளியே வந்து என் மனைவியிடம், "இப்பொழுது எனக்கு தெரிந்து விட்டது. அவர் இப்பொழுது தான் என்னை அறையில் சந்தித்து எனக்கு அறிவித்தார். இதோ, தேனே'' என்றேன். பாருங்கள் . அது தான் (பாருங்கள்?) அது பிழையின்றி இணைகின்றது. 204 ஓ, அவரில்லாமல் உள்ள ஜனங்களே, வேகமாக உள்ளே வாருங்கள். ஒருக்கால் இதுவே உங்கள் கடைசி தருணமாக இருக்கலாம். அவர் எந்த நேரத்தில் வருவாரென்று உங்களுக்குத் தெரியாது. 205 எக்காளங்களின் பண்டிகை....அவர்கள் தனித்தனியே பிரிந்து சென்று ஜெபித்து புலம்புவார்கள் என்று வேதம் கூறுகிறது... தங்கள் ஒரே பேறானவனை இழந்து விட்டது போல். 206 பாருங்கள்! இன்னும் ஒரு காரியத்தை கூற விரும்புகிறேன். கூர்ந்து கவனியுங்கள், இதை காணத் தவற வேண்டாம். ஏழாம் தூதனின் (ஏழாம் முத்திரையின் தூதன்) செய்தி முதல் (வெளிப் படுத்தல் 10 ஏழாம் முத்திரை) ஏழு எக்காளங்கள் வரைக்கும். இந்த இரண்டு காலங்களுக்கும் இடையே... ஓ, தேவனே! ஜனங்கள் புரிந்து கொள்ளும்படியாக இதை நான் எப்படி கூறவேண்டும்? அது ஆறாம் எக்காளத்துக்கும் (ஆறாம் எக்காளமும் ஆறாம் முத்திரையும் ஒரே நேரத்தில் முழங்குகின்றன;) ஆறாம் எக்காளத்துக்கும் ஏழாம் எக்காளத்துக்கும் இடையே, புறஜாதிகளுக்கு ஒரு தீர்க்கதரிசி தோன்றி, ஜனங்களை மூல பெந்தெகொஸ்தே உபதேசத்துக்கு அழைக்க வேண்டும். வெளிப்படுத்தல் 11ல் கூறப்பட்டுள்ள இரண்டு சாட்சிகள் யூதர்களிடம் தோன்றி அவர்களை இயேசுவிடம் அனுப்பும் போது, சபை எடுக்கப்பட்டிருக்கும்-எல்லோருமே தீர்க்கதரிசிகள். ஆமென்! கர்த்தருடைய வார்த்தை ஒரு போதும் தவறாது. அது ஒரு ஸ்தாபனமாக இருக்காது. நீங்கள் அதை புரிந்து கொண்டீர்களா? 207 உங்கள் வேதாகமத்தை நீங்கள் வாசித்து, ஆறாம் ஏழாம் எக்காளத்துக்கு இடையே யூதர்கள் அழைக்கப்படுகின்றனரா என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஆறாம் ஏழாம் வாதைகளுக்கிடையே நாம் 144,000 பேர்களைக் காண்கிறோம் (உங்களுக்கு ஞாபகமுள்ளதா?). ஐந்தாம் ஆறாம் முத்திரைகளுக்கிடையே ஆறாம் ஏழாம் முத்திரைகளுக்கிடையே- 144000 பேர் அழைக்கப்படுவது உங்களுக்கு ஞாபகமுள்ளதா? அங்குதான் எக்காளங்கள் வருகின்றன, அங்கு தான் (பார்த்தீர்களா?), குதிரைகள் அவிழ்த்து விடப்பட்டு துன்புறுத்துகின்றன. 208 அதற்கிடையில்- பெந்தெகொஸ்தேயினரின் தவறுகளைச் சுட்டிக்காட்டும் ஏழாம் தூதனின் செய்தி ஒன்றிருக்க வேண்டும். இயேசு வெளியில் தள்ளப்பட்டிருப்பார். யாருடைய ஒத்துழைப்பும் அவருக்கிருக்காது. அவர் வெளியில் தள்ளப்பட்டு, புறக்கணிக்கப்படுவார் (வேதம் அவ்வாறு கூறுகின்றது); கிறிஸ்து நமது மத்தியில் வெளிப்பட்டு, இயேசு நமது அனைவரின் மத்தியிலும் வார்த்தையின் தூய்மையில் வெளிப்பட்டு, அதை அறியும்படி செய்தல்...... இது ஒரு ஜோடிப்பு அல்ல, நண்பர்களே. இது கர்த்தர் உரைக்சிறதாவது, வேதவாக்கியம். 209 அதே சமயத்தில்.... இந்த சபை ஏழாம் முத்திரையின் இரகசியத்தை அறிந்தவுடன்; யூதர்கள் ஏழாம் எங்காளத்தின் இரகசியத்தினால் அழைக்கப்படுகின்றனர்-அது இரண்டு தீர்க்கதரிசிகள் எலியாவும் மோசேயும். அவர்கள் திரும்பி வருகின்றனர். அங்கு தான் பெந்தகொஸ்தேயினர் குழப்பமடைந்துள்ளனர். அவர்கள் ஏதோ ஒன்று நிகழ் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சபை ஏற்கனவே சென்றிருக்கும். அது யூதர்களுக்கே! அது மோசேயாக இருக்க முடியாதென்று யாரோ ஒருவருடைய மனதில் எழுந்துள்ளதை உணருகிறேன். அது மோசே தான். உங்கள் எண்ணங்களை அவர் என்னிடம் கூறமுடியும். அதை நான் உணர்ந்து கொண்டே வந்தேன்... சரி. 210 இதை உங்களுக்கு நான் தெளிவுபடுத்தி தரட்டும். அது மோசேதான். இதுதான் உங்கள் எண்ணம். மோசே மரித்ததால் அது அவனாக இருக்க முடியாது என்று நீங்கள் எண்ணுகின்றீர்கள். அது ஏனோக்கு என்பது உங்கள் கருத்து. மோசே ஏற்கனவே மரித்து விட்டான் என்று கூறுகிறீர்கள். ஆனால் அவன் மீண்டும் உயிர் பெற முடியும் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அவன் உயிர்பெற்றான். எண்ணூறு ஆண்டுகள் கழித்து, அநேக ஆண்டுகளுக்குப் பிறகு அவன் மறுரூப மலையின் மேல் தோன்றினான். ஒரு மனிதன் மரித்த பிறகா?'' என்று நீங்கள் கேட்கலாம். ஆம், ஐயா. லாசரு மரித்து, உயிரோடெழுந்து, பிறகு மரிக்க வேண்டியதாயிற்று. நிச்சயமாக! பொல்லாங்கானவர்களும் கூட மறுபடியும் உயிரோடெழுப்பப்பட்டு, இரண்டாம் மரணம் அடையவேண்டும். அது சரியா? எனவே அந்த எண் ணத்தை விட்டு விடுங்கள்; அது மோசேதான். 211 அவர்களுடைய ஊழியத்தை கவனியுங்கள், மோசேயும் எலியாவும் புரிந்த அதே செயல்கள்; அவர்கள் வானத்தை அடைத்தனர், பூமியில் அக்கினியை... அவர்கள் புரிந்த செயல் கள் உங்களுக்குத் தெரியும். 212 அதை யோசித்துப் பாருங்கள்! இது முடிவு காலம், ஜனங்களே. அல்லேலூயா! கர்த்தருடைய மகத்தான நாள் சமீபமாயுள்ளது. நீங்கள் ஒன்று கூடுங்கள். மேசியாவின் பண்டிகை, அவர்கள் அவரைப் புறக்கணிப்பார்கள். அவரே அவர்களுடைய மேசியாவென்பதைக் கண்டு கொள்வார்கள் இப்படிப்பட்ட ஆச் சரியமான காரியங்கள் நடைபெறும் என்று வேதம் கூறுகின்றது. 213 வெளிப்படுத்தல் 11ல், அவர்களுடைய ஊழியம் மோசேயின் ஊழியமும் எலியாவின் ஊழியமுமாக அமைந்திருந்து, ஏழாம் தூதனின் செய்தி மணவாட்டியை பெந்தெகொஸ்தே பாரம்பரியங்களிலிருந்து வெளியே அழைத்தது போன்று, இஸ்ரவேலரை யூதருடைய பாரம்பரியங்களிலிருந்து வெளியே அழைக்கும். இந்த மோசேயும் எலியாவும் இஸ்ரவேலரை ஆட்டுக்குட்டி, செம்மறியாடு, வெள்ளாட்டுக்கடா ஆகிய பாவ நிவாரண பலியிலிருந்து, உண்மையான ஜீவனுள்ள பலியாகிய வார்த்தைக்கு அழைக்கவேண்டும் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். 214 அதே எக்காளத்தின் கீழ் ஏழாம் தூதனின் செய்தி- எல்லாமே அதே காரியம், அதே முத்திரை-அது என்ன செய்ய வேண்டும்? மணவாட்டியை பெந்தெகொஸ்தே பாரம்பரியங்களிலிருந்தும் உலக பாரம்பரியங்களிலிருந்தும் உண்மையான பாவ நிவாரணமாகிய வார்த்தையாகிய கிறிஸ்துவுக்கு - நமது மத்தியில் மாமிசமாகியுள்ள வார்த்தைக்கு-அழைக்கவேண்டும். 215 விஞ்ஞானம் அதை புகைப்படங்களின் மூலம் நிரூபித்து விட்டது. உலகம் முழுவதுமுள்ள சபை அதை அறிந்துள்ளது. நாமும். அதை உறுதியாய் அறிந்துள்ளோம். ஏனெனில் அவர் கர்த்தர் உரைக்கிறதாவது என்று நம்மிடம் கூறினவைகளில் ஒன்றாகிலும் தவறவில்லை. அவர் அந்த நதிக்கரையில், “யோவான் ஸ்நானன் அனுப்பப்பட்டது போல, இதுவும்...?'' என்று கூறவில்லையா? 216 இப்பொழுது கடிகாரத்தை பார்க்கும்போது, பன்னிரண்டு மணி ஆகிறது என்பதைக் காண்கிறேன். நண்பர்களே, நள்ளிரவு இப்பொழுது நம்மிடையே உள்ளது, வேதவாக்கியங்கள் எவ்வளவு பிழையற்றதாக உள்ளன என்பதைப் பார்த்தீர்களா? அது எவ்வளவு பிழையற்றதாக... 217 பாருங்கள், ஏதோ ஒரு ஸ்தாபனம் அங்கு சென்று, யூதர்களை அழைக்கப்போவதில்லை. அது இரண்டு பேர், மோசேயும் எலியா வும், இருவரும் தீர்க்கதரிசிகள். 218 கவனியுங்கள், புறஜாதிகளிலிருந்து மணவாட்டியை அழைக்க அவர் அதையே செய்வதாக மல்கியா 4ல் வாக்களித்துள்ளார். அவர் ஏழாம் சபையின் காலத்தில் சபைக்கு வெளியே தள்ளப் படுவார் என்று வேதம் கூறுகிறது. அவர் சபைக்கு வெளியே தள்ளப்படுவார்; அது முழுவதும் அந்த காரமாகும்... அது எங்கு அந்தகாரப்படும்? அது மார்க்க சம்பந்தமான தற்குள் நுழைந்து, உலக சபைகளின் ஆலோசனை சங்கத்தில் பிரவேசிக்கும். அவள்... அவர் முழுவதுமாக வெளியே தள்ளப்பட்டு விட்டார் - அவருடைய வார்த்தை. அவர்கள் அவருடைய வார்த்தையுடன் இணங்க மாட்டார்கள். அவர்களால் இணங்க முடியாதென்று உங்களுக்குத் தெரியும். அவர்களுடைய சிறு குழுக்களிலேயே அவர்களால் இணங்க முடியவில்லை என்னும்போது, அவர்கள் எவ்வாறு அதில் இணங்கப்போகிறார்கள்? எனவே அவர்கள் வேறொரு மிருகத்தின் முத்திரையைத் தரித்துக் கொள்கின்றனர்-மிருகத்துக்கு ஒரு சொரூபம். 219 மிருகத்துக்கு ஒரு சொரூபம் உண்டாக்கப்பட்டதாக வேதம் கூறுகிறது என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அமெரிக்க ஐக்கிய நாடுகளின் எண் எப்பொழுதுமே பதின்மூன்றாக இருந்து வந்துள்ளது. அது பதின்மூன்று நாடுகளுடன் தொடங்கினது. பதின் மூன்று குடியிருப்புகள்,பதின்மூன்று நட்சத்திரங்கள், பதின்மூன்று கோடுகள்; பதின்மூன்று என்னும் எண் எப்பொழுதுமே ஒரு ஸ்திரீ. அவள் வெளிப்படுத்தல் பதின்மூன்றாம் அதிகாரத்தில் தோன்றுகிறாள். அது முதலில் ஆட்டுக்குட்டியாக இருந்தது. சாந்தகுணம், பேச்சுரிமை, வழிபாட்டின் உரிமை போன்றவை. அதன் பிறகு அது வல்லமையைப்பெற்று, அதற்கு முன்பிருந்து வலுசர்ப்பத்தின் வல்லமையுடன் பேசினது. அது என்ன? அந்த வலுசர்ப்பம் என்ன? ரோமாபுரி. பாருங்கள், அது மிருகத்தின் சொரூபமாக முத்திரையைப் பெற்று உண்மையான தேவ னுடைய சபைக்கு எதிராக எழும்பினது. ஸ்தாபனங்கள் ஒன்று சேர்ந்து இப்படி துன்புறுத்தும், ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யத் தொடங்கும் போது தமது பக்கத்தில் எப்பொழுதும் இருக்க ஆட்டுக்குட்டியானவர் மணவாட்டியைக் கொண்டு செல்வார் வானத்தின் சேனைகள் அனைத்தும் ஒன்றுகூடும் ஓ, அது மகிமையுள்ள காட்சியாயிருக்கும் எல்லா பரிசுத்தவான்களும் அழுக்கற்ற வெண்மையுடன் இயேசுவுடன் நித்திய காலமாய் விருந்துண்பார்கள் (ஆமென்!) ''வந்து புசியுங்கள்'' என்று எஜமான் அழைக்கிறார் ''வந்து புசியுங்கள்''... (ஆமென்!) நாம் எந்த நாளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? எந்த நேரத்தில்? ஜனங்களே, ஓடுங்கள், உங்கள் ஜீவன் தப்ப ஓடுங்கள். 220 முடிக்கப்போகும் இந்நேரத்தில் கவனியுங்கள். ஏழாம் தாதனின் ஊழியத்தைப் போன்ற ஒரு ஊழியம், இந்த இரண்டு சாட்சிகளும் ஏழாம் எக்காளத்தின் கீழ்- ஆறாம் எக்காளத்தின் கீழ், ஏழாம் எக்காளத்துக்கு சற்று முன்பு. 221 இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள், இந்த மகத்தான எக்காளத்தைக் குறித்து உங்களிடம் பேசுவேன் என்று நான் கூறினேன்... அவர் என்ன செய்யப் போவதாக ஏசாயாவில் கூறியுள்ளார்? அந்த மகத்தான எக்காளம் முழங்கும் போது (மகத்தான எக்காளம், எக்காளங்கள் அல்ல, எக்காளங்களின் பண்டிகை, எக்காளங்களை ஊத இருவர் உள்ளனர்மோசேயும் எலியாவும்); ஆனால் மகத்தான எக்காளத்தின் கீழ் (கர்த்தருடைய வருகை, யோசேப்பு திரும்பி வருவதை அறிவித்தல், பாருங்கள்?) எல்லா தேசத்துக் குடிகளும் எருசலேமில் ஒன்று கூடுவார்கள். ஆமென்! அதை நீங்கள் ஏசாயா புத்தகத்தில் காணலாம். சற்று முன்பு அதை உங்களிடம் கூறினேன்- நாம் படித்த அதிகாரங்களில் ஒன்று அது ஏசாயா 18:1 லிருந்து 3. 222 ஏசாயா 27: 12, 13ல் தான் அவர் எக்காளத்தை ஊதுகிறார். அப்பொழுது இஸ்ரவேல் தன் சொந்த நாட்டில் உள்ளதென்றும் தேவன் அவளுடன் இருக்கிறார் என்பதையும் எல்லா தேசங்களும் அறிந்து கொள்ளும். அப்பொழுது மணவாட்டி மணவாளனுடன் கூட இருக்க வருவாள், மணவாளனும் மணவாட்டியும் (அதன் பிறரு அந்த மகத்தான ஆயிரம் வருட அரசாட்சி. முழு உலகமும் அணுசக்தியினால் அழிக்கப்பட்ட பின்பு, புதிய வானமும் புதிய பூமியும் இருக்கும்) என்றென்றைக்கும் வாழுவார்கள். 223 இப்பொழுது கவனியுங்கள்! மோசே, எலியா இவர்களின் ஊழியம்... எல்லோருக்கும் புரிந்து விட்டதா? இதை நான் மறு படியும் கூறுகிறேன். ஆறாம், ஏழாம் எக்காளங்களின் நடுவில் மோசே, எலியா இவர்களின் ஊழியம்; அவர்கள் இரண்டு தீர்க்க தரிசிகள்... அவர்கள்... இஸ்ரவேலர் எப்பொழுதுமே தங்கள் தீர்க்கதரிசிகளை விசுவாசித்தனர். 224 (அவர் தேவனுடைய குமாரன் என்று இஸ்ரவேலருக்ரூ காண் பிக்க நினைத்து அங்கு நான் செல்ல எத்தனித்திருந்த சமயத்தில்) பரிசுத்த ஆவியானவர் ஏன் என்னிடம் “இப்பொழுது வேண்டாம்'' என்று கூறினார்? ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்தியாவுக்கு போகும் வழியில், உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? அவர், “ அதை செய்யாதே'' என்று கூறினார். 225 நான் கூறினேன்..... ''இவர் மேசியாவாயிருந்தால், அவர் தீர்க்கதரிசியின் அடையாளத்தை செய்வதை நாங்கள் காணட்டும்; நாங்கள் தீர்க்கதரிசியை விசுவாசிக்கிறோம்'' என்று அவர்கள் கூறினர். 226 சகோ. லேவி பெட்ரூஸும் மற்றவர்களும், ஈரானிலிருந்தும் மற்ற நாடுகளுனிருந்தும் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பி ஒரு தேசமாக ஆன அந்த யூதர்களுக்கு வேதாகமத்தை விநியோகம் செய்ய லட்சக்கணக்கான பிரதிகளை எனக்கு அனுப்பித்தந்தனர். 227 "இதுவே என் நேரம்'' என்று நான் எண்ணினேன். நான் ஏற்கனவே எகிப்தின் தலைநகரான கெய்ரோவிலிருந்தேன். ஆனால் அவரோ, " இப்பொழுது செய்யாதே, அதற்கு இன்னும் நேரம் வரளில்லை'' என்றார். நான் வீடு திரும்பினேன். 228 ஓ, என்னே! மோசேயும் எலியாவும் அவர்களை அழைக்க வேண்டும். பெந்தெகொஸ்தே யூபிலி இன்னும் நடந்து கொண்டி ருக்கிறது. அது அந்த நேரம் வரைக்கும் இருக்கும். பாருங்கள்? இப்பொழுது எக்காளங்களின் பண்டிகை அறியப்பட வேண்டும். மல்கியா 4ல் கூறப்பட்டுள்ள தற்கும் அதற்கும் சம்பந்தமேயில்லை. இல்லவே இல்லை. இல்லவே இல்லை. 229 கவனியுங்கள்! இங்கு கவனியுங்கள்! அது மோசேயின் ஊழியமும் எலியாவின் ஊழியமுமாக அமைந்திருந்து, தண்ணீரை இரத்தமாக மாற்றி, இஸ்ரவேலரை யூத பாரம்பரியங்களி லிருந்து வெளியே அழைக்கும் (கவனியுங்கள்!) - அவர்கள் கலந் துள்ள யூத பாரம்பரியங்களிலிருந்து (அவர்கள் தீர்க்கதரிசிகளா யிருப்பதால், அவர்கள் அவர்களை விசுவாசிப்பார்கள்). இவர்கள் அவர்களை பாவ நிவிர்த்தி பண்டிகைக்கு (கிறிஸ்து) அழைத்து, கிறிஸ்துவை கண்டு கொள்ளும்படி செய்வார்கள். அவர்கள், 'அவர் வருகிறார், அவர் இங்கிருப்பார்'' என்பார்கள். யூதர்கள் ஒன்று கூடுவார்கள், காரியங்கள் இப்படியாக சம்பவிக்கும், பின்பு அவர் வரும்போது, “இதோ நான்'' என்பார். பாருங்கள்? "இந்த வடுக்கள் உமக்கு எங்கிருந்து கிடைத்தது?'' “என் சிநேகிதரின் வீட்டில்.'' 230 அந்த இரண்டு தீர்க்கதரிசிகளும் செய்த அதே அற்புதங்கள்.... புறஜாதி மணவாட்டி எலியா என்னும் ஒரு தீர்க்கதரிசியைப் பெறவேண்டும். அவன் அவளை அவர்களுடைய பாரம்பரியங்களி லிருந்து வெளியே அழைக்கவேண்டும் - அந்த இரண்டு தீர்க்கதரிசிகளும் யூதர்களை யூத மார்க்கத்திலிருந்து பாவ நிவாரண மாகிய கிறிஸ்துவிடம் அழைப்பது போல், புறஜாதிகள் ஏற்கனவே இந்த பாவநிவாரணத்தை அறிந்துள்ளனர், ஆனால் இந்த ஏழு ஒய்வு நாட்களாக அவர்கள் அதனின்று அகன்று சென்று விட்டதால், முடிவு காலத்தில் அவர்களை மூல பாவ நிவாரணத்துக்கு திரும்ப அழைக்க வேண்டும். 231 ஏழு (கவனியுங்கள்!), ஏழு சபை தூதர்கள், ஏழு எக்காளத் தூதர்கள் அனைவருமே தீர்க்க தரிசிகள். அது உண்மை ! நுழைக் கப்பட்டது 144000 பேர். முத்திரைகளைத் திறந்து அழைப்பது புறஜாதிகளுக்கே... அது புறஜாதிகளுக்கே இருக்க வேண்டும்; அவர்களுக்காக திறந்து, புறஜாதி சபை உருவாகுவதைக் காண்பது. அவ்வளவு தான் நமக்குத் தெரியும்; அதை தான் நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம்; ஏற்கனவே நிகழ்ந்தவை. நாம் இயேசுவை எதிர்நோக்கியிருக்கிறோம். 232 நீங்கள், ''சகோ. பிரான்ஹாமே, ஒரு நிமிடம் பொறுங்கள், அவர்கள் இதை செய்யப்போகிறார்கள் என்று கருதுகிறேன்" என்கிறீர்கள். 233 ஆபிரகாம் கண்ட கடைசி அடையாளம் (நாம் ஆபிரகாமின் ராஜரீக சந்ததி, மணவாட்டி); வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரன் வருவதற்கு முன்பாக ஆபிரகாம் கண்ட கடைசி தரி சனம் எது? தேவன் மனித ரூபத்தில், ஜனங்களின் சிந்தனைகளை அறிந்து கொள்ள முடிதல் - ஒரு மனிதன், ஒரு டஜன் பேர்கள் அல்ல, ஒரு மனிதன், போலிகள் எத்தனை இருந்த போதிலும், அவர்கள் ஒருவரைப் பெற்றிருந்தனர். அவர் அங்கிருந்தவர்களின் சிந்சனைகளைப் பகுத்தறிந்தார். என்ன? அடுத்தபடியாக நடந்தது. ஆபிரகாமும் சாராளும் வாலிபனாகவும் வாலிபப் பெண்ணாகவும் மாறினர். அது நமக்குத் தெரியும். 234 அது உங்களை சற்று திணறச் செய்கிறதென்று நானறிவேன்! ஆனால் இதை நிச்சயமாக அறிந்து கொள்ள கவனமாயிருங்கள். நீங்கள் வேதத்தை இப்படி படிக்கக் கூடாது. நீங்கள் ஆழ்ந்து படித்து உள்ளான அர்த்தத்தை அறிந்து, அதன் காட்சியை உருவாக்க வேண்டும். 235 கவனியுங்கள்! சாராள் வயது சென்றவளாயிருந்தாள். அவளுடைய கரிப்பம் செத்து போனதாக வேதம் கூறுகிறது. அது சரியா? ஆபிரகாமுக்குள்ளிருந்த வித்தும் செத்திருந்தது. அது சரியா? ஆபிரகாமுக்குள்ளிருந்த வித்து செத்திருந்தது என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். ஆனால் நாற்பது ஆண்டுகளுக்கு பிறகு, அவன் வேறொரு ஸ்திரீயின் மூலம் ஏழு குமாரர்களைப் பெற்றான். அவர் என்ன செய்தார்? அவர்களுடைய சரீரங்களை மாற்றி னார். 236 கவனியுங்கள். அவர்கள் முன்னூறு மைல் பிரயாணம் செய்து கேராரை அடைந்தனர்; முதிர்ந்த வயதுடைய ஒருவனுக்கு அது மிகவும் நீண்ட பயணம். அவர்களுக்கு உடலுறவு இருக்க முடியாதென்று சாராள் எண்ணினாள். அவள், “நானா...'' என் நாள் (ஒருக்கால் இருபது அல்லது அதற்கதிக ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் உடலுறவு கொண்டிருந்திருப்பார்கள்). அவள், நான் கிழவியும், என் ஆண்டவன் முதிர்ந்த வயதுள்ளவருமான பின்பு, வாலிபரைப் போல எனக்கு இன்பம் உண்டாயிருக்குமோ ?'' என்ன்ள் . அவர், “கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ ?'' என்றார். 237 கவனியுங்கள், என்ன நடந்தது? அவள் உடனே அழகிய வாலிபப் பெண்ணாக மாறினாள். வாக்குத்தத்தம் பண்ணப்பட் டுள்ள குமாரனைப் பெற்றுக்கொள்ள அவர் ஆபிரகாமின் ராஜரீக சந்ததிக்கு என்ன செய்யப் போகிறார் என்பதை அதன் மூலம் சித்தரித்துக் காண்பித்தார். அவள் வாலிபப்பெண்ணாக மாறினாள்... கவனியுங்கள்! அவர்கள் கேராருக்கு சென்றபோது என்ன நடந்தது? அபிமெலேக்கு ராஜா அவள் மேல் அன்பு கொண்டு, “அவள் அழகாயிருக்கிறாள்'' என்று சொல்லி, அவளை விவாகம் செய்து கொள்ளப்போனான் (அது சரியா?)- அங்கு அநேக அழகுள்ள பெண்கள் இருந்த போது, இந்த வயோதிப பாட்டியை. '' அவள் அழகாயிருக்கிறாள், காண்பதற்கு அவள் சிகப்பாயிருக்கிறாள்.'' பாருங்கள்? 238 தேவன் அவள் சரீரத்தை மாற்றினார், அவர்கள் இருவரின் சரீரங்களையும் மாற்றினார். இது இந்நாளில் மனுஷகுமாரனால் (பாருங்கள்?) சாயங்கால செய்தியில் வெளிப்பட வேண்டிய இரகசியம். பாருங்கள்? மாற்றினார்...... அவர்கள் கண்ட கடைசி அடையாளம் என்ன? அவர்களுடைய சரீரங்களில் மாறுதல் ஏற்படுவதற்கு முன்பு, சிந்தனைகளைப் பகுத்தறிதலை. நாம் குமாரனை ஏற்றுக் கொள்வதற்கு முன்பு என்ன நிகழும்? ''தேவ எக்காளம் தொனிக்கும். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள் (புது சரீரத்துடன்). பின்பு உயிரோடிருக்கும் நாமும் ஒரு இமைப்பொழுதிலே மறுரூபமாகி (அல்லேலூயா!), கர்த்தருக்கு எதிர்கொண்டு போக. மேகங்கள் மேல் அவர்களோடே கூட ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்படுவோம்.'' இரகசியமானது வெளிப்படையாகிவிட்டது; முத்திரைகள் திறக்கப்பட்டு விட்டன; இஸ்ரவேலருக்கு எக்காளம் முழங்கி விட்டது; அவர்களுடைய இரண்டு தீர்க்கதரிசிகளும் தோன்றுவதற்கு ஆயத்தமாயுள்ளனர். அது என்ன? அவர்கள் தோன்றுவதற்காக, சபையானது காட்சியிலிருந்து இப்பொழுது விலக வேண்டும். அவர் ஒரே நேரத்தில் இருவருடன் தொடர்பு கொள்வதில்லை. அவர் அப்படி செய்ததேயில்லை. பாருங்கள்? 239 ஓ, சகோதரனே! கவனி! அவர்களை ஸ்தாபனங்களினின்றும் பாரம்பரியங்களினின்றும் வெளியே அழைக்க... பெந்தெகொஸ்தே காலத்தின் சபை முடிந்து விட்டதை 'நாம் காண்கிறோம். மணவாட்டி மேலே செல்வதற்காக வழி விலக வேண்டும். அப்பொழுது தேவனுடைய இரண்டு ஊழியச்காரர் கள்- வெளிப்படுத்தலில் கூறப்பட்டுள்ள அந்த இரண்டு தீர்க்க தரிசிகள் தோன்றி, ஏழாம் எக்காளத்தை ஊதி, கிறிஸ்துவை அவர்களுக்குத் தெரியப்படுத்துவார்கள். 240 ஏழாம் தூதன், ''இதோ உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி'' என்கிறான் - "இதோ மெதோடிஸ்டு, இதோ பாப்டிஸ்டு, இதோ பெந்தெகொஸ்தே யினர்'' என்று அவன் கூறுவதில்லை. “இதோ வார்த்தை , தேவனுடைய குமாரன் உலகத்தின் பாவங்களைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி". அதைத் தவிர வேறு அஸ்திபாரமே கிடை யாது. “இன்னும் எவ்வளவு காலம் உள்ளது?'' என்று அவர்கள் கேட்கின்றனர், யூதர்கள் தங்கள் சொந்த நாட்டில் உள்ளனர், மணவாட்டி அழைக்கப்பட்டு விட்டாள். வேதப் பிரகாரமாக, அவர் வாக்குத்தத்தம் பண்ணின அனைத்தும் அப்படியே நிறைவேறி, வருகின்றது. நாம் ஆய்த்தமாயிருக் கிறோம். அந்த நேரம் இங்குள்ளது. நாடுகள் உடைகின்றன; இஸ்ரவேல் விழித்தெழும்புகிறாள். இவை வேதாகமம் முன்னுரைத்த அடையாளங்களாம் புறஜாதிகளின் நாட்கள் எண்ணப்பட்டுள்ளன பயம் எங்கும் சூழ்ந்துள்ளது ஓ, சிதறப்பட்டவர்களே, உங்கள் சொந்தத்துக்கு திரும்புங்கள் மீட்கப்படும் நாள் சமீபமாயுள்ளது மனிதரின் இருதயங்கள் பயத்தினால் சோர்ந்து . போகின்றன தேவனுடைய ஆவியினால் நிறையப்பட்டு உங்கள் தீவட்டிகளை சுத்தப்படுத்துங்கள் மேலே நோக்குங்கள், உங்கள் மீட்பு சமீபமாயுள்ளது. கள்ளத் தீர்க்கதரிசிகள் பொய்யுரைக்கின்றனர் கிறிஸ்துவாகிய இயேசுவே நமது தேவன் - என்னும் தேவனுடைய சத்தியத்தை மறுதலிக்கின்றனர் (அது உண்மை !) ஆனால் நாமோ அப்போஸ்தலர்கள் நடந்த பாதையில் நடப்போம்.. மீட்கப்படும் நாள் சமீபமாயுள்ளது, மனிதரின் இருதயங்கள் பயத்தினால் சோர்ந்து போகின்றன தேவனுடைய ஆவியினால் நிறையப்பட்டு உங்கள் தீவட்டிகளை சுத்தப்படுத்துங்கள் மேலே நோக்குங்கள், உங்கள் மீட்பு சமீபமாயுள்ளது.  241 சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும் என்று தீர்க்கதரிசி கூறியுள்ளான். சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும் மகிமையின் பாதையை நீ நிச்சயம் கண்டு கொள்வாய் தண்ணீரின் வழியிலே இன்றைய வெளிச்சம் உள்ளது வாலி ரே, வயோ திபரே, உங்கள் பாவங்களுக்காக மனந்திரும்பி விலையுயர்ந்த இயேசுவின் நாமத்தினால் அடக்கம் பண்ணப்படுங்கள் பரிசுத்த ஆவி நிச்சயம் உள்ளே நுழைவார். சாயங்கால வெளிச்சம் வந்து விட்டது தேவனும் கிறிஸ்துவும் ஒருவரே என்பது சத்தியம். நாம் 'இங்கு அடைந்து விட்டோம்! நாம் முடிவில் இருக்கிறோம்! இது ஏதோ மனிதனின் மூடத்தனமான காரியம் அல்ல, இது கர்த்தர் உரைக்கிறதாவது! 242 நாம் தலைவணங்குவோம். இரக்கமுள்ள தேவனே, யேகோவாவே, சர்வ வல்லமையுள்ள தேவனே, சீனாய் மலையின் மேல் நீர் முழங்கின போது ஜனங்கள், “நாங்கள் சாகாதபடிக்கு மோசே எங்களிடம் பேசட்டும், தேவன் பேச வேண்டாம்" என்று கூக்குரலிட்டனர். மகத்தான யேகோவாவாகிய நீர்.  நான் அவர்களுக்காக ஒரு தீர்க்கதரிசியை எழும்பப் பண்ணு வேன். இனிமேல் இப்படி அவர்களுடன் பேசமாட்டேன்'' என்றுரைத்தீர். நீர் என்ன செய்யப் போவதாக வாக்களித்தீரோ, அதை நிறைவேற்றினீர். எங்களுக்காக கர்த்தராகிய இயேசுவை எழுப்பினீர். அவரே வார்த்தை ; அவர் வார்த்தையென்று நீர். கூறினீர். ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது. அந்த வார்த்தை தேவனாயிருந்தது.  அந்த வார்த்தை மாம்சமாகி.... நமக்குள்ளே வாசம்பண்ணினார். 243 பத்மு தீவில் அவர் தமது தீர்க்கதரிசியாகிய யோவானின் மூலம் முன்னுரைத்தவை ஒரு எழுத்தும் பிசகாமல் அப்படியே நிறைவேறுவதைக் காண்கிறோம், பரிசுத்த ஆவி எங்கள் மத்தியில் பூமியில் இங்கு வெளிப்பட்டதை நாங்கள் காண்கிறோம். வார்த்தையாகிய அவரை ஸ்தாபனங்கள் வெளியே தள்ளி விட்டதை நாங்கள் காண்கிறோம். அவர்களுக்கு ஜனங்களுக்கு விரோதமாக ஒன்றுமில்லை, அவர்கள் வார்த்தையை வெறுக்கின்றனர். அந்த வார்த்தை அவர்களுடைய பாரம்பரியங்களுக்கு விரோதமாயுள்ளது. நீர் இந்த பூமியில் இருந்தபோது. நீர் வார்த்தையாயிருந்தீர், நீர் அவர்களுடைய பாரம்பரியங்களுக்கு விரோதமா யிருநதது போல. அவர்கள் உம்மை அவர்களுடைய சபைகளி லிருந்து வெளியே தள்ளினார்கள். 244 இப்பொழுது. ஆண்டவரே, எங்கும் ஒத்துழைப்பே இல்லை. தென் ஆப்பிரிக்காவில் இன்னும் சில ஆத்துமாக்கள் காத்திருக்கின்றன என்று அறிந்தவனாய் அங்கு செல்ல முயல்கிறேன், ஆண்டவரே, எல்லாவிடங்களிலும் அவர்கள் என்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது போல் தோன்றுகிறது. என் நிமித்தம் அல்ல, கர்த்தாவே, இந்த செய்தியின் நிமித்தம். ஆனால் அப்படி நடக்கும் என்று நீர் கூறியுள்ளீர். நாங்கள் சோர்வடையக் கூடாது என்பதற்காக எங்களுக்கு அதை நீர் அறிவித்துள்ளீர். நாங்கள் வாழும் நேரத்தை அறிந்திருக்கிறோம். 245 தேவனே, இன்று காலை இந்த ஜனங்கள் உஷ்ணமான, பொறித்தெடுக்கும் அறையில் இங்கு அமர்ந்துள்ளனர். அவர்கள் கூர்ந்து கவனித்தனர்; அவர்கள் புரிந்து கொண்டார்கள் என்று நிச்சயமுடையவனாயிருக்கிறேன். அப்படி அவர்கள் புரிந்து கொள்ளவில்லையென்றால், அந்த எக்காளங்களைக் குறித்து பேச என்னை ஏன் அனுமதிக்கவில்லையென்பதை அவர்களுக்கு வெளிப்படுத்துத் தாரும். அதற்கும் நமக்கும் சம்பந்தமில்லையென்று காண்கிறேன். ஆறாம் எக்காளத்தின் கீழ் எல்லாம் நடந்தன. ஆறாம் முத்திரை திறக்கப்பட்டதை நாங்கள் கண்டோம். இரண்டு வாரங்களுக்கு முன்பு மணவாட்டியின் முன் காட்சியையும் (Preview) சபையின் முன் காட்சியையும் நான் தரிசனம் கண்டு அதை இங்கு அறிவித்தேன். கர்த்தாவே, நீர் எனக்கு காண்பித்த விதமாகவே நான் எடுத்துக் கூறினேன், இதோ நாங்கள் இங்கு அடைந்துள்ளோம். நாங்கள் நினைத்ததைக் காட்டிலும் காலதாமதமாகியிருக்கக் கூடும். 246 ஓ, பிதாவே, இன்று காலை இங்கு யாராகிலும் மூடநம்பிக்கைகளும், வேத சாஸ்திர கருத்துக்களையும், யாரோ ஒரு வேதபண்டி தரின் வார்த்தையையும் கொண்டிருந்து. (அது தேவனுடைய வார்த்தைக்கு முரணானது), உண்மையான கிறிஸ்துவை, உண்மையான பரிசுத்த ஆவியை அறியாதிருப்பாரானால்; அவர்களுக்கு வார்த்தை இன்னும் வெளிப்படவில்லை- இந்நாளில் வார்த்தை எவ்வாறு இருக்க வேண்டுமென்று. அவர்கள் பாரம் பரியத்தை மாத்திரமே காண்கின்றனர். அவர்களைக் குருடாக்கும் ஒளியில் அவர்கள் வாழ்கின்றனர். உலகத்தில் நடைபெற்ற மிகப்பெரிய வழிப்பறிக் கொள்ளை (robbery) இங்கிலாந்தில் நடந்தது. அது பொய்யான வெளிச்சத்தைக் கொண்டு நடத்தப்பட்டது. அது போன்ற உமது சபையில் நேர்ந்த மிகப் பெரிய வழிப்பறிக் கொள்ளையானது, அவர்கள் உண்மையான வேத ஒளியாகிய கிறிஸ்துவை ஏற்க மறுத்து, ஸ்தாபன ஒளியை ஏற்றுக் கொண்டதனால் நடந்தது. 247 ஓ, தேவனே, இரக்கமாயிரும். இழந்து போனவர்களை இரட்சியும், கர்த்தாவே, தயவு கூர்ந்து, இன்னும் சிறிது நேரத் துக்காக நான் கேட்கிறேன். இயேசுவே. எங்களுக்கு அருமையானவர்கள் இருக்கின்றனர். இன்னும் சிறிது காலம், வெகுவிரைவில் அந்த மகத்தான கன்மலை மலையிலிருந்து பெயர்க்கப்படும். கர்த்தாவே, இதை அருளும். இன்று காலை இங்கு யாராகிலும் உம்மையன்றி இருப்பார்களானால், அவர்கள் இனிமையாக வந்து உம்மை ஏற்றுக்கொள்வார்களாக. நமது தலைகள் வணங்கியிருக்கும் இந்நேரத்தில், நீங்கள் கைகளையுயர்த்தி, ''சகோ. பிரான்ஹாமே, என்னை நினைவு கூரும்'" என்று சொல்லுங்கள். பீடங்கன் ஜனங்களால் நிறைந் துள்ளன. தேவன் உன்னை ஆசிர்வதிப்பாராக! ''என்னை நினைவு கூரும்'' என்று சொல்லுங்கள்... தேவன் உன்னை ஆசிர்வதிப்பாராக! தேவன் உன்னை ஆசிர்வதிப்பாராக! தேவன் உன்னை ஆசிர்வதிப்பாராக! நூற்றுக்கணக்கான கரங்கள் உயர்த்தப்பட் டுள்ளன. 248 பிதாவாகிய தேவனே, எங்கோ ஒரு சிறு நிழல் உள்ளது. கர்த்தாவே, அதை எடுத்துப்போடும். அவர்கள் இந்த அறையில் உட்கார்ந்திருக்கின்றனர். கடந்த காலங்களில், சாத்தான் அவர் களுடைய கண்களைக் குருடாக்கியிருக்கக் கூடும். ஆனால் அநேக நாட்களுக்கு முன்பு நீர் எங்களுக்குச் செய்தது போல, அதை காணாதவர் போல் இருக்கும்படி வேண்டிக்கொள்கிறேன். இப்பொழுது நாங்கள் அனைவரும் பார்வையடையும்படி எங்களை அழைக்கிறீர்.... அவர்கள் குருடாயிருப்பதை அறியாமலிருக்கிறார்கள் என்று வேதம் கூறுகின்றது. ''என் கண்களுக்குக் கலிக்கம் போட வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன்' என்று நீர் கூறியுள்ளீர், தேவனே, இன்று காலை அந்த கலிக் கத்தை அவர்கள் கண்களில் உபயோகித்து, அவர்கள் பார்வையடையும்படி செய்யும். அது எளிய மக்கள் கொண்ட கூட்டத்தில் எளிமையாக அமைந்திருக்கும் - அவர்கள் எளியவர்கள், படிப்பில் லாதவர்கள். ஆயினும் அப்படித்தான் துவக்கத்தில் இருந்தது கர்த்தாவே, இப்பொழுதே அவர்கள் அதை பெற்றுக்கொள்ள அருள் புரியும். அவர்களை உம்மிடம் உமது குமாரனாகிய இயேசு வின் நாமத்தில் சமர்ப்பிக்கிறேன். 249 "என் வசனத்தைக் கேட்டு (அவர்கள் அதைக் கேட்டிருக்கிறார்கள் என்று என் அறிவுக்கு எட்டின வரையில் நான் உறுதி கொண்டிருக்கிறேன்), என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிற வனுக்கு (பாவனை விசுவாசம் அல்ல, உண்மையாக விசுவாசித்தல்; வார்த்தை என்ன கூறுகிறதோ அதை விசுவாசிக்கிறவனுக்கு) நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்'' யோவான் 5: 24. 250 கர்த்தாவே, அவர்கள் இந்த நேரம் முதற்கொண்டு உம்முடையவர்களாயிருக்க அருள் வீராக. அவர்களுடைய மனதில் சந்தேகம் எழுந்திருந்தால், அதை எடுத்துப்போடும். எங்கள் மத்தியில் வியாதியுள்ளவர் இருந்தால், மகத்தான பரிசுத்த ஆவியானவர் தாமே (அவர் இங்கு மேடையில் பிரசன்னராயிருந்து, சிந்தனைகளைப் பகுத்தறிகிறார் என்று நானறிவேன்)..... அவர்களுக்கு அதைக் குறித்தெல்லாம் தெரியும். கர்த்தாவே, அவர்களை சுகமாக்கும்படி வேண்டிக்கொள்கிறேன். அவர்களுடைய கேள்விகளையெல்லாம் தீர்த்து வையும். 251 இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் முழுக்கப்பட்டு, மணவாளனின் நாமத்தை தரித்திராதவருக்கு, குளம் திறந்திருக்கும். அவர்சுளுக்கு ஸ்தாபன சம்பந்தமான, மார்க்க சம்பந்தமான முறைமை உண்டு... யாருமே பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்னும் பட்டங்களினால் : ஞானஸ்நானம் பெறவில்லை, அல்லது தெளிக்கப்படவில்லை. இக்காலத்து சபைகளைச் சார்ந்துள்ள. இந்த பாரம்பரியமான முறைமைகள் அந்திக்கிறிஸ்துவின் இயக்க மாகும், மிருகத்தின் சொரூபம். கத்தோலிக்க சபை நிறுவப்படும் வரை யாருமே பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறவில்லை. வேதமும் அதைத் தொடர்ந்த வரலாறும், அவர்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றதாக உரைக்கின்றன. 252 ''வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனும் கூட வேறொரு சுவிசேஷத்தைப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக் கக் கடவன்” என்று பவுல் கலாத்தியர் 1; 8ல் உரைத்திருக்கிறான். இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்த யோவான் ஸ்நானனிடம் ஞானஸ்நானம் பெற்றிருந்த ஜனங்களை, அவர்கள் மறுபடியும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெறவேண்டு மென்று நீர் அப்போஸ்தலர் 19ல் கட்டளையிட்டீர். " ஒரு தூதனும் கூட வேறொன்றையும் உங்களிடம் கூறாதிருப்பானாக'' என்று பவுல் கூறினான். 253 கடைசி நாட்களில் ஒரு செய்தியாளன் வந்து ஜனங்களை முதற்பலனுக்கு, மூல விசுவாசத்துக்கு வழி நடத்துவான். எங்கள் மத்தியிலுள்ள மகத்தான செய்தியாளர், மகத்தான கிறிஸ்து, பரிசுத்த ஆவி தம்மை தெளிவுபடுத்தி, வார்த்தையைத்திறந்து கொடுத்து, அதை எங்களுக்கு வெளிப்படுத்தித்தருகிறார். அவர் தாமே எங்களை மூல பெந்தெகொஸ்தே விசுவாசத்துக்கு வழி நடத்தும்படி அருள் புரிவீராக. பெந்தெகொஸ்தே நாளன்று பேதுரு: “நீங்கள் ஒவ்வொருவரும் மனந்திரும்பி பாவமன்னிப்புக் கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்' என்று கூறினான். நிசாயாவில் ரோம சபை நிறுவப்படும் வரைக்கும் அது அவ்வாறே ஒவ்வொரு நபருக்கும் இருந்து வந்தது. 254 தேவனே, இப்பொழுது இரக்கமாயிரும். குளம் ஆயத்தமாயிருக்கும், இருதயங்கள் திறந்துள்ளன; கர்த்தராகிய இயேசுவே, உள்ளே வாரும். நாங்கள் கடைசி மணி நேரத்தில் இருக்கிறோம். இந்த நேரத்தில் அவர்கள் உள்ளே வருவது சாத்தியமானால்அது சாத்தியம் என்று நான் நம்புகிறேன். கர்த்தாவே, உள்ளே இருக்கும் நாங்கள் அவருடைய வார்த்தையின் மூலம் பேசும் தேவனுடைய சத்தத்தை கேட்டும் கண்டும் இருக்கிறோம் என்று அறிந்தவர்களாய், எந்த மணி நேரத்தில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை கணக்கெடுத்துப்பார்ப்போமாக. பிதாவே, இதை அருள்வீராக. அவருடைய குமாரனின் நாமத்தினாலே இவர்களை உம்மிடம் சமர்ப்பிக்கிறோம். நமது தலைகளை வணங்குவோம். 255 மிருதுவாகவும் உருக்கமாகவும் இயேசு அழைக்கிறார் உன்னையும் என்னையும் வரும்படி அழைக்கிறார் அவர் வாசலில் காத்திருப்பதைப் பார்..... 24